Home
News

மார்ச் 4 நடக்கும் Apple Special Event.. பட்ஜெட் விலையில் புதிய iPhone உடன் சேர்த்து பல அறிமுகங்கள்!

திடீரென்று, ஆப்பிள் (Apple) நிறுவனம் வருகிற மார்ச் 4 ஆம் தேதி ஒரு சிறப்பு நிகழ்வை (Special event) நடத்துவதாக அறிவித்து உள்ளது. இதுகுறித்த அழைப்பிதழில் ஆப்பிள் நிறுவனமானது ஒரு ஸ்பெஷல் ஆன "ஆப்பிள் எக்ஸ்பீரியன்ஸ்க்கு" தங்களை அழைப்பதாக குறிப்பிட்டு உள்ளது.

ஆப்பிளின் இந்த நிகழ்வு நியூயார்க், லண்டன் மற்றும் ஷாங்காய் முழுவதும் காலை 9 மணிக்கு ET/2 PM GMT/10 PM CST மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த நிகழ்விற்கான சிறப்பு நேரடி ஒளிபரப்பு ஏதேனும் இருக்குமா என்பது குறித்த விவரங்கள் இல்லை.

மார்ச் 4 நடக்கும் Apple Special Event!

ஆப்பிளின் இந்த வெளியீட்டு நிகழ்வில் "பட்ஜெட் விலையில்" புதிய ஐபோன் 17இ (iPhone 17e) உட்பட பல வகையான ஆப்பிள் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 17இ மாடல் ஆனது கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 16இ மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக வரும்.

இது ஆப்பிள் ஏ19 சிப்புடன் வரலாம் என்றும், இது செயல்திறன் அதிகரிப்பு மற்றும் பல மேம்பாடுகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது டைனமிக் ஐலேண்டுடன் கூடிய 6.1இன்ச் திரை மற்றும் ஐபோன் 17 சீரிஸில் காணப்படும் அதே 18MP செல்பீ கேமராவையும் கூட பேக் செய்யலாம். ரியர் பேனலில் சிங்கிள் 48MP கேமரா இருக்கலாம். இந்த மாடல் சுமார் $599 (ரூ.54,500) க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மலிவு விலை ஐபோன் மாடலை தவிர, ஆப்பிள் அதன் மேக்புக் "பேமிலியை" புதுப்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஏ18 ப்ரோ சிப்செட்டுடன் ஒரு புதிய என்ட்ரி லெவல் மேக்புக் அறிமுகம் செய்யப்படலாம். அலுமினிய சேசிஸ் மற்றும் $1000 க்கும் (சுமார் ரூ.90,799) குறைவான விலை நிர்ணயத்தின் கீழ் இது அறிமுகம் செய்யப்படலாம்.

மேலும் ஆப்பிள் நிறுவனம் புதிய ஆப்பிள் M5 மேக்புக் ஏர், அத்துடன் M5 ப்ரோ மற்றும் M5 மேக்ஸ் மேக்புக் ப்ரோ மாடல்களையும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மேக் டிஸ்பிளேக்கள், M4 சிப் உடன் புதுப்பிக்கப்பட்ட ஐபேட் ஏர் மாடல்கள் மற்றும் ஆப்பிள் A18 சிப் உடன் ஒரு புதிய அடிப்படை ஐபேட் ஆகியவற்றையும் நாம் எதிர்பார்க்கலாம்.

ஐபோன் 16இ மாடலின் அம்சங்கள்: முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஐபோன் 16இ ஆனது ஃபேஸ் ஐடி உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஆப்பிளின் ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை ஐபோன் 16இ ஆனது சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமராவுடன் வருகிறது, இது விரிவான ஹை ரெசல்யூஷன் புகைப்படங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இதன் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் விருப்பத்தை வழங்குகிறது. இயல்பாக ஐபோன் 16இ ஆனது 24எம்பி புகைப்படங்களை தான் எடுக்கும், ஆனால் அதிக தெளிவுத்திறன் கொண்ட காட்சிகளுக்கு 48எம்பி மோட்-க்கு மாறலாம்.

இதன் கேமரா செட்டப்பில் போர்ட்ரெய்ட் மோட், நைட் மோட் மற்றும் எச்டிஆர் ஆகிய அம்சங்கள் உள்ளன முன்பக்கத்தில் ஐபோன் 16இ மாடலில் ஆட்டோஃபோகஸுடன் 12எம்பி ட்ரூ டெப்த் கேமரா உள்ளது. வீடியோ ரெக்கார்டிங்கை பொறுத்தவரை, ஐபோன் 16இ மாடல் ஆனது 4கே ரெக்கார்டிங்கை வினாடிக்கு 60 பிரேம்கள் வரை ஆதரிக்கிறது.

இதிலுள்ள டால்பி விஷன் ஆனது மேம்பட்ட கலர்கள் மற்றும் காண்ட்ராஸ்ட் உடன் உயர்தர வீடியோவை ரெக்கார்ட் செய்யவும் அனுமதிக்கிறது. கடைசியாக ஐபோன் 16இ மாடல் ஆனது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்கும் என்று ஆப்பிள் கூறுகிறது. இந்த மாடல் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் சேட்டிலைட் வழியாக மெசேஜ்கள் மற்றும் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ்-களை அனுப்ப உதவும் செயற்கைக்கோள் இணைப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Apple March 4 Event iPhone 17e New MacBook Models and iPads Expected
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X