iPhone-க்கு Starlink சாட்டிலைட் கனெக்டிவிட்டி.. SpaceX மற்றும் டி-மொபைலுடன் Apple கைகோர்ப்பு!
அமெரிக்காவில் ஐபோன்களை (iPhones) வைத்திருக்கும் யூசர்களுக்கு இனிமேல் ராஜயோகம்தான் என்று சொல்லும்படி ஆப்பிள் (Apple) நிறுவனமானது, சாட்டிலை மூலம் கனெக்டிவிட்டி வழங்க இருக்கிறது. இதற்காக ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் (Starlink) மற்றும் டி-மொபைல் (T-Mobile) நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது. ஆகவே, ஸ்டார்லிங்க் சாட்டிலைட் சேவைகள் நேரடியாக ஐபோன் வைத்திருக்கும் யூசர்களுக்கு அவசர காலங்களில் உதவ இருக்கிறது.
ஆப்பிள் போன் வைத்திருந்தாலே, ஒரு தனி கெத்துதான். அப்படியான மனநிலை ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே இருக்கிறது. ஐபோன்களில் கிடைக்கும் பீச்சர்கள் மற்றும் குவாலிட்டியை பார்த்தால், அது உண்மைதான் என்பதையும் மறுக்க முடியாது. இப்போது, நேரடியாக ஸ்டார்லிங் சாட்டிலைட் கனெக்டிவிட்டியை பீட்டா டெஸ்டிங்கில் பெற்று இருக்கிறது.

அமெரிக்காவில் இருக்கும் ஐபோன் யூசர்கள் மட்டும் பயன்படுத்தும்படியான சாட்டிலைட் சேவையை ஆப்பிள் நிறுவனம் அதன் ஐஓஎஸ் 18.3 (iOS 18.3) அப்டேட்டில் கொடுத்து இருக்கிறது. இந்த அப்டேட் பீட்டா டெஸ்டிங்கில் இருக்கிறது. இதன் மூலம் ஐபோன் யூசர்கள் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் சாட்டிலைட்கள் மூலம் கனெக்டிவிட்டியை பெற்று கொள்ள முடிகிறது.
இதற்காக ஆப்பிள் நிறுவனம், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டி-மொபைல் நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது. இந்த ஸ்டார்லிங்க் சாட்டிலைட் கனெக்டிவிட்டி மூலம் மெசேஜ்களை மட்டுமே அனுப்ப முடியும். அதுவும் குறிப்பிட்ட அளவில்தான் அனுப்பு முடிகிறது. அதற்கான அனுமதியை மட்டுமே ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது. ஆனால், இது கூடுதலாக்கப்பட இருக்கிறது.
அதாவது, இப்போதைக்கு டெஸ்டிங்கில் மட்டும் செல்லூலார் கனெக்டிவிட்டி இல்லாமலேயே மெசேஜ் அனுப்பி கொள்ள முடிகிறது. ஆனால், வரும் காலங்களில் மீடியம் ரெசொலூஷன் கொண்ட இமேஜ்கள், மியூசிக் மற்றும் பாட்காஸ்ட்களை பகிரும்படியான சேவையை வழங்க திட்டமிட்டப்பட்டுள்ளது. ஆனால், இது அமெரிக்காவில் இருக்கும் யூசர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
ஐஓஎஸ் 18.3 அப்டேட்டை பெற்ற ஐபோன் யூசர்களுக்கு மட்டும், "நீங்கள் டி-மொபைல் மற்றும் ஸ்டார்லிங்க் பீட்டாவில் இருக்கிறீர்கள். இப்போது, நீங்கள் எங்கிருந்தாலும் சாட்டிலைட் மூலமாக மெசேஜ் அனுப்பி கொள்ளலாம்" என்று அப்டேட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஐபோன் 14 யூசர்கள் பலருக்கும் இந்த ஐஓஎஸ் 18.3 பீட்டா டெஸ்டிங் அப்டேட் கிடைத்து இருக்கிறது.
ஆகவே, வழக்கமாக பயன்படுத்தி வரும் செல்லூலார் நெட்வொர்க் கிடைக்காத பகுதிகளில் இந்த ஸ்டார்லிங்க் சாட்டிலைட் சேவைகள் மூலம் அவசர காலங்களில் தொடர்பில் இருக்க முடியும். இந்த கனெக்டிவிட்டி ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலிலும் வர இருக்கிறது. ஏனென்றால், மலையேற்றம், செல்லூலார் சேவைகள் இல்லாத பகுதிகளில் சுற்றுலா போன்றவை அமெரிக்காவில் வழக்கமாகும்.
இதனாலேயே, ஆப்பிள் நிறுவனத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களில் வரும் சாட்டிலைட் கனெக்டிவிட்டி பீச்சர்கள் கூடுதல் கவனம் பெறுகின்றன. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் சாட்டிலைட்கள் டைரெக்ட்-டூ-செல் டெக்னாலஜி (Direct-to-Cell Technology) கொண்டிருக்கிறது. இதை ஸ்மார்ட்போனை சாட்டிலைடுடன் இணைக்கும் பிரத்யேக சேவை என்றும் சொல்லலாம்.
ஆகவே, இந்த டைரெக்ட்-டூ-செல் டெக்னாலஜி சாட்டிலைட்கள் பூமியின் வளிமண்டல சுற்றுப்பாதையில் குறைந்த தூரத்திலேயே இருக்கும். அதோடு ஈநோட்பி (eNodeB) மோடம்களை கொண்டிருக்கும். இந்த அட்வான்ஸ் மோடம் மூலம், வளிமண்டலத்தில் இருக்கும் செல் டவர்களை போலவே சாட்டிலைட்களை பயன்படுத்தி கொள்ள முடியும்.
எல்இடி (LTE) கனெக்டிவிட்டி கொண்ட ஸ்மார்ட்போன்களில் இந்த சேவையை பயன்படுத்தலாம். மெசேஜ், வாய்ஸ், டேட்டா கனெக்டிவிட்டிகள் இருக்கின்றன. ஆனால், இது இப்போதைக்கு விலை உயர்ந்த சேவையாக இருக்கிறது. இதனாலேயே ஐபோன்களில் மெசேஜ்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது வரும் காலங்களில் மாறவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








