Home
News

இந்த 7 மாடல்களில் 1 உங்ககிட்ட இருக்கா? இந்தியாவில் உள்ள iPhone யூசர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த Apple நிறுவனம்!

ஆப்பிள் (Apple) நிறுவனம் இந்தியாவில் உள்ள ஐபோன் பயனர்களை சர்ப்ரைஸ் செய்துள்ளது. ஏப்ரல் மாத ரிலீஸ் டைம்லைனுக்கு முன்பாகவே ஐஓஎஸ் 18.4 அப்டேட்டை (iOS 18.4 Update) இந்தியாவில் வெளியிட்டுள்ளது. ஐஓஎஸ் 18.4 ரிலீஸ் கேண்டிடேட் வெர்ஷன் வழங்கப்பட்ட சில நாட்களுக்கு பிறகு, இந்த பப்ளிக் வெர்ஷன் வந்துள்ளது. தற்போது இந்த அப்டேட் பில்லியன் கணக்கான ஐபோன் பயனர்களுக்கு அணுக கிடைக்கிறது.

புதிய ஐஓஎஸ் 18.4 வெர்ஷன் ஆனது ஏஐ அடிப்படையில் பெரிய அளவிலான அம்சங்களை (AI Features) கொண்டுவரவில்லை என்றாலும் கூட, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஐபோன் பயனர்களுக்கு, ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் ஆனதுதொடர்பான உள்ளூர் மொழிகள் தொடர்பான முக்கிய மேம்பாடுகளை கொண்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள iPhone யூசர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த Apple நிறுவனம்!

இந்தியாவில் எந்தெந்த ஐபோன் மாடல்களுக்கு ஐஓஎஸ் 18.4 அப்டேட் கிடைக்கும்? பின்வரும் ஐபோன்கள் மட்டுமே ஆப்பிள் ஏஐ அம்சங்களை பயன்படுத்த அனுமதிக்கும் என்பதை ஆப்பிள் உறுதிப்படுத்தியுள்ளது:
01. ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro)
02. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max)

03. ஐபோன் 16 (iPhone 16)
04. ஐபோன் 16இ (iPhone 16e)
05. ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus)
06. ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro)
07. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max)

ஐஓஎஸ் 18.4 அப்டேட் வழியாக ஐபோன்களுக்கு என்னென்ன புதிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன? முன்னதாக இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஐபோன் பயனர்கள் - டீபால்ட் லேங்குவேஜ் ஆக யுஎஸ் இங்கிலீஷ்-ஐ செட் செய்வதன் மூலம் ஏஐ அம்சங்களை பயன்படுத்த ஆப்பிள் அனுமதித்து. தற்போது ஐஓஎஸ் 18.4 அப்டேட் வழியாக உள்ளூர் மொழிகளுக்கு மாறுகிறது.

தற்போது ஆப்பிள் ஏஐ-க்கான ட்ராப்-டவுன் மெனுவிலிருந்து இந்தியன் இங்கிலீஷ் விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். மேலும் சிரி உடனான புதிய உரையாடல் - இந்தி, தமிழ், மராத்தி, பங்களா, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழிகளில், ஆங்கிலத்துடனும் கலந்து பேசலாம். இந்த மாற்றம் கால் செய்ய, ஆப்பிள் மேப்ஸ்-ல் இடங்களை கண்டறிய மற்றும் உங்களுக்குப் பிடித்த பாடல்களை பிளே செய்ய பயனுள்ளதாக இருக்கும்.

ஐஓஎஸ் 18.4 அப்டேட் வழியாக ஆப்பிள் நிறுவனமானது பயனர்களுக்கு முக்கியமானதாக கருதப்படும் அலெர்ட்களை வழங்கவும் ஏஐ-ஐ பயன்படுத்துகிறது. இந்த அம்சம் இயல்பாகவே முடக்கப்பட்டிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதியளிக்கிறது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐபோன் மாடல்களில் இந்த புதிய ஏஐ அம்சத்தை முயற்சிக்க விரும்பும் ஐபோன் பயனர்கள் , செட்டிங்ஸ் > நோட்டிபிகேஷன்ஸ் என்கிற விருப்பத்தை அணுகலாம்

ஆப்பிளின் ஏஐ இமேஜ் டூல் தற்போதுள்ள அனிமேஷன் மற்றும் இல்லுஸ்ட்ரேஷன் வகைகளுடன் ஸ்கெட்ச் விருப்பத்தையும் பெறுகிறது. இந்த ஸ்டைலில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து, ஐபோனில் உள்ள இமேஜ் பிளேகிரவுண்ட் ஆப்பை பயன்படுத்தி, தேவையான ப்ராம்ப்ட்-ஐ வழங்குவதன் மூலம் ஏஐ அடிப்படையிலான இமேஜை உருவாக்கலாம்

ஐஓஎஸ் 18.4 அப்டேட் வழியாக ரைட்டிங் டூல்கள் ஆனது ஆப்பிள் ஏஐ-ஐ பயன்படுத்தி (சில மூன்றாம் தரப்பு ஆப்ளுடன் சேர்ந்து) இமெயில், மெசேஜ்கள் மற்றும் நோட்களில் உள்ள டெக்ஸ்ட்டை-ஐ ரீரைட் செய்யவோ அல்லது சம்மரைஸ் செய்யவோ உதவும். இந்த அம்சங்கள் ஐபோன்கள் மட்டுமின்றி மேக்புக் மாடல்கள் மற்றும் ஐபாட் மாடல்களிலும் வேலை செய்யும்

கடைசியாக, ஐஓஎஸ் 18.4 அப்டேட் ஆனது போட்டோஸ் ஆப்பில் உள்ள படங்களை க்ளீன் செய்ய ஆப்பிள் ஏஐ-ஐ பயன்படுத்துகிறது மற்றும் எளிய விளக்கங்களை பயன்படுத்தி படங்களைத் தேடுவதற்கான சிறந்த வழியையும் கொடுக்கிறது. மேலும் க்ளீன் அப் வழியாக போட்டோவில் உள்ள குறிப்பிட்ட பகுதியை அல்லது பொருளை அகற்றவும் செய்யலாம். சுவாரசியமாக இந்த அம்சங்கள் வீடியோக்களுக்கும் வேலை செய்யும், இது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இரண்டையும் பயன்படுத்தி மெமரிகளை உருவாக்கும் ஒரு டூலாகவும் வேலை செய்யும்.

ஐபோன்களுக்கான ஐஓஎஸ் 18.4 அப்டேட் உடன் சேர்த்து ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) ஹெட்செட்டிற்கான விஷன்ஓஎஸ் 2.4 அப்டேட்டை (visionOS 2.4 Update) வெளியிட்டுள்ளது. இதன்கீழ் ஆப்பிள் நிறுவனம் எம்ஆர் ஹெட்செட்டுக்கான ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அம்சங்களின் முதல் தொகுப்பை அறிமுகப்படுத்தி உள்ளது

விஷன்ஓஎஸ் 2.4 அப்டேட் வழியாக ஆப்பிள் விஷன் ப்ரோவிற்கு கிடைத்துள்ள புதிய அம்சங்கள்: ரைட்டிங் டூல்கள் இப்போது ஆப்பிள் விஷன் ப்ரோவில் கிடைக்கின்றன. இது எழுத்துப்பிழை மற்றும் இலக்கண சரிபார்ப்புகளுடன் டாகுமெண்ட்களை எழுதுதல், ரீரைட் செய்தல் மற்றும் சரிபார்த்தல் ஆகியவற்றுக்கான விருப்பங்களை கொண்ட ஏஐ அம்சங்களை வழங்கும். மேலும் இதன் கீழ் டெக்ஸ்ட்-ஐ சுருக்கமாக எழுதலாம், பட்டியல்கள் மற்றும் அட்டவணைகளை உருவாக்கலாம் அல்லது டெக்ஸ்ட்-இல் இருந்து முக்கிய புள்ளிகளை முன்னிலைப்படுத்தலாம்.

மேலும் இந்த அப்டேட் இமேஜ் பிளேகிரவுண்ட்டையும் வழங்குகிறது, இது விளக்கமான ப்ராம்ப்ட்களின் அடிப்படையில் படங்களை உருவாக்க ஜெனரேட்டிவ் ஏஐ-ஐ பயன்படுத்தும் ஒரு தனித்த ஆப் ஆக செயல்படும். பயனர்கள் தங்கள் போட்டோஸ் ஆப்பில் இருந்து குறிப்பிட்ட நபரையும் தேர்ந்தெடுக்கலாம் மற்றும் வெவ்வேறு ஆர்ட் ஸ்டைல்களில் இருந்தும் தேர்வுகளை செய்யலாம்.

மேலும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் ஆனது இப்போது பயனர்கள் போட்டோஸ் ஆப்பில் சேமிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட படங்களை இயற்கையான மொழி வினவல்களுடன் தேட அனுமதிக்கிறது. மேலும், கிரியேட் ஏ மெமரி மூவீ என்கிற அம்சம் ஆனது, புகைப்படங்களிலிருந்து அடையாளம் காணப்பட்ட தீம்களின் அடிப்படையில் அத்தியாயங்களுடன் ஒரு கதைக்களத்தை வடிவமைக்கும், பயனர் உள்ளிடும் ப்ராம்ட்டை பொறுத்து அவற்றை ஒருதிரைப்படமாக ஒழுங்கமைக்கும்

விஷன்ஓஎஸ் 2.4 அப்டேட் ஆனது மெயிலில் ப்ரையாரிட்டிமெசேஜ்கள் செய்திகள், மெயில் சம்மரிஸ், நோட்களில் இமேஜ் வாண்ட், நோட்டிபிகேஷன் சென்டரில் ப்ரையாரிட்டி நோட்டிபிகேஷன் மற்றும் நோட்டிபிகேஷன் சம்மரிஸ் ஆதரவையும் கொண்டு வந்துள்ளது. திரைப்படங்கள் மற்றும் பிற செயல்களை உருவாக்க பயன்படுத்தப்படும் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் ஆனது ப்ரைவேட் ஆக வைக்கப்படுகின்றன, அவைகள் நிறுவனத்துடன் பகிரப்படுவதில்லை என்பதை ஆப்பிள் நிறுவனம் வலியுறுத்துகிறது.

கூடுதலாக, பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்க ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் ஆனது முடிந்தவரை ஆன்-டிவைஸ் ப்ராசஸிங்-ஐ பயன்படுத்துகிறது. லார்ஜ் ஏஐ மாடல்கள் தேவைப்படும் பணிகளுக்கு, ஆப்பிள் நிறுவனம் ப்ரைவேட் கிளவுட் கம்ப்யூட்டை பயன்படுத்தும் என்றும், பயனர்களின் டேட்டா ஒருபோதும் சேமிக்கப்படவோ அல்லது பகிரப்படவோ மாட்டாது என்பதையும் ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Released iOS 18 4 Update In India Check Out New AI Features List Of Eligible iPhones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X