குலசாமி பேரு ஆப்பிள்னு சொல்லுவாங்க போல! "அவதாரம் எடுத்து மனிதர்களை காப்பாற்றும் Apple" விஷயத்த பாருங்க!

|

Appleக்கு என்று ஒரு தனி மதிப்பு இருக்கிறது. என்னதான் விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்தினாலும் ஐபோனுக்கு இருக்கும் மவுசே தனி. ஒவ்வொரு வருடமும் அறிமுகமாகும் ஐபோன்களில் தனித்துவ அம்சங்களை அறிமுகம் செய்வது ஆப்பிள் வழக்கம். அதன்படி தற்போது அறிமுகமாகியுள்ள ஆப்பிள் ஐபோன் 14 இல் கொண்டு வரப்பட்ட அம்சம் தான் சாட்டிலைட் இணைப்பு ஆதரவு ஆகும். இந்த அம்சத்தின் பயன் என்ன என்பதை ஒருவர் பயன்படுத்தி தெரிவித்திருக்கிறார்.

SOS ஆதரவு

SOS ஆதரவு

ஆப்பிள் சமீபத்தில் iOS 16.1 ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் செயற்கைக்கோள் மூலமாக மேற்கொள்ளும் SOS ஆதரவை கொண்டு வந்தது. செல்லுலார் நெட்வொர்க் மற்றும் வைஃபை அணுகல் என எதுவும் இல்லாத போது செயற்கைக்கோள் இணைப்பை பயன்படுத்தி அவசர கால சேவைகளை தொடர்பு கொள்ளலாம். ஐபோன் 14 மாடல்களில் இந்த அம்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இதை பயன்படுத்தி தான் ஆபத்தான நிலையில் சிக்கிய ஒருவர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்.

பனி நிறைந்த இடத்தில் சிக்கிய நபர்

பனி நிறைந்த இடத்தில் சிக்கிய நபர்

இதுகுறித்து MacRumours வெளியிட்டுள்ள தகவலை பார்க்கலாம். அலாஸ்கா எனும் பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இது முற்றிலும் பனி நிறைந்த பகுதி ஆகும். அலாஸ்கா பகுதியில் ஒரு பனி இயந்திரத்தில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் கடுமையான சிக்கலில் சிக்கி இருக்கிறார்.

ஆப்பிள் தொடங்கிய லீலை

ஆப்பிள் தொடங்கிய லீலை

இடம் முழுவதும் பனி நிறைந்து தனது மொபைலிலும் டவர் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்துள்ளார். அந்த நபர் குளிர்ந்த தொலைதூர இடத்தில் இருந்துள்ளார். அதனால் அங்கு இணைய அணுகல் உட்பட எதுவும் கிடைக்கவில்லை. அவரால் அழைப்பும் செய்ய முடியவில்லை. இந்த இடத்தில் தான் ஆப்பிள் தன் லீலையை தொடங்கி இருக்கிறது.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

பனி சூழ்ந்த பகுதியில் நெட்வொர்க் எதுவும் கிடைக்காமல் சிக்கித் தவித்த அந்த நபரின் கையில் ஆப்பிள் ஐபோன் 14 இருந்திருக்கிறது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல். ஆப்பிள் ஐபோன் 14 இல் உள்ள செயற்கைக்கோள் அம்சம் வழியாக அவசரகால SOSஐ அவர் அனுகி இருக்கிறார். அவர் சிக்கிக்கொண்டதை அருகிலுள்ள பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு அவசர கால SOS மூலம் தெரிவுப்படுத்தியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புக்குழு

சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புக்குழு

அந்த நபர் சிக்கித் தவிப்பது குறித்து அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கிடைத்ததும், ஆப்பிள் பகிர்ந்த இடத்திற்கு மீட்புக் குழுக்கள் சென்றிருக்கிறது. இதையடுத்து ஆபத்தான சூழ்நிலையில் இருந்து காயமின்றி அந்த நபர் மீட்கப்பட்டுள்ளார். மீட்பு குழுவினர் ஆரம்பகால எச்சரிக்கையில் இணைக்கப்பட்டுள்ள தகவலின் துல்லியம் மற்றும் முழுமையால் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

செயற்கைக்கோள் இணைப்பு

செயற்கைக்கோள் இணைப்பு

ஆப்பிள் வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்த நபர் சிக்கித் தவித்த பகுதி தொலைவில் இருந்திருக்கிறது. பொதுவாக 62 டிகிரி அட்சரேகை (latitude)க்கு மேல் உள்ள இடங்களில் செயற்கைக்கோள் இணைப்பு திறம்பட செயல்படாது எனவும் ஆனால் கனடா மற்றும் அலாஸ்காவின் வடக்கு பகுதிகளில் 69 டிகிரி வரை இணைப்பு செயல்படுகிறது என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிரத்யேக புது அம்சம்

பிரத்யேக புது அம்சம்

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு புது மாடல் ஐபோனிலும் ஒரு புது அம்சங்களை அறிமுகம் செய்வது வழக்கம். அதன்படி இந்தாண்டு அறிமுகமான ஐபோனில் பிரத்யேக சிறந்த அம்சத்தை அறிமுகம் செய்தது. அது சாட்டிலைட் இணைப்பு அம்சமாகும். இந்த அம்சம் சமீபகாலமாக அனைத்து ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களிலும் இடம்பெறத் தொடங்கி இருக்கிறது. விதை நம்ம போட்டது என்பது போல் இந்த அம்சம் முதன்முதலாக அனைத்து பயனர்களுக்கும் ஆப்பிள் மூலமாக தான் கிடைத்தது. நீங்கள் ஆப்பிள் ஐபோன் 14 வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதன் விலை விவரத்தை அறிந்துக் கொள்ளுங்கள்.

ஐபோன் 14 விலை

ஐபோன் 14 விலை

ஐபோன் 14 அறிமுகமான தினத்தில் இருந்து தற்போது தான் முதன்முறையாக அதன் விலை குறைக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டில் இந்த ஐபோனின் விலை ரூ.2500 குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 14 ஆனது இந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.79,900 என அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.77400 என பட்டியலிடப்பட்டுள்ளது. கூடுதலாக வங்கி சலுகைகளும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Apple's Emergency SOS satellite feature Saves life in Alaska! its not First time

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X