Home
News

முழுவதும் மறுசீரமைக்கப்படும் ஆப்பிள் மேப்ஸ்.!

அந்நிறுவனத்தின் படி, கடந்த நான்கு வருடங்களாக இப்பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், மேப்பிங் மென்பொருளை தனது சொந்த தரவுகளை உள்ளீடாக கொண்டு முற்றிலும் மறுவடிவமைப்பு செய்வதாகவும் தெரிகிறது.

By Vivek Sivanandam

உலகம் முழுக்க பெரும்பாலான பயனர்களின் வழிகாட்டியாக விளங்கும் பொதுவான மொன்பொருள் கூகுள் மேப்ஸ் மட்டும் தான் என சந்தேகமே இல்லாமல் கூறமுடியும். ஆனாலும் மேப்ஸ் பயன்பாட்டில் முதல் போட்டியாளராக இருக்க வேண்டும் என ஆப்பிள் கனவு கண்டு வருகின்றது. தற்போதைய சூழ்நிலையில் கூகுள் அந்த துறையில் முன்னோடியாக இருக்கு நிலையில், தனது மேப்பிங் தொழில்நுட்பத்தில் முக்கிய வடிவமைப்பு மறுசீரமைப்பில் ஆப்பிள் ஈடுபட்டுவருவதால் வருங்காலங்களில் சூழ்நிலை வேறாக இருக்கலாம்.

முழுவதும் மறுசீரமைக்கப்படும் ஆப்பிள் மேப்ஸ்.!

அந்நிறுவனத்தின் படி, கடந்த நான்கு வருடங்களாக இப்பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், மேப்பிங் மென்பொருளை தனது சொந்த தரவுகளை உள்ளீடாக கொண்டு முற்றிலும் மறுவடிவமைப்பு செய்வதாகவும் தெரிகிறது. மேலும் ஆப்பிள் நிறுவனம் அதன் வாகனங்களை உலகம் முழுக்க அனுப்பி, ஆப்பிள் மேப்பை மேம்படுத்தும் வகையில் தேவையான தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபடுத்திவருகிறது.

பயனர்களின் தனியுரிமையை பொறுத்தமட்டில் அதிக முக்கியத்துவம் அளித்து வரும் ஆப்பிள் இந்நிறுவனம், " தகவல்களை திரட்டும் போது பயனர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படும். எடுத்துக்காட்டாக, சேகரிக்கப்படும் படங்கள் மற்றும் லைசென்ஸ் ப்ளேட்களை பிரசுரிக்கும் முன்பு ப்ளர்(Blur) செய்யப்படும்" என்று கூறியுள்ளது.

முழுவதும் மறுசீரமைக்கப்படும் ஆப்பிள் மேப்ஸ்.!

இந்த புதிய தரவுகள் ஆப்பிள் மேப்பின் ஐ-ஓ.எஸ் 12 பீட்டா வெர்சனில் அடுத்த வாரத்திலிருந்து கிடைக்கும். எனினும் இந்த வசதி சான்பிரான்சிஸ்கோ மற்றும் பே ஏரியாவிற்கு மட்டுமே கிடைக்கும். ஆப்பிள் மேப்ஸ்ன் குளோபல் அப்டேட்கள் ஐஓஎஸ்12ன் நிலையான வெர்சனில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அது தென் கலிபோர்னியா முழுவதும் கவர் செய்யும். இந்த புதிய ஆப்பிள் மேப்பில் நிலப்பரப்பு, பசுமை பரப்பு, நீச்சல்குளம், பாதசாரிகள் நடைபாதை என பல்வேறு விளக்கமான தகவல்கள் வழங்கப்படும் வசதிகளும் உள்ளன.

இந்த புதிய வசதி படிப்படியாக அமெரிக்கா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இது தொடர்பாக எந்தவொரு காலக்கெடுவும் குறிப்பிடப்படவில்லை. அதுபோல இந்த புதிய மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் மேப் உலகம் முழுக்க உள்ள பயனர்களுக்கு எப்போது கிடைக்கும் என்ற தகவலும் இல்லை.

முழுவதும் மறுசீரமைக்கப்படும் ஆப்பிள் மேப்ஸ்.!

இந்த புதிய வசதியின் முக்கிய அம்சமே, அனைத்து திசைகள் மற்றும் திருத்தங்கள் சர்வர் சைடு அப்டேட்டாக இருப்பதால், பயனர்கள் மென்பொருளை அப்டேட் செய்யத்தேவையில்லை. 2012க்கு பிறகு டவுன்லோட் செய்யப்பட்ட மேப்ஸ் செயலியிலேயே இந்த புதிய வசதி பயனர்களுக்கு கிடைக்கும். அதுமட்டுமின்றி, இந்த புதிய வசதி ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக்-களிலும் செயல்படும்.
Best Mobiles in India

English summary
Apple Maps is getting a complete design overhaul: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X