சீன கம்பெனிகளை பார்த்து கெட்டுப்போன Apple.. 2026 இல் பேஸிக் iPhone மாடல் வராதாம்.. இனிமேல்?
ஐபோன் 16இ (iPhone 16e) மாடலின் அறிமுகமானது, ஐபோன் 17 சீரிஸ் (iPhone 17 Series) மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே டாப் லெவலில் கொண்டு போய் வைத்திருக்கிறது. இதற்கிடையில் ஐபோன் 17 சீரிஸில் "மிகவும் ஸ்லிம் ஆன டிசைனை கொண்ட" ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) என்கிற முற்றிலும் புதிய மாடல் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.
இது உண்மையாகும் பட்சத்தில் ஐபோன் 17 சீரிஸின் கீழ் - ஐபோன் 17 சீரிஸில் ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 பிளஸ் (iPhone 17 Plus), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro), ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max), ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) மற்றும் ஐபோன் 17இ (iPhone 17e) என மொத்தம் 6 மாடல்கள் அறிமுகமாகும்.

இப்படி ஐபோன் 17 சீரிஸ் மீதான எதிர்பார்ப்புகள் எகிறிக்கொண்டே போய்கொண்டிருக்கும் வேளையில்.."அப்படியே கொஞ்சம் 2026 குள்ளேயும் வாங்க!" என்று ஆப்பிள் ஆர்வலர்களை அழைக்கும்படியான சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஐபோன் 18 சீரீஸ்-க்காக ஆப்பிள் போட்டுவைத்துள்ள பிளான்கள் ஆன்லைனில் "புட்டுப்புட்டு" வைக்கப்பட்டுள்ளன.
2026 ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யும் விதத்தை முற்றிலும் மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது வழக்கம் போல 2026 இல் ஐபோன் 18 சீரீஸ் (iPhone 18 Series) அறிமுகமாகும். ஆனால் அவைகள் வழக்கமான வரிசையில் அறிமுகம் செய்யப்படாது.
தி இன்ஃபர்மேஷன் (The Information) வழியாக எங்களுக்கு கிடைத்துள்ள புதிய அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் முதலில் அதன் ப்ரோ மாடல்களையும் மற்றும் ஏர் மாடலையும் மற்றும் அதன் முதல் ஃபோல்டபிள் ஐபோன் மாடலையும் அறிமுகம் செய்யும். பின்னர் சில மாதங்களுக்கு பிறகு ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18இ மாடல்களை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது (சீன கம்பெனிகளை போல)!
இதன் பொருள் பயனர்கள் வெண்ணிலா வேரியண்ட்டிடிற்காக மற்றும் பட்ஜெட் விலை ஐபோன் 18இ மாடலுக்காக இன்னும் கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். இவ்விரு மாடல்களும் 2027 இல் தான் அறிமுகமாகும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அனைத்து மாடல்களையும் ஒரே நேரத்தில் வெளியிடுவதற்கு பதிலாக, ஆப்பிள் நிறுவனம் அதன் வெளியீட்டை இரண்டு நிகழ்வுகளாக பிரிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது - ஒன்று 2026 இல் மற்றும் மற்றொன்று 2027 இல்!
ஆப்பிளின் இந்த புதிய அணுகுமுறையின் கீழ், விலை அதிகமான உயர்நிலை மாடல்கள் ஆன ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகியவை வழக்கமான காலத்தில் (2026 செப்டம்பர்) அறிமுகமாகும். இதோடு சேர்த்து புதிய ஐபோன் 18 ஏர் மற்றும் ஆப்பிளின் முதல் ஃபோல்டபிள் ஐபோனும் அறிமுகம் செய்யப்படலாம்.
பின்னர் விலை குறைவான மாடல்கள் (ஐபோன் 18, ஐபோன் 18இ) அறிமுகமாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களை வாங்க வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டவர்களுக்கு முதலில் விலை உயர்ந்த மாடல்கள் கிடைக்கும். இதனால் காத்திருக்க முடியாதவர்கள் ப்ரோ அல்லது ஏர் மாடல்களை வாங்க கூடிய சூழ்நிலை அதிகரிக்கும்.
ஐபோன் 17 ஏர் மாடல் எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும்? முன்னரே குறிப்பிட்டபடி இது ஐபோன் 17 சீரீஸின் கீழ் முற்றிலும் புதிய மாடல் ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிளின் மற்ற ஐபோன் சீரீஸ்களின் அறிமுகத்தை கருத்தில் கொண்டால், இந்த சீரிஸ் செப்டம்பர் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம்.
ஐபோன் 17 ஏர் இதுவரை இல்லாத அளவுக்கு மெலிதான ஐபோன் மாடலாக இருக்கும் என்றும், இது 5 மிமீ முதல் 6.25 மிமீ வரை தடிமன் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது 6.6 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஸ்க்ரீன் சைஸ்-ன் அடிப்படையில் இந்த மாடல் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கு இடையில் வைக்கப்படும்.
ஐபோன் 17 ஏர் மாடலானது ஹாரிசாண்டல் மாட்யூலில் சிங்கிள்-லென்ஸ் கேமராவுடன் வரக்கூடும். சிப்செட்டை பொறுத்தவரை ஐபோன் 17 ஏர் ஆனது ஆப்பிளின் வரவிருக்கும் ஏ19 சிப்பால் இயக்கப்படலாம் ஐபோன் 17 ஏர் மாடலின் விலை குறித்து எந்த சரியான விவரங்களும் இல்லை. இது ரூ.99,900 க்கு அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications