அப்போ டாக்டர்கள் வேலையும் காலி-ஆ.. Apple-ன் AI Doctor அம்சம்.. இது எப்படி வேலை செய்யும்?
ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது தயாரிப்புகளில் படிப்படியாக - பயனர்களின் ஆரோக்கியத்தை மையபடுத்திய அம்சங்களை சேர்த்து வருகிறது. முன்னதாக இதய துடிப்பு கண்காணிப்பு, எஸ்பிஓ2 விவரங்கள், இசிஜி, காது கேட்க உதவும் அம்சம்.. அவ்வளவு ஏன் ஐபோனின் ஹெல்த் ஆப்பில் சுகாதார அளவீடுகள் கூட சேர்க்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக ஆப்பிள் நிறுவனம் தனிப்பயனாக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதலை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய ஏஐ டாக்டரை (AI Doctor) உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் வழியாக கிடைத்த சமீபத்திய தகவலின்படி, ஆப்பிள் நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சுகாதார அளவீட்டில் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

குர்மனின் கூற்றுப்படி, இந்த அம்சம் ஒரு விர்ச்சுவல் டாக்டரை போல இருக்கலாம், இது பயனர்களின் சுகாதார தரவை அடிப்படையாக கொண்ட நுண்ணறிவுகளை வழங்கலாம். ஆப்பிள் நிறுவனம் இந்த புதிய ஏஐ டாக்டர் டூலை பயிற்றுவிக்க உண்மையான மருத்துவ நிபுணர்களை பணியமர்த்தியதாகவும் கூறப்படுகிறது.
ஐபோனில் உள்ள ஏஐ டாக்டர் அம்சம் எவ்வாறு செயல்படலாம்? குர்மனின் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள ஏஐ ஹெல்த் கோச், ஹெல்த் ஆப்பில் ஒரு விர்ச்சுவல் மெடிக்கல் அசிஸ்டன்ட் ஆக செயல்படும். இது ஐபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் பிற ஹெல்த் கண்காணிப்பு ஆக்சஸெரீஸ்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவை பகுப்பாய்வு செய்யும்.
ஆப்பிளின் மெஷின் லேர்னிங் திறன்களை பயன்படுத்துவதன் மூலம், இதய துடிப்பு முறைகள், தூக்க சுழற்சிகள் மற்றும் செயல்பாட்டு நிலைகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் பயனர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சுகாதார நுண்ணறிவுகளை இந்த ஏஐ டாக்டர் அம்சம் வழங்கும். ஆப்பிள் நிறுவனத்தில் உள்ள சில ஊழியர்கள் இந்த ஏஐ மெடிக்கல் அசிஸ்டன்ட்-ஐ "ஹெல்த்+" என்று குறிப்பிடுவதாகவும் குர்மன் வெளிப்படுத்துகிறார்.
இருப்பினும், இது ஒரு தனி சந்தா அடிப்படையிலான சேவையா அல்லது ஹெல்த் ஆப்பில் இலவசமாக கிடைக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆப்பிள் அதன் ஹெல்த் ஆப்பில் செய்யும் இந்த மறுசீரமைப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்றாலும், மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய அம்சங்களில் ஒன்று - உணவு கண்காணிப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
தற்போதைக்கு ஆப்பிள் நிறுவனத்திடம் பிரத்யேக கலோரி மற்றும் உணவு உட்கொள்ளல் கண்காணிப்பு அமைப்பு இல்லை. ஆனால் ஹெல்த் ஆப்பில் கொண்டுவரப்படும் மாற்றத்தில் இது ஒரு முக்கிய சேர்க்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்கீழ் பயனர்கள் தங்கள் உணவை 'லாக்' (Log) செய்ய முடியும், அதே நேரத்தில் ஏஐஅசிஸ்டன் ஆனது ஊட்டச்சத்து நுண்ணறிவுகளை வழங்கும் மற்றும் ஆரோக்கியமான தேர்வுகளை பரிந்துரைக்கும்.
கடந்த வாரம், ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் முக்கியமான வருடாந்திர நிகழ்வான - டபுள்யூடபுள்யூடிசி 2025 (WWDC 2025) எப்போது நடக்கும் என்கிற தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆப்பிளின் 2025 ஆம் ஆண்டுக்கான வேர்ல்ட்வைட் டெவெலப்பர்ஸ் கான்ஃபிரென்ஸ் (Worldwide Developers Conference 2025) நிகழ்வானது ஜூன் 9 ஆம் தேதி தொடங்கி ஜூன் 13 வரை நடைபெறும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது
ஆப்பிளின் டபுள்யூடபுள்யூடிசி 2025 நிகழ்வின் முதல் மற்றும் முக்கிய அறிவிப்பாக ஐஓஎஸ் 19 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன்கள், ஐபேட்கள் மற்றும் மேக்புக்கள் உள்ளிட்ட ஆப்பிளின் சுற்றுச்சூழல் அமைப்பு முழுவதும் ஒருங்கிணைந்த தோற்றத்தை உருவாக்கும் நோக்கில் ஐஓஎஸ் 19 புதுப்பிக்கப்பட்ட இன்டர்பேஸ்-ஐ அறிமுகப்படுத்தும் என்று ஆரம்பகால தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிளின் ஐஓஎஸ் 19 அப்டேட் ஆனது அப்டேட் கஸ்டமைஷேஷன் விருப்பங்களை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக கண்ட்ரோல் சென்டரில் ஃபோகஸ் மோகளை இன்னும் ஆழமாக ஒருங்கிணைப்பதன் மூலம். பயனர்கள் விட்ஜெட்டுகளின் விரிவாக்கம், சிறந்த பரிந்துரைகள் மற்றும் மேம்பட்ட சிஸ்டம் ஆகியவற்றின் விரிவாக்கத்தையும், சிஸ்டம் முழுவதும் சூழல்-விழிப்புணர்வு வடிவமைப்பையும் காணலாம்
ஐஓஎஸ் 19 அப்டேட்டின் முக்கிய சிறப்பம்சம் - கேமரா ஆப்பின் குறிப்பிடத்தக்க மறுவடிவமைப்பு ஆகஇருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் போட்டோ மற்றும் வீடியோ மோட்களுக்கான புதிய டாகில்களை செயல்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இத்துடன் ரெசல்யூஷன், பிரேம் ரேட் மற்றும் எக்ஸ்போஷர் செட்டிங்ஸ்களுக்கான விரைவான அணுகலையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, போட்டோ லைப்ரரியை உடனடியாக அணுகுவதற்கான பிரத்யேக பட்டனை கொண்ட, வ்யூஃபைண்டர் மேலும் நெறிப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








