ஆப்பிள் iPhone XR சாதனத்தை இலவசமாக வழங்குகிறது.. ஆனால் இது நடந்தால் மட்டும் தான் கிடைக்கும்..

|

ஆப்பிள் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் எக்ஸ்ஆர் சாதனத்தை இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்கும் என்று அறிவித்துள்ளது. ஆனால், சில குறிப்பிட்ட நிபந்தனைகளை மற்றும் சூழலில் மட்டுமே இதை வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இது பற்றி விரிவாகப் பார்க்கலாம். உங்கள் மொபைல் சாதனத்தைப் பழுதுபார்ப்பது மிகவும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது.

இனி iPhone XR இலவசமாக பயன்படுத்த கிடைக்கும்

இனி iPhone XR இலவசமாக பயன்படுத்த கிடைக்கும்

சில நேரங்களில் ஃபோன்கள் பழுதுபார்க்க சில நாட்களுக்கு மேல் ஆகலாம், மேலும் வாடிக்கையாளர்கள் தொலைப்பேசியைச் சேவை நிலையத்தில் விட்டுவிட வேண்டியிருக்கும். தற்போதைக்கு இரண்டாம் நிலை சாதனத்தைப் பயன்படுத்த முடியும் என்றாலும், பெரும்பாலான பயனர்கள் தங்களின் முதன்மைச் சாதனங்களில் பெரும்பாலான தரவைச் சேமித்து வைத்திருக்கிறார்கள். மேலும் நீண்ட காலத்திற்கு அதிலிருந்து விலகி இருப்பது கடினமாக இருக்கும். பயனர்களுக்கு ஏற்படும் இந்த சிரமத்தைப் போக்க, ஆப்பிள் ஒரு புதிய உத்தியை வகுத்துள்ளது.

லோனர் சாதனத்தைப் பெறுவதற்கான விதிமுறைகள் என்ன?

லோனர் சாதனத்தைப் பெறுவதற்கான விதிமுறைகள் என்ன?

சாதனத்தைப் பழுதுபார்ப்பதற்கு அதிக நேரம் எடுக்கும் போது, ​​அதற்கு மாற்றாக ஐபோன் XR ஐ லோனர் சாதனமாக வழங்கத் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தச் சேவை அமெரிக்காவிலும் பிற பிராந்தியங்களிலும் கிடைக்கப் போகிறது. தற்போதைய நிலவரப்படி, ஆப்பிள் ஐபோன் 8 ஐ கடன் வாங்கும் சாதனமாக வழங்குகிறது. ஆனால் மேக்ரூமர்ஸின் அறிக்கையின்படி, ஆப்பிள் தனது தொலைப்பேசியைச் சேவை நிலையத்தில் விட்டுச் செல்ல வேண்டிய பயனருக்கு மட்டும் வழங்கும் என்று கூறியுள்ளது.

நடுக்கடலில் தோன்றிய ராட்சத 'கருப்பு துளை'.. சர்ச்சையை கிளப்பிய கூகிள் மேப்ஸ்.. உண்மை என்ன தெரியுமா?நடுக்கடலில் தோன்றிய ராட்சத 'கருப்பு துளை'.. சர்ச்சையை கிளப்பிய கூகிள் மேப்ஸ்.. உண்மை என்ன தெரியுமா?

ஐபோன் XR இனி லொனர் சாதனமாக கிடைக்குமா?

ஐபோன் XR இனி லொனர் சாதனமாக கிடைக்குமா?

நவம்பர் 4 ஆம் தேதி முதல் ஐபோன் எக்ஸ்ஆர் சாதனத்தை லொனர் சாதனமாக வழங்கத் தொடங்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு ஆப்பிள் நிறுவனம் இந்த முடிவை இப்போது நடைமுறைப்படுத்தியுள்ளது. ஐபோன் 8 இன் உற்பத்தி ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது என்பதனால் நிறுவனம் ஐபோன் XR அதன் மாற்றாகக் கருதப்படலாம் என்று கூறப்படுகிறது. பிந்தைய சாதனம் டூயல் சிம் ஸ்லாட்டுகள், A12 பயோனிக் சிப் மற்றும் மிகவும் அற்புதமான அம்சங்களுடன் வருகிறது. இருப்பினும், இந்த சேவை தற்போது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் மற்ற இடங்களுக்கும் கிடைக்கும்.

இந்த சூழ்நிலையில் மட்டும் தான் iPhone XR வாங்க கிடைக்கும்

இந்த சூழ்நிலையில் மட்டும் தான் iPhone XR வாங்க கிடைக்கும்

இருப்பினும், ஒவ்வொரு வாடிக்கையாளரும் அதன் FAQ பக்கத்தில் நிறுவனம் அனுமதித்துள்ளபடி லொனர் சாதனத்திற்குத் யாரெல்லாம் தகுதியானவர்கள் என்ற விபரத்தைப் பதிவிட்டுள்ளது. அதன் படி, உண்மையில் பயனர் சாதனத்தைச் சரி செய்ய நீண்ட நேரம் எடுக்கும் சாதனங்களுக்கு மட்டுமே லொனர் சாதனம் மாற்றுச் சாதனமாக வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. மேலும், நுகர்வோர் தங்கள் அசல் சாதனம் பழுதுபார்க்கப்பட்ட பிறகு 14 நாட்களுக்குள் கடன் வாங்கிய சாதனத்தைத் திருப்பித் தர வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பணம் டெபாசிட் செய்ய கட்டணம்.. சிலிண்டர் பதிவு மற்றும் ரயில் நேரங்களின் திடீர் மாற்றம்.. என்ன சார் இதெல்லாம்?பணம் டெபாசிட் செய்ய கட்டணம்.. சிலிண்டர் பதிவு மற்றும் ரயில் நேரங்களின் திடீர் மாற்றம்.. என்ன சார் இதெல்லாம்?

இனி ஆப்பிள் பயனர்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது

இனி ஆப்பிள் பயனர்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது

வாடிக்கையாளர்கள் லோனர் சாதனத்தில் சேமிக்கப்பட்ட அனைத்து தரவையும் நீக்கிய பின் நிறுவனத்திடம் திரும்பத் தரவேண்டும். வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஸ்டோர்ஸ் மற்றும் அமெரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர்களில் லொனர் வழங்கும் சாதனங்களைப் பெறலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பழுதுபார்க்க தொலைப்பேசியை வழங்கிய நபர்கள் அவர்களின் தொடர்புடன் இணைத்திருப்பதில் எந்த சிக்கலும் எழாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple Providing iPhone XR For Free As Alternate Device If You Leave Your Phone At Service Stations : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X