Home
News

Apple ஆரம்பிச்சிடுச்சு.. iOS 26 Public Beta ரிலீஸ்.. எந்தெந்த iPhone க்கு கிடைக்கும்? என்னென்ன புது Features?

ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் ஐஓஎஸ் 26 பப்ளிக் பீட்டா (iOS 26 Public Beta) வெர்ஷனை வெளியிடத் தயாராக உள்ளது; இது இந்த வாரம் வருகிறது. டபுள்யூடபிள்யூடிசி 2025 (WWDC 2025) நிகழ்வின் போது வெளியான ஐஓஎஸ் 26 அறிவிப்புக்கு பிறகு பல டெவலப்பர் முன்னோட்டங்களை நடந்து முடிந்ததை தொடர்ந்து, ஐஓஎஸ் 16 பப்ளிக் பீட்டாவானது ஜூலை 23 முதல் தகுதியான ஐபோன்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஓஎஸ் 26 பப்ளிக் பீட்டாவை சோதிக்க ஆர்வமுள்ள பயனர்கள் அதிகாரப்பூர்வ பீட்டா தளத்தில் தங்கள் ஆப்பிள் ஐடியுடன் லாக்-இன் செய்வதன் மூலம் ஆப்பிள் பீட்டா மென்பொருள் திட்டத்தில் பதிவு செய்யலாம். பதிவுசெய்ததும், பீட்டா வெர்ஷனை உங்கள் ஐபோனின் செட்டிங்ஸ் வழியாக நிறுவலாம். இருப்பினும், பீட்டா வெர்ஷன்களில் பிழைகள் இருக்கலாம் என்பதால், பயனர்கள் தங்கள் டிவைஸ்களை முன்கூட்டியே பேக்கப் எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

iOS 26 Public Beta ரிலீஸ்.. எந்தெந்த iPhone க்கு கிடைக்கும்?

ஐஓஎஸ் 26 அப்டேட் ஆனது சற்றே பழைய ஐபோன் எக்ஸ்ஆர் (iPhone XR) மற்றும் ஐபோன் எக்ஸ்எஸ் (iPhone XS) மாடல்களில் கிடைக்காது. மாறாக இந்த அப்டேட் ஐபோன் 11 (iPhone 11) மற்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை ஐபோன் எஸ்இ (iPhone SE) உட்பட லேட்டஸ்ட் மாடல்களுடன் மட்டுமே இணக்கமானதாக இருக்கும்

இருப்பினும் ஐஓஎஸ் 26 அப்டேட் வழியாக கிடைக்கும் மேம்பட்ட ஏஐ டூல்கள் உட்பட ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களின் முழு தொகுப்பையும் அணுக, உங்களிடம் ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) அல்லது ஐபோன் 16 சீரீஸ் (iPhone 16 Series) மாடல்களில் ஏதேனும் ஒன்று தேவைப்படும்.

அதாவது ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro), ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) அல்லது ஐபோன் 16இ (iPhone 16e) ஆகிய மாடல்களில் 1 உங்களிடம் இருக்க வேண்டும்.

ஐஓஎஸ் 26 ஆனது ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (​​Apple Intelligence) அம்சங்கள் தவிர்த்து போன் ஆப்களில் ஒருங்கிணைந்த இன்டர்பேஸ், புதுப்பிக்கப்பட்ட கேமரா ஆப் லேஅவுட் (Camera app layout), மெசேஜஸ்-ல் டைப் இண்டிகேட்டர்ஸ், புதிய கார்பிளே (CarPlay) அம்சங்கள் மற்றும் பலவற்றை உங்கள் ஐபோன்களுக்கு கொண்டுவரும்.

மேலும் ஐஓஎஸ் 26 இல் பல முக்கியமான விஷூவல் மேம்பாடுகளும் இருக்கும். ஐஓஎஸ் 26 இல் உள்ள லிக்விட் கிளாஸ் அம்சமும் இருக்கும். இது சுற்றியுள்ள காட்சி கூறுகளை பிரதிபலிக்கும் மற்றும் ஒளிவிலகல் செய்யும் ஒரு புதிய ஒளிஊடுருவக்கூடிய பொருளாக இருக்கும். இது ஓஎஸ் இல் உள்ள கட்டுப்பாடுகள், வழிசெலுத்தல், பயன்பாட்டு ஐகான்கள் மற்றும் விட்ஜெட்கள் முழுவதும் செயல்படுத்தப்படும்

இந்த புதிய வடிவமைப்பு மொழி ஆனது ஹோம் மற்றும் லாக் ஸ்க்ரீன்களுக்கு புதிய தனிப்பயனாக்க விருப்பங்களை கொண்டுவருகிறது, இதனால் பயனர்கள் பயன்பாட்டு ஐகான்கள் மற்றும் விட்ஜெட்களை புதிய தெளிவான தோற்றத்துடன் கஸ்டமைஸ் செய்ய முடியும். ஐபோனின் லாக் ஸ்க்ரீனில், டைம் விட்ஜெட் இப்போது ஒரு படத்தில் உள்ள ப்ரீ ஸ்பேஸ்-க்கு ஏற்ப மாறி, தானாகவே சுருங்கி விரிவடைகிறது.

இதற்கிடையில், பயனர்கள் தங்கள் ஐபோனை நகர்த்தும்போது தோன்றும் ஒரு 3டி விளைவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐஓஎஸ் 26 ஆனது கேமரா ஆப்பில் நெறிப்படுத்தப்பட்ட காட்சிகளுக்கான பிரத்யேக டேப், சஃபாரியில் பாயும் வெப் பேஜ்கள் மற்றும் ஆப்பிள் மியூசிக், நியூஸ் மற்றும் பாட்காஸ்ட்கள் போன்ற ஆப்களில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டேப் பார் ஆகியவற்றையும் வழங்குகிறது

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Releasing iOS 26 Public Beta Version This week Check Out Eligible iPhones New Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X