இந்தியாவில் ஆப்பிள் மியுசிக் வெளியானது..!

Written By:

இந்தியாவில் ஆப்பிள் மியுசிக் சேவை வழங்கப்பட்டுவிட்டது. ஐஓஎஸ் 8.4 வெளியீட்டின் மூலம் இந்த சேவை 100 நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. துவக்க கால சலுகையாக இந்த சேவை முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மாதம் ரூ.120 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயிற்றுக்குள் 'கிலி' கிளப்பும் மவுஸ்கள்..!

இந்தியாவில் ஆப்பிள் மியுசிக் வெளியானது..!

அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் விலை குறைவாகவே இருக்கின்றது. தனி நபர் அக்கவுன்டுகளுக்கு மாதம் ரூ.120, ஆறு பேர் கொண்ட குழுவினருக்கும் மாதம் ரூ.190 என்ற கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் மியுசிக் சேவை மேக் மற்றும் கணினி உள்ளிட்ட ஐஓஎஸ் கருவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது, விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் டூ கணினி - தகவல்களை வேகமாக பறிமாற்றம் செய்வது எப்படி..?

மற்ற சேவைகளை போன்றே இந்த சேவையும் பல்வேறு வகையான பாடல்களை வழங்கும் என்பதோடு இந்த சேவையில் முதல் கட்டமாக சுமாராக 30 மில்லியன் பாடல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொருத்த வரை சோனி மியுசிக், ஜீ மியுசிக், யுனிவர்சல் மியுசிக் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more about:
English summary
As promised, Apple Music is now available for users in India.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot