ஆப்பிள் முதலிடம் கொக்க கோலாவை பின்னுக்குதள்ளியது!!
உலக அளவில் உள்ள பெரிய இன்டர்நேஷ்னல் பிராண்ட் கம்பெனிகளில் ஆப்பிள் நிறுவனம் உலகத்தின் மிகப்பெரிய பிராண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனமே இப்பொழுது முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கூகுள் உள்ளது.
13 வருடமாக முதலிடத்தில் இருந்த கொக்க கோலாவை ஆப்பிள் நிறுவனம் பின்னுக்குதள்ளி முதலிடத்தில் உள்ளது. கடந்த வருடம் இரண்டாவது இடத்தில் இருந்த ஆப்பிள் நிறுவனம் 2011ல் 8வது இடத்தில் இருந்தது இப்பொழுது முதல் இடத்தில் இடக்கிறது.
13 வருடமாக முதலிடத்தில் இருந்த கொக்க கோலா நிறுவனம் இப்பொழுது மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சென்ற வருடம் நான்காம் இடத்தில் இருந்த கூகுள் நிறுவனம் இந்த வருடம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இப்படி பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்தாலும் சென்ற வருடம் 19 வது இடத்தில் இருந்த நோக்கியா இந்த வருடம் 57வது இடத்தில் உள்ளது. சென்ற வருடம் 93 வது இடத்தில் இருந்த பிளாக்பெர்ரி நிறுவனம் இந்த வருடம் டாப் 100ல் கூட இல்லை.
இந்த வரிசையில் உள்ள டாப் 10 பிராண்ட் நிறுவனங்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ஆப்பிள்
ஆப்பிள் பிராண்ட் வேல்யூ : 98,316 மில்லியின் டாலர்
சென்ற வருடத்தை விட வளர்ச்சி : +28%

கூகுள்
கூகுள் பிராண்ட் வேல்யூ : 93,291 மில்லியின் டாலர்
சென்ற வருடத்தை விட வளர்ச்சி : +34%

கொக்க கோலா
கொக்க கோலா பிராண்ட் வேல்யூ : 79,213 மில்லியின் டாலர்
சென்ற வருடத்தை விட வளர்ச்சி : +2%

ஐபிஎம்
ஐபிஎம் பிராண்ட் வேல்யூ : 78,808 மில்லியின் டாலர்
சென்ற வருடத்தை விட வளர்ச்சி : +4%

மைக்கிரோசாப்ட்
மைக்கிரோசாப்ட் பிராண்ட் வேல்யூ : 59,546 மில்லியின் டாலர்
சென்ற வருடத்தை விட வளர்ச்சி : +3%

ஜிஈ
ஜிஈ பிராண்ட் வேல்யூ : 46,947 மில்லியின் டாலர்
சென்ற வருடத்தை விட வளர்ச்சி : +7%

மெக்டோனால்ட்ஸ்
மெக்டோனால்ட்ஸ் பிராண்ட் வேல்யூ : 41,992 மில்லியின் டாலர்
சென்ற வருடத்தை விட வளர்ச்சி : +5%

சாம்சங்
சாம்சங் பிராண்ட் வேல்யூ : 39,610 மில்லியின் டாலர்
சென்ற வருடத்தை விட வளர்ச்சி : +20%

இன்டெல்
இன்டெல் பிராண்ட் வேல்யூ : 37,257 மில்லியின் டாலர்
சென்ற வருடத்தை விட வளர்ச்சி : -5%

டோயோட்டா
டோயோட்டா பிராண்ட் வேல்யூ : 35,346 மில்லியின் டாலர்
சென்ற வருடத்தை விட வளர்ச்சி : +17%

பேஸ்புக்
பேஸ்புக் 52வது இடத்தில் உள்ளது
பேஸ்புக் பிராண்ட் வேல்யூ : 7,732 மில்லியின் டாலர்
சென்ற வருடத்தை விட வளர்ச்சி : +43%
டாப் 100 பிராண்ட் நிறுவனங்களை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications