Home
News

Apple ஆல் செட்.. iOS 19 ஐ iOS 26 ஆக மாற்றுவதன் மூலம் iPhone-களுக்கு வரப்போகும் 4 முக்கிய மாற்றங்கள்!

ஆப்பிள் நிறுவனத்தின் டபுள்யூடபிள்யூடிசி 2025 நிகழ்விற்கு (Apple WWDC 2025) இன்னும் 1 வாரம் மட்டுமே உள்ளது. ஆப்பிளின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (Apple Worldwide Developers Conference 2025) ஆனது ஜூன் 9 ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 13 வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வுக்கு முன்னதாக, ஆப்பிள் நிறுவனம் அதன் டபுள்யூடபிள்யூடிசி பக்கத்தில் ஆன் தி ஹொரைஸன் (On the horizon) என்கிற டேக்லைனை ஸ்லீக் பீக் (Sleek peek) என்கிற புதிய டேக்லைனுடன் மாற்றி உள்ளது .ஸ்லீக் பீக் என்பது ஆப்பிளின் டபுள்யூடபிள்யூடிசி நிகழ்வில் "என்ன காத்திருக்கிறது?" என்பதற்கான முன்னோட்டமாக இருக்கலாம்.

iOS 19 டூ iOS 26.. iPhone-களுக்கு வரப்போகும் 4 முக்கிய மாற்றங்கள்!

குறிப்பாக இது ஐஓஎஸ் 19 (iOS 19) ஆனது ஐஓஎஸ் 26 (iOS 26) ஆக மறுபெயரிடப்பட உள்ளது பற்றிய டேக்லைன் ஆக.. அதன் நேர்த்தியான புதிய வடிவமைப்பை பற்றிய டேக்லைன் ஆக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் ஆப்பிள் செய்யப்போகும் இந்த முக்கியமான மாற்றம் ஆனது வெறுமனே பெயர் அளவில் இருக்காது; இருக்கப்போவதும் இல்லை!

ஐஓஎஸ் 26 வழியாக ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மாடல்களுக்கு பல முக்கிய மாற்றங்களை / மேம்பாடுகளை கொண்டுவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதென்ன மாற்றங்கள்? ஆப்பிள் நிறுவனம் அதன் ஐஓஎஸ் 19 அப்டேட்டை ஐஒஸ் 26 என பெயர் மாற்றம் செய்ய என்ன காரணம்? இதனால் ஆப்பிள் யூசர்களுக்கு கிடைக்கப்போகும் "தீர்வு" என்ன? இதோ விவரங்கள்:

1. ஐபோன்களில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட யுஐ: ஐஓஎஸ் 26 அப்டேட் ஆனது யூசர் இன்டர்பேஸில் ஒரு பெரிய மறுவடிவமைப்பை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யூசர் எக்ஸ்பீரியன்ஸை தரப்படுத்துவதற்காக, ஆப்பிள் நிறுவனம் அதன் விஷன்ஓஎஸ் கூறுகளை ஐஓஎஸ் உடன் ஒருங்கிணைக்க விரும்புகிறது. எனவே, ஐஓஎஸ் 26 ஆனது உங்கள் ஐபோனில் நீங்கள் முன்னெப்போதும் காணாத அளவிலான அட்டகாசமான ஐகான்களை கொண்டு வரக்கூடும்.

2. ஐபோன் ப்ரோ மாடல்களில் டூயல் கேப்சர் மற்றும் மினிமலைஸ்ட் கேமரா ஆப்: ஐஓஎஸ் 26 ஆனது ஐபோன் ப்ரோ மாடல்களில் உள்ள டூயல் கேப்சர் அம்சத்தை கொண்டுவரலாம். அதாவது கேமரா ஆப்பிற்கு முன் பக்க மற்றும் பின் பக்க கேமராக்களை கொண்டு ஒரே நேரத்தில் படம்பிடிக்கும் திறனை வழங்கலாம் மேலும் கேமரா ஆப்பின் நேவிகேஷன் பார் "மினிமலிஸ்டாக" மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

3. ஐபோன்களின் அடிப்பகுதியில் ப்ளோட்டிங் டாக்: ஐஓஎஸ் 26 வழியாக ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் ஸ்க்ரீனின் அடிப்பகுதியில் மிதக்கும் ஒரு டேப்லெட் வடிவ டாக்-ஐ சேர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ப்ளோட்டிங் டாக்கில் ஆப் ஸ்டோர் (App Store), மியூசிக் (Music), போன் (Phone) மற்றும் டிவி (TV) உள்ளிட்ட ஆப்பிளின் அனைத்து சொந்த ஆப்களும் அணுக கிடைக்கும்.

4. ஐபோன்களுக்கான பிரத்யேக கேமிங் ஆப்: ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து புதிய ஐபோன்களிலும் ஒரு பிரத்யேக கேமிங் ஆப்பை ப்ரீ இன்ஸ்டால்ட்டு செய்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆப்பிள் ஆர்கேட் மற்றும் மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர் டைட்டில்களை விளம்பரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் ஏன் ஐஓஎஸ் 19 க்கு பதிலாக ஐஒஸ் 26-ஐ வெளியிடுகிறது? ஆப்பிள் நிறுவனம் அதன் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர்களுக்கு "எப்போதுமே" குழப்பமான முறையில் தான் பெயரிடும். எடுத்துக்காட்டிற்கு ஐபோன் 15 மாடல் ஆனது ஐஓஎஸ் 15 உடன் அறிமுகமாகி இருந்தால், ஐபோன் 16 மாடல் ஆனது ஐஓஎஸ் 16 உடன் அறிமுகமாகி இருந்தால்.. ஆப்பிளின் பெயரிடும் மரபுகளில் எந்த குழப்பமும் இருக்காது.

ஆனால் ஐபோன் 16 மாடல் ஆனது ஐஓஎஸ் 18 கொண்டு இயங்குகிறது. இது குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு பெயர் அமைப்பாகும். இந்த குழப்பம் ஐபோன்களில் மட்டுமில்லை மேக் ஓஎஸ் 16 மற்றும் வாட்ச் ஓஎஸ் 12 போன்ற பொருந்தாத எண்களை கொண்டுள்ள மற்ற ஆப்பிள் தயாரிப்புகளிலும் கூட உள்ளது. எனவே தான் ஆப்பிள் நிறுவனம் காலண்டர் அடிப்படையிலான பெயரிடும் அமைப்பை தேர்வு செய்துள்ளது. இது கார் மாடல்களை போல் செயல்படும் என்று.. அதாவது 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நீங்கள் 2026 மாடலை வாங்குவது போன்ற லாஜிக்கில் செயல்படும் என்று கூறப்படுகிறது.

ப்ளூம்பெர்க்கின் (Bloomberg) சமீபத்திய அறிக்கை கூட - ஆப்பிள் நிறுவனம் அதன் வழக்கமான ஓஎஸ் எடிஷனை பின்பற்றுவதற்கு பதிலாக அந்தந்த ஆண்டை அடிப்படையாக கொண்டு அதன் ஆப்ரேட்டிங் சிஸ்டம்களை மறுபெயரிட திட்டமிட்டுள்ளதாக கூறுகிறது. மேலும் காலப்போக்கில் ஆப்பிள் நிறுவனம் அதன் டிவைஸ்களுக்கும் இந்த பெயரிடும் முறையை கொண்டு வரலாம். அதாவது ஐஓஎஸ் 26-ஐ தொடர்ந்து ஐபேட் ஐஓஎஸ் 26 (iPadOS 26), மேக் ஓஎஸ் 26 (macOS 26), டிவி ஓஎஸ் 26 (tvOS 26), வாட்ச் ஓஎஸ் 26 (watchOS 26) மற்றும் விஷன் ஓஎஸ் 26 (visionOS 26) கூட அறிமுகம் செய்யப்படலாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Not Only Changing The Name iOS 19 into iOS 26 May Brings These Major Changes to iPhones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X