Apple பயனர்களுக்கு குட் நியூஸ்.. இந்தியாவுக்கு வருகிறது புதிய செயலி.. எதற்கு தெரியுமா? இதோ விவரம்..
இந்தியாவில் கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற யுபிஐ செயலிகளை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலிகள் மூலம் விரைவாகப் பணம் அனுப்ப முடிகிறது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனமும் ஆப்பிள் பே (Apple Pay) எனும் செயலியை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் பே (Apple Pay)
குறிப்பாக இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ பணப்பரிவர்த்தனையைத் தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர். அதுவும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளைத் தான் பெரும்பாலான இந்தியர்கள் பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்கின்றனர்.

இந்த நிலையில் ஆப்பிள் பே செயலியை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ஏதுவாக ICICI, HDFC, Axis வங்கிகளுடன் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த 2026-ம் ஆண்டின் பிற்பகுதியில் ஆப்பிள் பயனர்களுக்கு இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஆப்பிள் பே செயலி செயலியில் வேகமாகவும், பாதுகாப்பாகவும் பணம் அனுப்ப முடியும்.
ஐபோன் 17இ
மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்படி, ஆப்பிள் (Apple) நிறுவனம் வருகிற மார்ச் மாதம் ஒரு சிறப்பு நிகழ்வை (Special event) நடத்துவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்வில் ஐபோன் 17இ (iPhone 17e) மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த ஐபோன் 17இ மாடலின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஐபோன் 17இ அம்சங்கள் (iPhone 17e Specifications): ஆப்பிள் ஏ19 சிப் (Apple A19 chip) உடன் ஐபோன் 17இ மாடல் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஒஎல்இடி(Super Retina XDR OLED)டிஸ்பிளே வசதியுடன் இந்த ஐபோன் 17இ மாடல் வெளியாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
குறிப்பாக சி1எக்ஸ் மோடம் (C1X modem) வசதி இந்த ஐபோன் 17இ மாடலில் உள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி இந்த போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
அதுவும் 48எம்பி சிங்கிள் ரியர் கேமரா உடன் ஐபோன் 17இ ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆகவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான வீடியோக்கள் மற்றும் படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

ஆப்பிள் ஐபோன் 17இ மாடல் 4005எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஐபோன் மாடல் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் MagSafe சப்போர்ட் கொண்டுள்ளது இந்த புதிய ஐபோன். பிளாக், ஒயிட், லாவெண்டர் நிறங்களில் இந்த புதிய ஆப்பிள் ஐபோன் வெளிவரும்.
மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ஐபோன் 17இ மாடல் $599 (இந்திய மதிப்பில் ரூ.54,310) விலையில் அறிமுகம் செய்யப்படும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஐபோன் 17இ மாடல் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
Image Credit: ShutterStockies/ Shutterstock, beebom


Click it and Unblock the Notifications