Home
News

ஏன்., எதற்கு., நல்ல வரவேற்பு இருக்கே- ஐபோன், ஏர்பாட்ஸ் உற்பத்தியை குறைக்கும் ஆப்பிள்- நிறுவனம் போட்ட திட்டம்!

ஆப்பிள் இன்க் அதன் ஐபோன் எஸ்இ மற்றும் ஏர்பாட்ஸ் சாதனங்களின் வெளியீட்டைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ராய்டர்ஸ் தளத்தில் வெளியான தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

சாதனங்களின் வெளியீட்டைக் குறைக்கத் திட்டம்

சாதனங்களின் வெளியீட்டைக் குறைக்கத் திட்டம்

ஆப்பிள் இன்க் அதன் ஐபோன் எஸ்இ மற்றும் ஏர்பாட்ஸ் சாதனங்களின் வெளியீட்டைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஆதாரத் தகவல்களை மேற்கோள்காட்டி Nikkei தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததை விட தேவைகள் குறைவாகவே இருக்கும். முதலாக திட்டமிட்டதைவிட அடுத்த காலாண்டில் சுமார் 20% குறைவான ஐபோன் எஸ்இ சாதனங்களை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக Nikkei தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம்

உக்ரைன் நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம்

ஆப்பிள் இன்க் (AAPL.O) உக்ரைன் நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் காரணமாக மந்தநிலை ஏற்படுகிறது எனவும் இதனால் ஐபோன் மற்றும் ஏர்பாட் உற்பத்தியைக் குறைக்க திட்டமிட்டுள்ளது என Nikkei செய்தி வெளியிட்டிருக்கிறது. நிறுவனம் முதலில் திட்டமிட்டதை விட அடுத்த காலாண்டில் 20% குறைவான ஐபோன் எஸ்இ சாதனங்களையே உற்பத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறது. சுமார் 2 மில்லியன் முதல் 3 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது என அறிக்கை தெரிவிக்கிறது. அதேபோல் ஏர்பாட்களுக்கான 2022 ஆர்டர்களை 10 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்களாக ஆப்பிள் குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

பிரபலமாக விற்பனையாகி வரும் சாதனங்கள்

பிரபலமாக விற்பனையாகி வரும் சாதனங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஏர்பாட் ஆகிய சாதனங்கள் உலக அளவில் பிரபலமாக விற்பனையாகி வரும் சாதனங்கள் ஆகும். இந்த நிலையில் ஆப்பிள் தனது ஐபோன் மற்றும் ஏர்பாட் உற்பத்தியை குறைக்க முடிவு செய்திருக்கிறது. உக்ரைன் போர், சீனாவில் பரவும் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் நடப்பாண்டிற்கான ஸ்மார்ட்போன்கள் தேவை குறைந்த அளவில் இருக்கும் என ஆப்பிள் நிறுவனம் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதலாவதாக நிர்ணயிக்கப்பட்டதை விட 20 சதவீதம் வரை ஐபோன் உற்பத்தியை ஆப்பிள் குறைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

வெளியான தகவல்கள்

வெளியான தகவல்கள்

ஆப்பிள் இன்க் அதன் ஐபோன் எஸ்இ மற்றும் ஏர்பாட்ஸ் சாதனங்களின் வெளியீட்டைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஆதாரத் தகவல்களை மேற்கோள்காட்டி Nikkei தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையானது சீன நகரங்களில் கோவிட்-19 லாக்டவுன் மற்றும் உக்ரைன் ரஷ்யா போர், பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்டவை இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் தேவையை பாதிக்கலாம் என எச்சரித்த ஆய்வாளர்களின் கணிப்புகளை பிரதிபலிக்கிறது குறிப்பிடத்தக்கது.

போன்களுக்கான ஏற்றுமதி மையமாக இந்தியா

போன்களுக்கான ஏற்றுமதி மையமாக இந்தியா

உலகளாவிய உற்பத்தி தளத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது, போன்களுக்கான ஏற்றுமதி மையமாக இந்தியாவை உருவாக்குவது மற்றும் உள்நாட்டு தேவையை உள்நாட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்தல் போன்ற பிஎல்ஐ திட்டத்தின் கீழ் அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை ஆப்பிள் அதன் முதலாண்டு செயல்திறனிலேயே அடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விஸ்ட்ரான் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகிய ஒப்பந்த நிறுவனங்கள்

விஸ்ட்ரான் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகிய ஒப்பந்த நிறுவனங்கள்

ஆப்பிள் சாதனங்கள் அதன் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் விஸ்ட்ரான் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகிய ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் ஐபோன்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த இரண்டு நிறுவனங்கள் மூலமாக ஆப்பிள் இலக்கை அடைந்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களில் விஸ்ட்ரான் பெற்றிருக்கிறது. குறிப்பிட்ட காரணங்களால் விஸ்ட்ரான் நிறுவனம் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் மூடும் நிலை ஏற்பட்டது இதன் காரணமாக விஸ்ட்ரான் அதிக பங்கை பெற்றிருக்கிறது. ஆப்பிளின் மூன்றாவது ஒப்பந்த உற்பத்தியாளராக பெகாட்ரான் இருக்கிறது. இந்த நிறுவனம் ஏப்ரல் 1 முதல் உற்பத்தியை தொடங்கும். எனவே வரும் ஆண்டுகளின் செயல்பாட்டில் இருந்து ஆப்பிள் ஏற்றுமதி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்ட்ரான் நிறுவனம் கர்நாடகாவிலும், ஃபாக்ஸ்கான் தமிழகத்திலும் அமைந்திருக்கிறது.

ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 ஆகிய சாதனங்கள்

ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 ஆகிய சாதனங்கள்

அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட மாடல்களில் ஐபோன் எஸ்இ 2020-க்கு முக்கிய பங்கு இருக்கிறது. இது விஸ்ட்ரான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. மேலும் ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 ஆகிய சாதனங்கள் ஃபாக்ஸ்கானால் தயாரிக்கப்படுகின்றன. ஃபாக்ஸ்கான் விரைவில் ஐபோன் 13 சாதனத்தை இந்தியாவில் தயாரிக்க தொடங்கும் என ஆதாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

File Images

Best Mobiles in India

English summary
Apple Plan to Decrease its Iphone and Airpods Production: Here the Reason
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X