Home
News

ஆப்பிள் 12 சீரிஸ் மீது அபார தள்ளுபடி.. ரூ. 24000 மிச்சம் பிடிக்கலாம்.. உடனே முந்துங்கள் மக்களே..

ஆப்பிள் என்பது கிட்டத்தட்ட உலகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு மிகப் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆகும். இது பல காரணங்களால் உலகளவில் பிரபலமாகியுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் உள்ள ஒரு முக்கிய காரணம் அவற்றின் தரக் குறியீடு மற்றும் இதன் சக்தி வாய்ந்த செயல்திறன் உடன் கூடிய பாதுகாப்பாகும். மற்றொரு புறம் இதன் விலை கூட இந்த சாதனம் உலகளவில் பிரபலமடைந்ததற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இப்படி விலை உயர்ந்த ஐபோன் சாதனத்தை வாங்க இப்போது ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

புதிதாக ஐபோன் வாங்க ஆசை இருக்கிறதா? அப்போ இதான் ரைட் டைம்

புதிதாக ஐபோன் வாங்க ஆசை இருக்கிறதா? அப்போ இதான் ரைட் டைம்

புதிதாக ஐபோன் வாங்க நினைக்கும் நபர்கள் இந்த சலுகையைக் கட்டாயம் பயன்படுத்திக்கொள்வது சிறந்தது, ஏனெனில் இப்போது உங்களுக்கு ரூ. 24,000 மதிப்பிலான தள்ளுபடி கிடைக்கிறது. சமீபத்தில், ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது. இருப்பினும், ஐபோன் 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு விநியோக தடை உள்ளது. இதனால், ஆப்பிள் நிறுவனம் அதன் வருவாயை ஐபோன் 12 சீரிஸ் சாதனங்களில் இருந்து பெரும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.

எந்த ஆப்பிள் ஐபோன் மாடலுக்கு ரூ. 24000 தள்ளுபடி தெரியுமா?

எந்த ஆப்பிள் ஐபோன் மாடலுக்கு ரூ. 24000 தள்ளுபடி தெரியுமா?

இதனால், இப்போது ஐபோன் 12 தொடர் போன்கள் அடுத்த சில மாதங்களில் ஐபோன் 13 சீரிஸை விடச் சிறப்பாகச் செயல்படப் போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதினால் நிறுவனம் இப்போது நம்ப முடியாத தள்ளுபடியை அறிவித்துள்ளது. வடிவமைப்பின் அடிப்படையில் பார்க்கும் போது ஐபோன் 13 சீரிஸ் சாதனங்கள் ஐபோன் 12 சீரிஸைப் போலவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரீமியம் ஐபோன் 12 சீரிஸ் சாதனம் மீது இப்போது ரூ. 24,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. சிறந்த விலையில் ஆப்பிள் போன் வாங்குவதற்கு இது சிறந்த நேரமாகும்.

iPhone 12 Pro சாதனத்தின் அசல் விலை என்ன? ரூ. 24000 சலுகைக்கு பின் விலை என்ன?

iPhone 12 Pro சாதனத்தின் அசல் விலை என்ன? ரூ. 24000 சலுகைக்கு பின் விலை என்ன?

இந்தியாவில் இப்போது ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ சாதனங்கள் மீது இந்த அபாரத் தள்ளுபடி கிடைக்கிறது. இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ சாதனம் ரூ. 1,19,900 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது அமேசானில் நடைபெறும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் விற்பனையில் இந்த சாதனம் ரூ. 95,900 என்ற தள்ளுபடி விலையில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு ரூ. 24,000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த விலைக் குறைப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ விலை இப்போ எவ்வளவு தெரியுமா?

ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ விலை இப்போ எவ்வளவு தெரியுமா?

எனவே ஐபோன் 12 ப்ரோவைப் பெறுவது பற்றி நீங்கள் நினைத்திருந்தால், இப்போது தான் சரியான நேரம் என்பதைக் கவனிக்க மறக்காதீர்கள். ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ சாதனம் ரூ. 1,19,900 கிடைக்கும். இது சமீபத்திய தலைமுறை 'ப்ரோ' ஐபோன் என்றாலும், இங்கே கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இதன் விலை ரூ. 24,000 அதிகம். மேலும், நீங்கள் புதிய ஐபோன் பயன்படுத்துபவராக இருந்தால், சார்ஜிங் சாதனங்களைத் தனியாகத் தான் வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் 12 மினியை ரசிகர்கள் அதிக வாங்க காரணம் என்ன தெரியுமா?

ஆப்பிள் ஐபோன் 12 மினியை ரசிகர்கள் அதிக வாங்க காரணம் என்ன தெரியுமா?

இதுவும் இப்போது பயனர்கள் ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோவை உடனே வாங்குவதற்கு ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இப்போதே இந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்திக்கொள்வது உங்களுக்கு ஏராளமான லாபத்தை வழங்கக்கூடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆப்பிள் ஐபோன் 12 மினி இந்தியாவில் இப்போது பிளிப்கார்ட் மூலம் வெறும் ரூ. 42,099 என்ற ஆரம்ப விலையில் வாங்கக் கிடைக்கிறது. இப்போது பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் ஒரே ஐபோன் 12 சீரிஸ் மாடல் இது மட்டுமே.

அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்

அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்

இந்த விலை அதன் 64 ஜிபி மாறுபாட்டின் விலை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஐபோன் ரசிகர்களுக்குக் கிடைக்கும் சிறந்த சலுகையாகும். இந்தியாவில் ஐபோன்கள் மீது இப்படி ஒரு பெரும் தள்ளுபடி கிடைப்பது அதன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால், ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களின் விற்பனை இந்தாண்டு கணிசமாக அதிகரித்துள்ளது. புதிய ஐபோன் வாங்கும் நேரம் இது என்பதனால், இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.

Best Mobiles in India

English summary
Apple Premium iPhone 12 Pro Is Now Available With Discount Of Rs 24000 In Amazon For Limited Period : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X