4500 கேம்கள் சீன ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கிய ஆப்பிள்- காரணம் தெரியுமா?

|

ஆப்பிள் நிறுவனம் 4500 கேம்களை சீனாவின் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

4,500 கேம்கள் சீன ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கம்

4,500 கேம்கள் சீன ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கம்

இணையக் கொள்கைகளுக்கு இணங்க சீன அரசாங்கத்தின் அழுத்தத்தைத் தொடர்ந்து ஆப்பிள் 4,500 கேம்களை சீனாவின் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் ஆப்பிளின் சீனா ஆப் ஸ்டோரிலிருந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டுகள் நீக்கப்பட்டன. இந்த நடவடிக்கை சீன அரசாங்கத்தின் தேவைகளுக்கு ஏற்ப எடுக்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் சீன ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கம்

ஆப்பிள் சீன ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கம்

ஆப்பிள் சீன ஆப் ஸ்டோரில் இருந்து இதுபோன்ற மொத்தமாக செயலிகள் நீக்கப்பட்டது இதுதான் முதல்முறை என டெக்னோட் தெரிவித்துள்ளது. புதிய விதிமுறைகளின்படி கேம் டெவலப்பர்கள் தங்களது பயன்பாடுகளை சீன ஆப்பிள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவேற்றுவதற்கு முன்பு சீன கட்டுப்பாட்டாளர்களிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்பது அவசியம்.

புதிய கொள்கை ஜூலை 1 ஆம் தேதி நடைமுறை

புதிய கொள்கை ஜூலை 1 ஆம் தேதி நடைமுறை

ஆப்பிள் இந்த புதிய கொள்கையை ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைப்படுத்தியது. அதன்படி, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து விளையாட்டின் பயன்பாடுகள் அகற்றப்பட்டதாக டெக்னோட் அறிக்கை தெரிவித்துள்ளது.

சீனா ஆப்பிளின் மிகப்பெரிய பயன்பாட்டு சந்தை

சீனா ஆப்பிளின் மிகப்பெரிய பயன்பாட்டு சந்தை

இதன்படி மொத்தமாக சீன ஆப்பிள் ப்ளே ஸ்டோரில் இருந்து 4500 கேம்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீனா ஆப்பிளின் மிகப்பெரிய பயன்பாட்டு சந்தையாகும். சென்சார் டவர் அறிக்கையின்படி, ஆப்பிள் ஆண்டுக்கு 16.4 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டுகிறது.

Best Mobiles in India

English summary
Apple removes 4500 games from its app store in china

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X