மாணவிக்கு ரூ.35 கோடி இழப்பீடு வழங்கிய ஆப்பிள் நிறுவனம்.! காரணம் இதுதான்.!

|

ஆப்பிள் ஐபோன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனங்களும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் ஆப்பிள் ஐபோன்களின் விலை சற்று உயர்வாக இருந்தாலும் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் உள்ளன என்றுதான் கூறவேண்டும்.

 ஐஒஎஸ் 15, ஐபேட் ஒஎஸ் 15, பிரைவசி ப்ரோடெக்ஷன், மேக் ஒஎஸ் மற்றும் வாட்ச் ஒஎஸ் 8 போன்ற பல அ

அண்மையில் புதிய ஐஒஎஸ் 15, ஐபேட் ஒஎஸ் 15, பிரைவசி ப்ரோடெக்ஷன், மேக் ஒஎஸ் மற்றும் வாட்ச் ஒஎஸ் 8 போன்ற பல அம்சங்கள் பற்றி அறிமுகம் செய்து நிகழ்வைச் சிறப்பாக்கினார் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் அவர்கள். கண்டிப்பாக இந்த புதிய ஒஎஸ் அப்டேட் ஆனது பல்வேறு ஐஒஎஸ் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

 35 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளதாக தகவல்

இந்நிலையில் அமெரிக்காவில் ஒரு மாணவியின் ஆபாசப் படம் கசிந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் 35 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ஜூன் 21 முதல் இலவச தடுப்பூசியா? எப்படி இந்த தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது?18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ஜூன் 21 முதல் இலவச தடுப்பூசியா? எப்படி இந்த தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது?

ஐபோன்களை பழுதுபார்க்க முடியும் என்று

அதாவது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தில் செயல்படும் பெகாட்ரன் என்ற நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் உரிமம் பெற்று, அதன் ஐபோன்களை பழுது பார்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. அதாவது இந்நிறுவனத்தின் ஐபோன்களைபெகாட்ரானில் பழுதுபார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

48எம்பி ரியர் கேமராவுடன் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?48எம்பி ரியர் கேமராவுடன் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

ஐபோனில் சில ஆபாசப் படங்கள்

அதன்படி இந்நிறுவனத்தில் ஒரு மாணவி, தன் ஆப்பிள் ஐபோனை பழுது பார்க்ககொடுத்துள்ளார். பின்பு மாணவி கொடுத்தஐபோனை பெகாட்ரன் பொறியாளர்கள் பழுது பார்த்துள்ளனர், அப்போது மாணவியின் ஐபோனில் சில ஆபாசப் படங்கள்
இருந்ததாக கூறப்படுகிறது.

பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..

 பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்

இதை பார்த்ததுடன் நிற்காமல், மாணவியின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர். மேலும் பேஸ்புக் தளத்தில் சக தோழிகள் இதை பார்த்து, அந்த மாணவியிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி வழக்கறிஞர்களை நாடினார்.

சும்மா இல்ல., 62% தள்ளுபடி- அந்த விலை ஸ்மார்ட்போனே இந்த விலையில்: பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் சேல்!சும்மா இல்ல., 62% தள்ளுபடி- அந்த விலை ஸ்மார்ட்போனே இந்த விலையில்: பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் சேல்!

பெகாட்ரன் நிறுவனத்திடம் பல

வழக்கறிஞர்கள் பெகாட்ரன் நிறுவனத்திடம் பல கோடி ரூபாய் இழப்பீடு கேட்டனர். அதற்கு அந்நிறுவனம் மறுத்து விட்டது. இதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் பெகாட்ரன் வாயிலாக அந்த மாணவிக்கு 35 கோடி ரூபாய் கொடுத்து இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவந்தது.

நிறுவனங்களும் பொறுப்பேற்க

அதாவது அமெரிக்காவில் உள்ள சட்டப்படி, தனி உரிமம் பெற்று இயங்கும் நிறுவனங்களின் பணி சார்ந்த சட்ட விரோத செயல்களுக்கு, அவற்றுக்கு உரிமம் அளித்த நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும் என்பது குறுப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple pays Rs 35 crore compensation to student: This is the reason!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X