மவுன்டெயின் லயன் அப்டேஷனை வழங்கும் ஆப்பிள் நிறுவனம்!

Posted By:

மவுன்டெயின் லயன் அப்டேஷனை வழங்கும் ஆப்பிள் நிறுவனம்!

தொழில் நுட்ப சிகரங்களை தொட்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம் இன்னும் புதிய வசதிகளை எலக்ட்ரானிக் சாதனங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு, மவுன்டெயின் லையன் என்ற புதிய அப்டேஷன் வசதியினை வழங்க உள்ளது ஆப்பிள் நிறுவனம்.

ஐபோன் அப்ளிகேஷனான 'கேம்ஸ் சென்டர்' மூலம் அதிக ஸ்கோர்களின் விவரத்தினையும் பார்க்க முடியும். இந்த மவுன்டெயின் லையன் என்ற புதிய அப்டேஷனில் மேல் கூறப்பட்டுள்ள கேமஸ் சென்டர் வசதியையும் பெறலாம். நவநாகரீக தொழில் நுட்பங்களை கொடுக்கும் நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்கள் அதிக விஷயங்களை எதிர் பார்க்கின்றனர். அந்த எதிர் பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் ஆப்பிள் இந்த புதிய மவுன்டெயின் லையன் தொழில் நுட்பத்தினை வழங்க உள்ளது.

வருகிற கோடை கொண்டாட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் புதிய சாஃப்டுவேர்களை விற்பனை செய்ய உள்ளதாகவும், இந்த லையன் அப்டேஷன் வசதி இன்னும் ஒரு ஆண்டிற்கு பிறகு வெளியாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot