Home
News

ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?

ஆப்பிள் ரசிகர்களுக்கு ஒரு நம்ப முடியாத மகிழ்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள ஆப்பிள் பயனர்களுக்கு மேக்புக் ஏர் எம்2 உட்படப் பல தயாரிப்புகளுடன் இலவசமாக நிறுவனம் இப்போது புதிய ஆப்பிள் ஏர்போட்களை வழங்குகிறது. இது நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 'பேக் டு ஸ்கூல்' சலுகையின் பகுதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகையில் கீழ் தயாரிப்புகளை வாங்குபவர்களுக்குத் தள்ளுபடிகள் மட்டுமின்றி இலவச ஏர்போட்களும் இப்போது கிடைக்கும்.

Apple வழங்கும் 'பேக் டு ஸ்கூல்' சலுகை

Apple வழங்கும் 'பேக் டு ஸ்கூல்' சலுகை

ஆப்பிளின் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் இந்த சலுகை ஏற்கனவே நேரலையில் உள்ளது என்பது ஆப்பிள் ரசிகர்கள் கவனிக்கத்தக்கது. அதேபோல், இந்தச் சலுகை அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர்களால் வழங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும் உள்ளூர் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர்கள் இடமிருந்து, நீங்கள் பேக் ஸ்கூல் தள்ளுபடியைப் பெறலாம். ஆனால் Apple நேரடியாக வழங்கும் 'பேக் டு ஸ்கூல்' சலுகையைப் பெற முடியாது.

எந்த தயாரிப்புகள் மீது இந்த சலுகை செல்லுபடியாகும்?

எந்த தயாரிப்புகள் மீது இந்த சலுகை செல்லுபடியாகும்?

சரி இப்போது இந்த சலுகை பற்றிய முழு விவரங்களைப் பார்ப்போம். ஆப்பிள் இந்தியாவின் இந்த 'பேக் டு ஸ்கூல்' சலுகையின் கீழ் iPad Air 5th Gen, iPad Pro 11' இன்ச் 3rd Gen, iPad Pro 13' இன்ச் 5th Gen, MacBook Air M1, MacBook Air M2, MacBook Pro M2, மற்றும் iMac உள்ளிட்ட பல தயாரிப்புகள் வாங்கக் கிடைக்கிறது. இந்தியர்களுக்கு இப்போது இந்த Back to School சலுகையை லையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.10,000 வரை தள்ளுபடி

ரூ.10,000 வரை தள்ளுபடி

இந்த தயாரிப்புகள் அனைத்தும் இப்போது சலுகையின் கீழ் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது. ஆப்பிள் Mac தயாரிப்புகளின் மீது ரூ.10,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதனுடன் கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது. இதில் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயமாக இலவச AirPodகள் கிடைக்கிறது. ஆறு மாதங்களுக்கு Apple Music மற்றும் Apple Care+ மீதும் 20% தள்ளுபடி கிடைக்கிறது.

இந்த சலுகை யாருக்கெல்லாம் பொருந்தும்

இந்த சலுகை யாருக்கெல்லாம் பொருந்தும்

வாடிக்கையாளர்கள் இப்போது AirPods 3rd Gen மாடலை ரூ.6,400 விலையில் அப்கிரேட் செய்துகொள்ளலாம். அதேபோல், AirPods Pro மாடலை ரூ.12,200 என்ற விலையில் மேம்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த சலுகைகள் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும். மேக்புக் ப்ரோ 16' இன்ச் மற்றும் மேக்புக் ப்ரோ 14' இன்ச் ஆகியவற்றிலும் இந்த சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று ஆப்பிளின் இணையதளம் கூறுகிறது.

புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள்

புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள்

ஆனால், இது பெரும்பாலான மாணவர்களுக்கு அதிக அர்த்தத்தை அளிக்காது. காரணம், இந்த புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள் மிகவும் விலை உயர்ந்தவை. இதை மாணவர்கள் வாங்குவது சந்தேம். மேலும், இவை தொழில்முறை தேவைகளுக்கு ஏற்றதாக இருப்பதால் மாணவர்களால் அவர்களின் திறனைப் பயன்படுத்த முடியாது. சரி, இப்போது இந்த பேக் டு ஸ்கூல் சலுகையில் கீழ் எப்படி நன்மைகளைப் பெறுவதென்று பார்க்கலாம்.

இந்த சலுகை எப்போது வரை கிடைக்கும்?

இந்த சலுகை எப்போது வரை கிடைக்கும்?

உங்களிடம் யுனிவர்சிட்டி ஐடி இருந்தால், 'பேக் டு ஸ்கூல்' சலுகையைப் பெற முடியும். ஆப்பிளின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் உங்களுக்குத் தேவையான சலுகையை வாங்கலாம். இந்தச் சலுகை ஜூன் 24 ஆம் தேதி முதல் துவங்கி செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் மீது உங்களுக்கு ஆர்வம் இருந்தால், அருகில் இருக்கும் ஆப்பிள் ஸ்டோர்க்கு நேரில் சென்று கூடக் கூடுதல் தகவலை விசாரணை செய்து உங்கள் தேர்வை முடிவு செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
Apple Offering Free AirPods With MacBook Air M2 Under Back To School Offer : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X