COVID -19 Test Center -ஆப்பிள் மேப் மூலம் கொரோனா சோதனை மையம் குறித்த தகவலை பெறலாம்.!

|

ஆப்பிள் விரைவில் அதன் வரைபட பயன்பாடு மூலம் தங்களது பயனாளிகளுக்கு அருகிலுள்ள கோவிட்-19 சோதனை மையம் குறித்த தகவலை தெரிவிக்க உள்ளது. இதுகுறித்த அறிக்கையின்படி, ஆப்பிள் ஏற்கனவே இதற்கான ஒரு தளத்தை உருவாக்கியுள்ளதாகவும், இதன் மூலம் மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதார மய்யம் குறித்த தகவல், இந்த மையங்களில் தங்களுடைய கோவிட்-19 குறித்த தகவல்களை பதிவு செய்யலாம் .

கோவிட்-19 சோதனை

பதிவு முடிந்த பின்னர் கோவிட்-19 சோதனை மையம் அங்கீகரிக்கப்பட்டு அதன்பின் அந்த பகுதியில் பயனர்களுக்கு தேவையான அருகில் உள்ள இடம் குறித்து ஆப்பிள் வரைபடத்தில் காண்பிக்கத் தொடங்கும் என்று தெரிவிக்கிறது. மேலும் ஒரு சிறப்பு வசதியாக சிவப்பு கலரில் மையங்களின் இருப்பிடங்கள் குறித்த தகவல்கள் தெரிய வரும்

சோதனை மையம்

மேலும் இந்த வரைபடத்தில் சோதனை மையம் இருக்கும் இடத்தை பயனர்களுக்கு காண்பிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த சோதனை மையத்தின் பெயர், அதனுடன் தொடர்புடைய சுகாதார வழங்குநர், தொலைபேசி எண் மற்றும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கான இணைப்பு ஆகிய விபரங்களும் கிடைக்கும்.

கையில காசு இல்ல: யூடியூப் பார்த்து ஏடிஎம்-ஐ உடைக்க முயன்ற இளைஞர்- கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?கையில காசு இல்ல: யூடியூப் பார்த்து ஏடிஎம்-ஐ உடைக்க முயன்ற இளைஞர்- கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

சோதனை எந்த

மேலும் இந்த சோதனை எந்த வகையான இடத்தில் செய்யப்படுகிறது என்ற தகவல்களும் பயனாளர்களுக்கு கிடைக்கும். உதாரணமாக ஒரு ஆய்வகம் அல்லது மருத்துவமனை, அதன் சோதனை தளம், கட்டிடம் , மற்றும் பார்க்கிங் வசதி ஆகியவை குறித்தும் தெரிந்து கொள்ளலாம்

ன்பதைக்

மேலும் அந்த சோதனை மையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு பரிசோதிக்க பரிந்துரை தேவையா அல்லது வருவதற்கு முன்பு அவர்களிடம் போன் செய்து அனுமதி பெற வேண்டுமா? என்பதைக் போன்ற விபரங்களும் கிடைக்கும்.

ப்பிள் வரைபடத்துடன்

ஆப்பிள் வரைபடத்துடன் கூடுதலாக கூகிள் போன்ற சக தொழில்நுட்ப நிறுவனங்களால் செய்யப்பட்ட மாற்றங்கள், அருகில் இருக்கும் உணவகங்கள் குறித்த தகவல்களையும் பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகள் தங்கள் வரைபட பயன்பாட்டை பயன்படுத்தும்போது அருகில் இருக்கும் பொருத்தமான உணவகங்களைக் கண்டறிய உதவுகின்றன

நேரடியாக உணவுகளை

பயனர்கள் நேரடியாக உணவுகளை ஆர்டர் செய்ய முடியும் என்பதும், ஒருவேளை அந்த குறிப்பிட்ட உணவகத்தின் செயல்பாடு சரியில்லை என்றால் அவர் தங்களுக்கு பிடித்தமான வேறு உணவகங்களையும் தொடர்பு கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதற்கு முன்னரே

கூகிள் இதற்கு முன்னரே இதுபோன்ற தொழில்நுட்ப வரைபடங்களை மாற்றியமைத்தது, இதனால் ஒரு பயனர் தங்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையைத் தேடினால், அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகித்தால் முன்கூட்டியே அழைக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
Apple Maps shows nearest COVID-19 Test Center to users: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X