Home
News

மாஸ் கொடை வள்ளல்.. கர்ணனை போல் தர்மம் செய்யும் Apple.. ஒவ்வொரு ரெட் iPhone, Watch விற்பனையில் ஒளிந்துள்ள உண்மை

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் வரிசையில் நீண்ட காலமாக ரெட் நிறத்தை மட்டும் நிறுத்தாமல் வருகிறது. இதற்கு பின்னணியில் ஒரு பரஸ்பர காரணம் மறைந்துள்ளது. ஆப்பிளின் பிரகாசமான, கண்ணைக் கவரும் ரெட் நிறத்திற்கு பின்னால் உள்ள நன்மையை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்.

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் அதன் ஐபோன் (iPhone) மற்றும் வாட்ச் (Watch) சாதனங்களின் பளபளப்பான ரெட் (Red) நிறத்திற்கு பின்னால், ஒரு துடிப்பான நன்கொடை சமாச்சாரம் மறைந்துள்ளது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்புங்கள் மக்களே.! உலகம் முழுக்க விற்பனையாகும் ஒவ்வொரு ரெட் வேரியண்ட் ஐபோன் மற்றும் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு பின்னால், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸை எதிர்த்துப் போராடும் நோயாளிகளுக்கான நன்கொடையை வழங்கப்படுகிறதாம்.

மாஸ் கொடை வள்ளல்.. கர்ணனை போல் தர்மம் செய்யும் Apple.. ரெட் நிற உண்மை!

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆப்பிள் (Apple) நிறுவனம், ரெட் (Red) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸை எதிர்த்துப் போராடும் நோயாளிகளுக்கான நன்கொடையை வழங்கி வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு ரெட் வேரியண்ட் (red variant apple products) தயாரிப்புகள் விற்பனை செய்யப்படும் போது, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை உலகளாவிய நிதியத்தால் நடத்தப்படும் திட்டங்களுக்கு நன்கொடையாக ஆப்பிள் வழங்குகிறது.

அடுத்து வரும் ஆண்டுகளில் அல்லது இப்போதே உங்களில் யாருக்காவது புதிய Apple சாதனத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், மற்ற சலிப்பான வண்ண விருப்பங்களை வாங்குவதற்கு பதிலாக, ஆப்பிள் வழங்கும் சிறப்பு எடிஷன் நிறமான ரெட் நிற ஐபோன், வாட்ச், மொபைல் கேஸ் அல்லது வாட்ச் ஸ்ட்ராப் போன்ற தயாரிப்புகளை வாங்கி, உங்கள் நன்கொடையையும் நீங்கள் ஒரு நற்காரியத்திற்காக வழங்கலாம்.

இந்தியாவில் இப்போது வாங்க கிடைக்கும் அனைத்து ரெட் நிற தயாரிப்பு சாதனங்களின் பட்டியல் இதோ.

1. ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 and iPhone 14 Plus):
ஐபோன் 15 சீரிஸ் வரிசை தான் புதிய மாடல் என்றாலும், இதில் ஆப்பிள் நிறுவனம் இன்னும் ரெட் நிற வேரியண்ட்டை நிறுவனம் இன்னும் வழங்கவில்லை. அதனால், நமக்கு ரெட் நிறத்தில் வாங்க கிடைக்கும் ம்-ஐபோன் மாடலாக ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 and iPhone 14 Plus) சாதனங்கள் இருக்கின்றன. இதன் 128ஜிபி வேரியண்ட் மாடலின் விலை ரூ.69,900 ஆக இருக்கிறது.

2. ஐபோன் 13 (iPhone 13):
ஐபோன் 13 சாதனம் 6 வண்ணங்களில் வருகிறது. ஆனால் மிகவும் தனித்து நிற்பது ரெட் வேரியண்ட் மாடல் மட்டுமே. இதன் மிகச்சிறப்பான ரெட் கலர் பூச்சு மற்றும் பொருத்தமான சிவப்பு அலுமினிய சட்டத்துடன் கூடிய துடிப்பான மாடலாக இது வருகிறது. இந்த மாடலின் அடிப்படை 128ஜிபி வேரியண்ட் ரூ.59,900 விலையில் கிடைக்கிறது. ஐபோன் 13 வாங்குவதை விட ஐபோன் 14 வாங்குவது சிறந்தது. இரண்டிற்கும் இடையில் ரூ.10,000 மட்டுமே விதியாசம்முள்ளது.

மாஸ் கொடை வள்ளல்.. கர்ணனை போல் தர்மம் செய்யும் Apple.. ரெட் நிற உண்மை!

3. ஐபோன் எஸ்இ (iPhone SE):
ஆப்பிள் ஐபோன்களின் வரிசையில் மிகவும் மலிவான சாதனமாக iPhone SE திகழ்கிறது. இதன் அடிப்படை மாடலான 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.49,900 ஆக திகழ்கிறது.

4. ஐபோன் 12 (iPhone 12):
இந்த சாதனம் இப்போது ஆப்பிள் ஸ்டோர்களில் வாங்க கிடைப்பதில்லை. ஆனால், சில ஆன்லைன் தளங்களில் இந்த ஐபோன் 12 சாதனம் இன்னும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்போது வாங்க கிடைக்கும் மலிவு விலை சாதனமாக இது இருக்கிறது. ஆனால், இது அவுட் டேட்டட் மாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5. மொபைல் கேஸ் (Mobile Case):
ஆப்பிள் நிறுவனத்தின் ரெட் நிற தயாரிப்புகளுக்கு உலகம் முழுக்க டிமாண்ட் ஜாஸ்தியாக உள்ளது. உங்களால் ரெட் நிற போனை வாங்க முடியவில்லை என்றால், ரெட் நிற ஐபோன் கேஸ்களை நீங்கள் வாங்கி, உங்கள் உதவி கரத்தை நன்கொடைக்காக வழங்கலாம்.

6. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 (Apple watch series 9):
டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினத்தன்று ஆப்பிள் நிறுவனம் புதிய ரெட் நிற அலுமினிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 ஐ அறிமுகப்படுத்தியது. இது 41 மிமீ மற்றும் 45 மிமீ அளவுகளில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.41,900 ஆகும். இத்துடன் நிறுவன ரெட் நிற வாட்ச் ஸ்ட்ராப்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலையில் இருந்து ஒரு பங்கு எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி உதவிக்காக சென்று சேரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Red Colour Variant iPhone Watch Series 9 Strap and Mobile Case Products Helps To Fight AIDS and HIV
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X