ஆப்பிள் ஸ்டோரில் ரூ.2 கோடி செல்போன், வாட்ச் அபேஸ் : எங்கு நடந்தது தெரியுமா?

இந்தூரில் ட்ரெசர் ஐஸ்லேண்ட் மாலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டோர் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இந்த மாலுக்கு கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள் ஆப்பிள் ஸ்டோரில் இருந்த செல்போன், ஐபேடு

|

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் என்றாலே உலக அளவில் பிரபலம் தான். அதிலும் அந்த போன்களின் தனித்துவம் எந்த போன்களிலும் கிடைப்பதில்லை. ஆப்பிள் நிறுவனத்தின் போன்கள், மேக்புக், ஸ்மார்ட் வாட்சுகள் அனைத்து தரப்பினர் வரையும் கவர்ந்து இழுக்கிறது.

ஆப்பிள் ஸ்டோரில் ரூ.2 கோடி செல்போன், வாட்ச் அபேஸ்

இதனால் விலையும் அதிகமாக இருந்தாலும் வங்கியில் கடன் பெற்றும், நகைகளை அடமானம் வைத்தும், கிரெட்டி கார்டு பயன்படுத்தியும், தவணை முறையில் ஆவது ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.

 இளசுகளின் மோகம்:

இளசுகளின் மோகம்:

ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன்கள், மேக்புக், ஐபேடிலும் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளிலும் தனிமுத்திரை பதித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆண்டி வைரஸ்கள் தாக்காமல் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், பிறர் நம் தகவல்களையும் தரவுகளையும் திருட முடியாது. அந்த அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து ஈழுக்கிறது.

 ஆப்பிள் நிறுவனத்தின் வடிவம்:

ஆப்பிள் நிறுவனத்தின் வடிவம்:

ஆப்பிள் நிறுவனத்தின் வடிவமும், நிறமும், அழகும் வேறு எந்த நிறுவனத்தாலும், தர முடியாது அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் ஆப்பிள் வடிவமே காண்போர் கண்களை கொள்ளை கொள்கிறது. இந்த அளவுக்கு இந்த போன்கள் அற்புதமாக வடிவமைக்கபட்டுள்ளது.

ஆப்பிள் ஸ்டோரில் கொள்ளை:

ஆப்பிள் ஸ்டோரில் கொள்ளை:

இந்த ஆப்பிள் நிறுவனத்தின் போன்களை அனைவரையும் கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கிறது. இந்நிலையில், இந்தூரில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டோரில் ரூ.2 கோடி மதிப்புள்ள நோட் புக், ஆப்செல்போன்கள், மேக் புக் உள்ளிட்ட சாதனங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் அட்டூழியம்:

நள்ளிரவில் அட்டூழியம்:

இந்தூரில் ட்ரெசர் ஐஸ்லேண்ட் மாலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டோர் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இந்த மாலுக்கு கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள் ஆப்பிள் ஸ்டோரில் இருந்த செல்போன், ஐபேடு, வாட்ச், மேக்புக் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த சென்றுவிட்டனர்.

ரூ.2 கோடி பொருட்கள் அபேஸ்:

ரூ.2 கோடி பொருட்கள் அபேஸ்:

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளா செல்போன், மேக் புக், வாட்ச்சுகள் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டதாக ஆப்பிள் நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் விலை ரூ.2 கோடி என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அந்நிறுவனம் இந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், கடந்த மாதம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஆப்பிள் ஸ்டோரிலும் சுமார் ரூ.19 லட்சம் பொருட்கள் கொள்ளை போனது குறிப்பிட தக்கது.

Best Mobiles in India

English summary
Apple products worth Rs 2 crore including iPhones stolen from Apple showroom in Indore : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X