Home
News

இனி ChatGPT எதுக்கு? Gemini எதுக்கு? Apple ஒரே போடு.. புது AKI டீம்.. வருது இன்-ஹவுஸ் AI சாட்பாட்!

ஏகேஐ (AKI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பதில்கள், அறிவு மற்றும் தகவல் (Answers, Knowledge & Information) என்னும் புதிய குழு மூலம் ஆப்பிள் (Apple) நிறுவனமானது, அதன் இன்-ஹைவுஸ் ஏஐ பவர்டு சாட்பாடை (AI Powered Chatbot) உருவாக்க திட்டமிட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஜெமினி (Gemini) மற்றும் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற சாட்பாட் சேவைகளை போல் இதிலும் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சோஷியல் மீடியா ஆப்களுக்கு பிறகு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் யூசர்கள் அதிகமாக பயன்படுத்தும் ஆப்களாக ஏஐ சாட்பாட்கள் (AI Chatbots) உருமாறி வருகின்றன. அதிலும் சாட்ஜிபிடி, ஜெமினி மற்றும் மெட்டா ஏஐ போன்ற சாட்பாட்கள் மிகப்பெரும் டெக் நிறுவனங்களின் தயாரிப்பாக இருப்பதால், அவை எளிதாக ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் யூசர்களையும் சென்று சேருகிறது.

இனி ChatGPT எதுக்கு? Gemini எதுக்கு? Apple ஒரே போடு.. புது AKI டீம்!

இதுபோன்ற ஏஐ சாட்பாட்களின் சேவையானது, இப்போது பிரவுசர்களிலும் கிடைக்க தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே, ஜெமினி ஏஐ பேஸ்டு ஏஐ மோட் (AI Mode) குரோம் பிரவுசரில் வந்துவிட்டது. இதனால், வரும் காலங்களில் தவிர்க்க முடியாதவையாக சாட்பாட்கள் மாற இருக்கின்றன. ஆனால், ஆப்பிள் நிறுவனத்திடம் பிரத்யேக ஏஐ சாட் பாட் இதுவரையில் இல்லை என்பதே உண்மையாகும்.

ஆப்பிள் இன்டலிஜன்ட்ஸ் (Apple Intelligence) மற்றும் சிரி ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (Siri AI Voice Assistant) போன்ற ஏஐ சார்ந்த சேவைகளை கிடைத்தாலும், சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி போல ஏஐ சாட்பாடை அறிமுகம் செய்யப்படவில்லை. இதனாலேயே, ஆப்பிள் யூசர்களிடையே சாட்ஜிபிடி மிகப்பெரும் வரவேற்பு பெற்றுவிட்டது. அமெரிக்காவில் அதிகமாக சாட்ஜிபிடி பயன்படுத்தப்படுகிறது.

இதில் ஆப்பிள் யூசர்களும் அதிகமாகவே இருக்கின்றனர். இதன் காரணமாகவே, ஆப்பின் நிறுவனமானது, புதிய ஏகேஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் பதில்கள், அறிவு மற்றும் தகவல் குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவானது சாட்ஜிபிடி, ஜெமினி போல சாட்-பாடை உருவாக்க இருக்கிறது. இது ஆப்பிள் யூசர்களுக்கு எந்தவொரு மூன்றாம் தர ஆப்களும் இல்லாமல், ஏஐ சேவைகளை கொடுக்க இருக்கிறது.

ஆகவே, இதுவரையில் ஆப்பிள் யூசர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கும் ஓஎஸ், யுஐ போலவே இந்த ஏஐ சாட்பாடும் கிடைக்க இருக்கிறது. ப்ளூம்பெர்க் (Bloomberg) மூலம் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு கூடுதலாகவும் பல்வேறு தகவல்களை ப்ளூம்பெர்க் வெளியிட்டு இருக்கிறது. அதாவது, இந்த ஏகேஐ குழுவானது ராபி வாக்கர் (Robby Walker) தலைமையில் செயல்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இவரது மேற்பார்வையில் ஆப்பிள் நிறுவனத்தின் சிரி வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவை வழங்கப்பட்டது. இப்போது, ஆப்பிள் நிறுவனத்தின் ஏஐ பிரிவில் மூத்த இயக்குநராக இவர் இருக்கிறார். ஆகவே, இவரது குழுவே ஆப்பிள் நிறுவனத்தின் ஏஐ சாட்பாடை உருவாக்குவதில் செயல்பட போவதாக தெரிகிறது. இன்-ஹவுஸ் சாட்பாடாக இருப்பதால், ஆப்பிள் இன்டிகிரேஷன கிடைக்கும்.

அதாவது, ஆப்பிள் யூசர்களுக்கு கிடைக்கும் சிரி வாய்ஸ் அசிஸ்டன்ட், சபாரி பிரவுசர், ஆப்பிள் இன்டலிஜன்ஸ் போன்ற சேவைகளுடன் இன்டிகிரேஷன் செய்யப்பட்டு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. சொல்லப்போனால், இது ஆப்பிள் யூசர்களை ஒட்டுமொத்தமாக தட்டித்தூக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், ஆப்பிள் யூசர்கள் பிரைவசிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இதேபோன்ற பிரைவசியுடன் ஏஐ சாட்பாட் கிடைத்தால், அது அந்த யூசர்களிடையே நல்ல வரவேற்பு பெறும் என்பதை யூகிக்க முடிகிறது. ஜெமினி மற்றும் சாட்ஜிபிடி நாளுக்கு நாள் அசூர வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த சாட்பாட்களை பின்னுக்கு தள்ளி ஆப்பிளின் வர இருக்கும் சாட்பாட் இடம்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Reportedly Forms AKI Team To Develop AI Powered Chatbot Like ChatGPT Gemini
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X