விற்பனைக்கு வந்தாச்சு., தாராளமாக வாங்கலாம்: மேக்புக் ப்ரோ, ஏர்பாட்ஸ் 3 விற்பனை தொடக்கம்!

|

மேக்புக் ப்ரோ 2021 மற்றும் ஏர்பாட்ஸ் 3 ஆகியவை கடந்த வாரம் வெளியிடப்பட்டன. இந்த சாதனம் இன்று இந்தியாவில் விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சில முக்கிய காரணங்களால் ஆப்பிள் விற்பனை தேதி மேலும் மூன்று நாட்கள் தாமதப்படுத்த முடிவு செய்ததாக கூறப்பட்டது. அதேபோல் இந்த தாமதத்திற்கான காரணம் தற்போது வரை குறிப்பிடவில்லை. புதிய 14 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் ரூ.1,94,900 மற்றும் கல்விக்கான மாடல் விலை ரூ.1,75,410 ஆகவும் இருக்கிறது. 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் ரூ.2,39,900 மற்றும் கல்விக்கான வேரியண்ட் விலை ரூ.2,15,910 ஆகவும் இருக்கிறது. அதேபோல் ஏர்பாட்ஸ் 3-வது ஜென் விலை ரூ.18,500 ஆகவும் இருக்கிறது. இந்த மேக்புக் ப்ரோ 2021 மற்றும் ஏர்பாட்ஸ் 3 சாதனத்தின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப், ஏர்பாட்ஸ் 3

புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப், ஏர்பாட்ஸ் 3

புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப், ஏர்பாட்ஸ் 3 இறுதியாக விற்பனைக்கு வந்துள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் சென்று ஏர்பாட்ஸ் 3 மற்றும் புதிய எம்ஐ ப்ரோ, எம்ஐ மேக்ஸ் இயங்கும் மேக்புக் ப்ரோ லேப்டாப்களை வாங்கலாம். ஆப்பிள் இந்த மாத தொடக்கத்தில் ஆப்பிள் இந்த மாத தொடக்கத்தில் தனது "அன்லிஷ்ட்" நிகழ்வில் மூன்றாவது தலைமுறை ஏர்பாட்ஸ்களையும் சமீபத்திய 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய எம்ஐ ப்ரோ மற்றும் எம்ஐ மேக்ஸ்

புதிய எம்ஐ ப்ரோ மற்றும் எம்ஐ மேக்ஸ்

புதிய எம்ஐ ப்ரோ மற்றும் எம்ஐ மேக்ஸ்-ல் இயங்கும் மேக்புக் ப்ரோ மடிக்கணினிகள் மற்றும் ஏர்பாட்ஸ் 3 ஆகியவை தொடர்ந்து வெளிவருகிறது. இந்த சாதனம் அக்டோபர் 26 ஆம் தொடங்க இருந்த நிலையில் சிறிது தாமதத்திற்கு பிறகு இன்று விற்பனைக்கு வருகிறது.

ஆப்பிளின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர்

ஆப்பிளின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர்

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோருக்கு சென்று ஏர்பாட்ஸ் 3 மற்றும் புதிய எம்ஐ ப்ரோ, எம்ஐ மேக்ஸ்-ல் இயங்கும் மேக்புக் ப்ரோ லேப்டாப்களை வாங்கலாம். மேக்புக் ப்ரோ 14 மற்றும் மேக்புக் ப்ரோ 16 இரண்டின் முன் பேனல்கள் மேம்பட்ட 1080 பிக்சல் முன்கேமராவை கொண்ட நாட்ச் வடிவமைப்போடு வருகிறது. மடிக்கணினிகள் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் மினி எல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

லிக்யூட் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே

லிக்யூட் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே

ஆப்பிள் தற்போது ப்ரோமோஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய லிக்யூட் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே என கூறப்படுகிறது. மடிக்கணினிகள் எம்ஐ ப்ரோ மற்றும் எம்ஐ மேக்ஸ் சிப்செட் இயக்கப்படுகின்றன. எம்ஐ ப்ரோ மற்றும் எம்ஐ மேக்ஸ் ஆகியவை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட எம்ஐ சிப்பின் உயர் செயல்திறன் பதிப்புகளை வழங்குகிறது. எம்ஐ ப்ரோ ஆனது 10 கோர் சிபியூ உடனான எட்டு உயர் செயல்திறன் கோர்கள் மற்றும் இரண்டு குறைந்த செயல்திறன் கோர்கள் உடன் வருகிறது.

ப்ரீமியம் அம்சங்கள்

ப்ரீமியம் அம்சங்கள்

ஏர்பாட்ஸ் 3 சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கையில், புதிய ஆப்பிள் ஏர்பாட்ஸ் 3 ஆனது முந்தைய ஏர்பாட்ஸ் மாடல் போன்றே இருக்கிறது. ஆப்பிள் ஏர்பாட்ஸ் 3 ஆனது ஏர்பாட்ஸ் ப்ரோ மற்றும் ஏர்பாட்ஸ் மேக்ஸ் சாதனத்தில் காணப்படும் சில ப்ரீமியம் அம்சங்களுடன் வருகிறது. 3டி ஒலி ஆதரவை வழங்க டால்பி ஆடியோ தொழில்நுட்பத்துடன் வருகிறது. அடாப்டிவ் ஈக்யூ அம்சத்தின் மூலம் காதுக்கு பயனரின் காதுக்கு ஏற்ப ஒலியை வழங்கும். இது ஆப்பிள் தனியுரிமை டைனமிக் டிரைவரையும் கொண்டிருக்கிறது. அதேபோல் புதிய ஏர்பாட்ஸ் ஹேண்ட் ஃப்ரீ சிரி கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Macbook Pro, Airpods 3 Sale Started: Here the Specs, Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X