2018 : மலிவு விலையில் விற்பனைக்கு வரும் ஐபோன்கள்.!

வரும் 2018-ம் ஆண்டு முதல் ஐபோன்களின் விலை 90 டாலர்கள் குறைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கைரேகை ஸ்கேனர், டச் ஐடி போன்ற அம்சங்கள் இடம்பெறாது எனத் தெரிகிறது.

By Prakash
|

அனைத்து நாட்டு மக்களும் அதிகம் விரும்பும் ஐபோன் மாடல்களை வரும் 2018-ம் ஆண்டு குறைந்த விலையில் விற்பனை செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2018 : மலிவு விலையில் விற்பனைக்கு வரும் ஐபோன்கள்.!

தற்போது வெளிவந்துள்ள ஐபோன் 8 பிளஸ் சாதனங்கள் முறையே டி20 மற்றும் டி22 என்ற பெயர் கொண்டிருந்தது. அந்த வரிசையில் லிஸ்பன் மற்றும் ஹங்ஷௌ போன்ற குறியீட்டு பெயர் ஐபோன்களில் முதல் முறையாக நகரங்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் ஐபோன் எக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாதம் இறுதியில் ஐபோன் எக்ஸ் விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறுது. மேலும் இந்த ஐபோன் மாடலில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

2018 : மலிவு விலையில் விற்பனைக்கு வரும் ஐபோன்கள்.!

ஐபோன் எக்ஸ் சாதனத்தின் வடிவமைப்பை பொறுத்தமட்டில் துருப்பிடிக்காத ஸ்டீல் மற்றும் கண்ணாடி ஆகியவற்றால் உருவாக்கம் பெற்றுள்ளது. இந்த புதிய சாதனம் இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் - வெள்ளி மற்றும் கிரே. இது சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே மற்றும் 2436ஒ1125 மற்றும் 458பிபிஐ என்ற திரை தீர்மானம் கொண்ட 5.36 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ளது. அகச்சிவப்பு கேமரா, ஸ்பீக்கர், மைக்ரோஃபோன் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ட்ரூ டெப்த் கேமரா அமைப்புடன் வரும் ஐபோன் எக்ஸ் ஒரு 64-பிட் செயலி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

2018 : மலிவு விலையில் விற்பனைக்கு வரும் ஐபோன்கள்.!

வரும் 2018-ம் ஆண்டு முதல் ஐபோன்களின் விலை 90 டாலர்கள் குறைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கைரேகை ஸ்கேனர், டச் ஐடி போன்ற அம்சங்கள் இடம்பெறாது எனத் தெரிகிறது.

இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் ஐபோன் மாடல்களுக்கு அதிக வரவேற்பு கொடுக்கப்படுகிறது, மேலும் மலிவு விலையில்வரும் ஐபோன் மாடல்கள் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Apple may have found a way to make next years iPhone X successors much cheapercs; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X