Home
News

Tim Cook ஆட்டம் ஆரம்பம்.. iPhone SE 4 மட்டுமல்ல.. அடுத்த மாசத்துள்ள அறிமுகமாகும் Apple-ன் 5 புது தயாரிப்புகள்!

இதோடு செப்டம்பர் 2025 நெருக்கத்தில் தான் "ஆப்பிளின் அடுத்த அறிமுகம்" என்கிற பேச்சு அடிபடும். அதுவும் "ஐபோன் 17 சீரீஸ்க்காக" என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருந்தால், அது முற்றிலும் தவறு. அடுத்த மாதத்திற்குள் ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து ஐந்திற்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

01. ஆப்பிள் ஐபோன் எஸ்இ 4 (Apple iPhone SE 4): ஆப்பிளின் அடுத்த மிகப்பெரிய அறிவிப்பு - அதன் மலிவு விலையில் ஐபோன் ஆகத்தான் இருக்கும். அது ஐபோன் எஸ்இ 4 மாடல் ஆகும். இந்த மாடல் ஐபோன் 16இ (iPhone 16e) என்கிற பெயரின் கீழ் அறிமுகமும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது ஐபோன் 16 சீரீஸின் பட்ஜெட் விலை மாடலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாசத்துள்ள அறிமுகமாகும் Apple-ன் 5 புது தயாரிப்புகள்!

02. ஆப்பிள் ஐபேட் 11 (Apple iPad 11): இது ஆப்பிளின் மலிவான ஐபேட் மாடலாக இருக்கும். இது ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் ஆதரவு உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் அதன் பட்ஜெட் விலை ஐபேட்களை உருவாக்க தொடங்கியதிலிருந்து வடிவமைப்பில் எந்த மாற்றத்தையும் செய்ததில்லை என்பதால், இதிலும் வடிவமைப்பு மாற்றங்கள் எதுவும் இருக்காது. ஐபேட் மினியைப் போலவே இந்த மாடல் ஏ17 ப்ரோ சிப் உடன் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

03. எம்4 சிப் உடனான மேக்புக் ஏர் (MacBook Air with M4): இது ஒரு சிறிய அப்டேட் ஆக இருக்கும் என்றாலும் ஆப்பிள் நிறுவனம் அதன் மேக்புக் ஏர் மாடல்களில் புதிய எம்4 சிப்பை ஏற்கிறது. இந்த மேக்புக் ஏர் மாடலானது எதிர்பார்ப்பதை விட விரைவில் அறிமுகமாகும் சாத்தியம் உள்ளது. லேட்டஸ்ட் மேக்புக் ப்ரோ மாடல்களில் புதிய சென்டர் ஸ்டேஜ் கேமரா இடம்பெறுவது போல, இந்த புதிய மாடலில் (சிப் மேம்படுத்தலை தாண்டி) பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கமுடியாது.

04. எம்3 சிப் உடனான ஆப்பிள் ஐபேட் ஏர் (iPad Air with M3): ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மனின் கூற்றுப்படி, இதுவும் ஒரு சிறிய அப்டேட் ஆக இருக்கும். இது ஒரு எம்3 சிப் உடன் வரும் மற்றும் ஐபாட் ஏர் மாடல்களுக்கான ஒரு புதிய மேஜிக் கீபோர்டுடன் வரும்.

05. ஆப்பிள் ஸ்மார்ட் ஹோம் டிஸ்ப்ளே (Apple Smart home display): டிஸ்பிளே உடனான ஆப்பிளின் முதல் ஸ்மார்ட் ஹோம் தயாரிப்பும் அடுத்த மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-ஐ ஆதரிக்கும் ஆப்பிளின் முதல் ஹோம் பாட் ஆக இருக்கும். சுவற்றில் பதிக்கக்கூடிய மற்றும் ஸ்பீக்கர்களுடன் இணைக்கக்கூடியதாக இருக்கும் என்றும், இது தோராயமாக 7 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

06. கடைசியாக ஆப்பிள் நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட ஏர்டேக் மாடலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது புதிய அல்ட்ரா வைட் பேண்ட் சிப்செட்டுடன் அறிமுகம் செய்யப்படலாம். மேக் ஸ்டூடியோ (Mac Studio) மற்றும் மேக் ப்ரோ (Mac Pro) போன்ற தயாரிப்புகளை பொறுத்தவரை, இவைகள் 2025 ஆம் ஆண்டின் பாதிக்கு பின்னரே அறிமுகமாகும்.

ஐபோன் எஸ்இ 4 அல்லது ஐபோன் 16இ மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சமீபத்தில் வெளியான ஒரு டம்மி புகைப்படத்தின் வழியாக. இது ஐபோன் 14 மாடலின் வடிவமைப்பை "ஏற்றுக்கொள்ளும்" என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. அலுமினிய ஃபிரேம், கிளாஸ் பேக் மற்றும் சிங்கிள் லென்ஸ் ரியர் கேமரா என ஐபோன் எஸ்4 மாடல் ஆனது பார்க்க ஐபோன் 14 மாடலை போலவே இருக்கலாம்.

ஐபோன் எஸ்இ 4 மாடலில் ஆக்ஷன் பட்டன் அல்லது கேமரா கன்ட்ரோல் பட்டன் இடம்பெறும் என்று கூறப்பட்டாலும், டம்மி புகைப்படங்களில் அதுகுறித்த எந்த அடையாளத்தையும் காண முடியவில்லை. இது தவிர்த்து டிஸ்பிளே, சிப்செட், ரேம், கேமரா என பல விஷயங்களில் ஐபோன் எஸ்இ 4 ஆனது அதன் முன்னோடியை விட பல மேம்பாடுகளை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் எஸ்இ 4 மாடலில் ஒரு பெரிய 6.06-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே இடம்பெறலாம். நினைவூட்டும் வண்ணம் முந்தைய மாடலில் 4.7-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உள்ளது. மேலும் இது ஆப்பிளின் ஏ18 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று வதந்தி பரவுகிறது. இது கணிசமான செயல்திறன் ஊக்கத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். மற்றொரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலை பொறுத்தவரை இது முந்தைய 4ஜிபி ரேம்-ல் இருந்து 8ஜிபி ரேம் ஆக அதிகரிப்பை பெறவும் வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Apple New Launches in 2025 iPhone SE 4 iPad 11 M4 MacBook Air M3 iPad Air Smart Home Display More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X