கூகுள் நிறுவனத்துக்குப் போட்டியாக Apple Maps அறிமுகமானது.. என்னென்ன அம்சங்கள்?
கூகுள் மேப்ஸ் செயலியை உலகம் முழுவதும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். காரணம் என்னவென்றால் முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்துக் கொண்டு செல்வோருக்குப் பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ். இந்நிலையில் கூகுள் மேப்ஸ் செயலிக்குப் போட்டியாக ஆப்பிள் மேப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் மேப்ஸை நேரடியாக வெப் பிரவுசரில் பயன்படுத்தும் வகையில் பொதுப் பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிள் மேப்ஸ் பீட்டரா வெர்ஷன் மட்டுமே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகக் கூகுள் மேப்ஸ் செயலிக்கு இந்த ஆப்பிள் மேப்ஸ் மிகப் பெரிய போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பீட்டா பதிப்பை கூகுள் குரோம் மற்றும் ஆப்பிளின் சஃபாரி பிரவுசரில் நேரடியாகப் பயன்படுத்த முடியும். மேலும் ஆப்பிள் மேப்ஸை தற்போது ஆங்கில மொழியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பக உலகம் முழுவதும் அனைத்து பயனர்களும் இந்த புதிய வசதியைப் பயன்படுத்த முடியும்.
குறிப்பாக டிரைவிங் மற்றும் வாக்கிங் டைரெக்ஷன் சார்ந்த தகவல், ரேட்டிங்ஸ் மற்றும் ரிவ்யூஸ், ஒரு இடத்தை குறித்த தகவல் போன்றவற்றை இதில் இப்போது பெறமுடியும். வரும் நாட்களில் இன்னும் பல அம்சங்கள் இந்த ஆப்பிள் மேப்ஸ் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள beta.maps.apple.com வசதியானது கண்டிப்பான அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதேபோல் கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய புதிய அம்சங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது. அதன்படி சமீபத்தில் கூகுள் மேப்ஸ் செயலி உடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஜெமினி-ஐ (Gemini AI)சேர்ந்து இயங்கும் வகையில் அப்டேட் செய்துள்ளது கூகுள் நிறுவனம். குறிப்பாக இதன் மூலம் நீங்கள் வாய்ஸ் கமெண்ட் வாயிலாகவே நீங்கள் போக வேண்டிய இடத்திற்குக் குறிப்புகளைப் பெற முடியும். அதுவும் பைக் ஓட்டும் போது இந்த இந்த ஜெமினி மற்றும் கூகுள் மேப்ஸ் உடனான உரையாடல் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நீங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால், அதற்கான சார்ஜிங் செய்யும் நிலையத்தைக் கூகுள் மேப்ஸ் வாயிலாக மிகவும் எளிதாக கண்டறிய முடியும். இந்த அம்சம் தற்போது பல்வேறு நாடுகளிலும் கிடைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கூகுள் மேப்ஸ் செயலியை ஓபன் செய்து அதில் உங்களது சார்ஜர் டைப்பை டைப் செய்து சர்ச் கொடுத்தால் போதும் உங்களுக்கு அருகே இருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் சார்ஜ் செய்யும் நிலையத்தை (electric vehicle charging stations) கூகுள் மேப்ஸ் கண்டறிந்து தெரிவிக்கும்.

இந்த கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து, அது சில வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதைப் பார்க்க முடியும். அதாவது இதற்கு ஸ்ட்ரீட் வியூ டைம் டிராவல் (street view time travel) வசதியை நீங்கள் பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த வசதி சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
மேலே குறிப்பிட்டதை போன்ற இன்னும் பல அம்சங்களைக் கொண்டுவந்துள்ளது கூகுள் மேப்ஸ். குறிப்பாக இதுபோன்ற புதிய புதிய வசதிகள் கூகுள் மேப்ஸ் செயலியில் வருவதால் நல்ல வரவேற்பு உள்ளது.
photo courtesy: indiatoday.in


Click it and Unblock the Notifications








