Apple நிறுவனத்தின் 5வது ஸ்டோர் திறப்பு.. எந்த ஊரில்? இந்த ஆண்டு மட்டுமே இந்தியாவில் 3 கடைகள் திறப்பு!
ஆப்பிள் (Apple) நிறுவனம் தற்போது இந்தியாவில் அதன் ஐந்தாவது ரீடெயில் ஸ்டோரை திறந்துள்ளது. நாடு முழுவதும் சுமார் ஒரு தசாப்த காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர்கள் இருந்தபோதிலும், ஆப்பிளின் அதிகாரப்பூர்வ ரீடெயில் ஸ்டோர்கள் (முழுக்க முழுக்க ஆப்பிள் நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டோர்கள்) சுமார் 2 ஆண்டுகள் மட்டுமே இங்கு உள்ளன.
முதலாவது ஸ்டோர் - அக்டோபர் 2023 இல் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் (பிகேசி) திறக்கப்பட்டது. இப்போது, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிள் ரீடெயில் ஸ்டோர்களின் எண்ணிக்கை ஆனது ஐந்தாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐந்தாவது ரீடெயில் ஸ்டோர் ஆனது டிசம்பர் 11, 2025 அன்று நொய்டாவில் திறக்கப்பட்டது. இந்த புதிய ஸ்டோர் இந்தியாவின் டிஎல்ப் மால் செக்டார் 18 இல் அமைந்துள்ளது.

இப்போது நொய்டாவில், ஆப்பிள் ரசிகர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் அதிகாரப்பூர்வ ஆப்பிள் தயாரிப்புகளை நேரில் பார்த்து அனுபவிக்க ஒரு புதிய ஹாட்ஸ்பாட் உள்ளது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஆப்பிள் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் மூன்று புதிய கடைகளை திறந்துள்ளது - புனே, பெங்களூரு, இப்போது நொய்டா!
இந்த கடைகளில் அனைத்து அதிகாரப்பூர்வ ஆப்பிள் தயாரிப்புகளையும் - பயனர்கள் தொடவும் பயன்படுத்தி பார்க்கவும் காட்சிப்படுத்தப்படும். ஆப்பிள் ரீடெயில் ஸ்டோர்களில் உள்ள சிறப்பு என்னவென்றால், அனைத்து ஐபோன் கலர்களையும், சமீபத்திய சீரீஸின் வகைகளையும் நீங்கள் காணலாம். இது உங்களுக்கான சரியான டிவைஸை வாங்க உதவுகிறது.
இது ஐபோன்களுக்கு மட்டுமல்ல, மேக்புக் மாடல்களுக்கும், ஆப்பிள் நிறுவனத்தின் பிற ஐஓடி (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்) தயாரிப்புகளுக்கும் பொருந்தும். ஆப்பிள் வாட்ச் மற்றும் ஆடியோ தயாரிப்புககளும் இதில் அடங்கும். ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டோர்கள் - ஷாப்பிங் அனுபவத்தை உயர் தரமாக நிர்ணயித்துள்ளது.
மேலும் ஆப்பிள் ரீடெயில் ஸ்டோர்கள் ஆனது சிறந்த மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களையும் கொண்டு உள்ளது. அவர்கள் தயாரிப்புகளை நன்கு அறிந்தவர்கள், மேலும் அவர்களால் நுகர்வோரின் தேவைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு சரியான தயாரிப்பை பரிந்துரைக்கும் திறனையும் கொண்டு உள்ளனர்.
புதிய கடைகள் ஒருபக்கம் இருக்க, வரவிருக்கும் புதிய ஆப்பிள் தயாரிப்புகளை பொறுத்தவரை, ஆப்பிள் நிறுவனமானது, ஐபோன் சிப் (iPhone Chip) உடன் கூடிய மலிவான மேக்புக் (MacBook) மாடலை சோதித்து வருவதாக கூறப்படுகிறது. ப்ளூம்பெர்க்கின் குர்மன் (Bloomberg's Gurman) வழியாக கிடைத்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி, தற்போது இந்த மேக்புக் மாடலானது ஆரம்பகால தயாரிப்பு நிலையில் இருக்கிறது
ஆப்பிள் நிறுவனம் இதை 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கூடவே அந்த அறிக்கை, இந்த மேக்புக் மாடலின் டிஸ்பிளே மற்றும் எதிர்பார்க்கப்படும் விலையையும் அது வெளிப்படுத்தியுள்ளது. கிடைக்கப்பெற்ற அறிக்கையின்படி, ஜே700 என்கிற இன்டர்னல் கோட்நேம் (internal codename) உடன் கூடிய இந்த புதிய நோட்புக் ஆனது ஆப்பிளின் வழக்கமான எம்-சீரிஸ் சிப்களுக்கு (M-Series Chip) பதிலாக ஏ-சீரிஸ் ஐபோன் சிப்பின் (A-Series iPhone Chip) கீழ் இயங்கும்.
மேலும் இது ஏற்கனவே இருக்கும் 13.6-இன்ச் மேக்புக் ஏர் மாடலை விட சற்று சிறியதாக இருக்கும் லோ-எண்ட் எல்சிடி ஸ்க்ரீனை (lower-end LCD screen) பயன்படுத்தும். ஒட்டுமொத்தமாக ஆப்பிளின் இந்த பட்ஜெட் விலை மேக்புக் ஆனது - சாதாரண பயனர்கள், மாணவர்கள் மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த லேப்டாப் ஆனது இன்டர்நெட் ப்ரவுஸிங், டாக்குமெண்ட் வொர்க் மற்றும் 'லைட்' ஆன மல்டிமீடியா டாஸ்க்களுக்கு தங்கள் லேப்டாப்களை நம்பியிருப்பவர்களை இலக்காக கொண்டிருக்கும்.
விலையை பொறுத்தவரை இந்த மாடல் $1,000 க்கும் குறைவான விலையில் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.88,000 க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படலாம். அதாவது இது க்ரோம்புக்ஸ் (Chromebooks) மற்றும் என்ட்ரி லெவல் விண்டோஸ் (Windows) லேப்டாப்களுக்கு நேரடி போட்டியாளராக நிலைநிறுத்தப்படலாம்


Click it and Unblock the Notifications








