ஆப்பிள் ஒன் சேவை அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.! என்னென்ன நன்மைகள்?

|

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதன்படி புதிய ஐபாட் 8 வது ஜென் மற்றும் ஐபாட் ஏர் 4-இன் வெளியீட்டு நிகழ்வின் போது, ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஆப்பிள் ஒன் சந்தாவையும் அறிவித்தது. இது ஆப்பிள் வழங்கும் அனைத்து சேவைகளுக்கான சந்தாக்களின் தொகுப்பாகும்.

ஐக்ளவுட் ஸ்டோரேஜுக்கு

ஆப்பிள் ஒன் சந்தா இப்போது இந்தியாவில் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் ஆப்பிள் ஒன்
சந்தாவின் கீழ் இரண்டு திட்டங்கள் உள்ளன. தனிநபர் திட்டத்தின் மூலம் நீங்கள் ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் டிவி
பிளஸ் மற்றும் 50ஜிபி ஐக்ளவுட் ஸ்டோரேஜுக்கு மாதத்திற்கு ரூ.195 செலுத்த வேண்டும்.

200ஜிபி ஐக்ளவுட் ஸ்டோரேஜை

மேலும் குடும்பத் திட்டத்துடன், நீங்கள் தனிப்பட்ட திட்டத்தின் அதே நன்மைகளைப் பெறுவீர்கள், ஆனால் 200ஜிபி ஐக்ளவுட்ஸ்டோரேஜை பெறுவீர்கள். குறிப்பாக இந்த குடும்பத் திட்டம் மாதத்திற்கு ரூ.365-விலையில் கிடைக்கும்.

நிமிடத்தில் விமானமாக மாறிய ஸ்போர்ட்ஸ் கார் வீடியோ.. மிரளவைத்த ஏர்கார் தொழில்நுட்பம்..நிமிடத்தில் விமானமாக மாறிய ஸ்போர்ட்ஸ் கார் வீடியோ.. மிரளவைத்த ஏர்கார் தொழில்நுட்பம்..

ப்பிள் ஃபிட்னெஸ்

அதன்பின்பு ஆப்பிள் ஃபிட்னெஸ் பிளஸ் போன்ற வரவிருக்கும் சேவைகள் ஆப்பிள் ஒன் சந்தாவின் கீழ் தொகுக்கப்படும், ஆனால் ஆப்பிள் ஃபிட்னெஸ் இந்தியாவில் தொடங்குப்படுமா இல்லையா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

பரிந்துரைகளையும் பெறுவார்கள்

இவற்றின் குடும்பத் திட்டத்தில் உள்ள அனைத்து பயனர்களும் தங்கள் சொந்த ஆப்பிள் ஐடியுடன் லாக் இன் செய்ய முடியும்.இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சேவைக்கும் தனிப்பட்ட அணுகல் கிடைக்கும் மற்றும் அவர்கள் உட்கொள்ளும் உள்ளடக்கத்தின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளையும் பெறுவார்கள்.

 சப்ஸ்க்ரைப் செய்ததும் சேவைகள் கிடைக்கும்

இதை ஒருமுறை சப்ஸ்க்ரைப் செய்ததும் சேவைகள் கிடைக்கும் எந்த தளங்களின் வழியாகவும் நீங்கள் ஆப்பிள் ஒன் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது வெப் வழியாக (ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் டிவி +), தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் டிவிகள் வழியாக (ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் டிவி +), ஆண்ட்ராய்டு வழியாக (ஆப்பிள் மியூசிக்) அல்லது பிற மூன்றாம் தரப்பு ஸ்ட்ரீமிங் சாதனங்கள் வழியாக (ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் டிவி +) ஆப்பிள் ஒன் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 இலவச சோதனை அணு

மேலும் இந்த சேவைகளுக்கு ப்ரீ ட்ரையலையும் நீங்கள் பெறலாம் ஆனால் அதில் ஒரு கேட்ச் இருக்கிறது. நீங்கள் ஏற்கனவே சேராத சேவைகளுக்கு மட்டுமே இலவச சோதனை அணுக கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Apple One now available for users starting at Rs.195 per month: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X