Home
News

அந்தரங்க உரையாடல்களை ஒட்டுக்கேட்கிறது ஆப்பிள்! முன்னாள் ஊழியர் கூறியது என்ன? சிக்கலில் ஆப்பிள்.!

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வகம் காட்டி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலக முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும்.

 ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11ப்ரோ

ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11ப்ரோ

குறிப்பாக இந்நிறுவனம் ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11ப்ரோ மாடல்களை வருகிற செப்டம்பர் 10-ம் தேதி அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்க்பபடுகிறது. பின்பு இந்த சாதனங்களின் விலை சற்று உயர்வாக இருக்கும் என்றும், பின்பு விலைக்கு தகுந்த பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் இந்த சாதனம் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஊழியர்

முன்னாள் ஊழியர்

இந்நிலையில் ஆப்பிள் சாதனங்களில் இருக்கும் சிரி மென்பொருள் பயனாளர்களின் பாலியல் உரையாடல்கள் உள்ளிட்ட அந்ததரங்க உரையாடல்களை கேட்பது தான் எங்களது பணியாக இருந்தது என ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் தெரிவித்துள்ளார். இந்த செயதி அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களில் பயனாளர்களின் தனிநபர் தகவல்களைப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்றோம் என்று உறுதியளித்துவருகிறது. இந்நிலையில் பயனாளர்களின் அந்தரங்க தகவல்களை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது என்று மிகப்பெரிய புகார் எழுந்துள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நிலை குறித்த உரையாடல்கள்

உடல்நிலை குறித்த உரையாடல்கள்

சில நாட்களுக்கு முன்பு திகார்டியன் செய்தி நிறுவனத்தில் ஒரு செய்தி வெளியானது, அது என்னவென்றால் ஆப்பிள் நிறுவனத்திற்கு வேலை செய்யும் கார்க் பகுதியைச் சேர்ந்த நிறுவனத்தின் பணியாளர்கள் ஆப்பிள் ஐபோன்களில் இருக்கும் சிரி மென்பொருளில் சேகரிக்கப்படும் பயனாளர்களின் உரையாடல்களை கேட்பதற்காக
பணிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் பயனாளர்களிள் அந்த பாலியல் உறவு சார்ந்த உரையாடல்கள், மருந்துகள் தொடர்பான உரையாடல்கள், உடல்நிலை குறித்த உரையாடல்கள் உள்ளிட்ட அந்தரங்க உரையாடல்களையும் கேட்டுள்ளனர்.

ஐரிஸ் எக்ஸாமினர்

ஐரிஸ் எக்ஸாமினர்

பின்பு இதுகுறித்து, அந்தப் பணயில் ஈடுபட்டிருந்த முன்னாள் ஊழியர் ஐரிஸ் எக்ஸாமினர் என்பர் செய்திநிறுவனத்திற்கு அளித்த பேட்யில் குளோப்டெக் என்ற நிறுவனத்தில் பணியாற்றிய நாங்கள், சிரி மென்பொருளின் செயல்பாடு தன்னிச்சையாளதா அல்லது எதிர்பாரத விதமாக செயல்படுகிறதா என ஆய்வு செய்வோம். சரி சரியா செயல்படுகிறதா என கண்காணிக்க வேண்டும், குறிப்பாக ஒவ்வொரு பணியாளரும் ஒரு நாளைக்கு 1000 சிரி ஒலிப்பதிவுகளை கேட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஆப்பிள் சர்வருக்கும் அனுப்பப்படும்

ஆப்பிள் சர்வருக்கும் அனுப்பப்படும்

மேலும் கேட்கப்படும் ஒலிப்பதிவுகள் பெரும்பாலும் சில விநாடிகள் மட்டுமே ஓடக்கூடியது என்றும்,சில நேரங்களில் பயனாளர்களின் தனிப்பட்ட உரையாடல்களையும் கேட்போம் என்று தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்கு
பதில் கூறிய ஆப்பிள் நிறுவனம் சிரியில் சேமிக்கப்படும் குறைந்த அளவிளான தகவல்கள், சிரியை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் என்றும், சிரியில் சேகரிக்கப்படும் தகவல்கள் ஆப்பிள் சர்வருக்கும் அனுப்பப்படும். எனவே அதனை மனிதர்கள் ஆய்வு செய்யமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Apple patching up private conversations! Problem with the fact that the former employee said! : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X