ஆப்பிள் குறிவைக்கும் இந்தியா-சீனா : ஐபோன் மினி 2014

Posted By: Staff
ஆப்பிள் குறிவைக்கும் இந்தியா-சீனா : ஐபோன் மினி 2014

ஆப்பிள் மற்றும் சாம்சங் பஞ்சாயத்துகள் சில தினங்களுக்கு முன்புதான் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் சிறிய அளவு மற்றும் விலையுடைய போனான "ஐபோன் மினி"-யை 2014ல் வெளியிட திட்டமிட்டுள்ளதாம்.

 

பிரைன் ஜே வைட் என்ற ஆய்வாளர் கூறுகையில் - "ஆப்பிள் விலை குறைந்த மற்றும் சற்றே சிறிய அளவுடைய ஐபோனை வெளியிட அதிகஅளவு வாய்ப்புகள் உள்ளது. மேலும் இந்த ஐபோன் மினி இந்தியா மற்றும் சீனா பயனாளர்களை குறிவைத்து வெளியிடப்படும்". என்றார் அவர்.

 

மேலும் அவர் கூறுகையில் - வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் ஐபோன் 5S வெளியாகும். எனவே இந்த ஐபோன் மினியானது 2014ல் தான் வெளியிடப்படும்." என்றார்.

 

ஐபோன்களின் வளர்ச்சியும் விற்பனையும் அபரிமிதமானதே! ஆனாலும் 2014 வரையெல்லாம் காத்திருக்க வேண்டுமா?

 

உங்கள் தகவல்களை கூகுள் எங்கு சேமிக்கிறது தெரியுமா?[இதைப்பாருங்க]

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot