இன்றுமுதல் ஆப்பிள் மேக்புக் ப்ரோ 13 முன்பதிவு: சமீபத்திய எம்2 சிப்செட் ஆதரவு பாஸ்- விலை என்ன தெரியுமா?

|

வாடிக்கையாளர்கள், ஆப்பிள் மேக்புக் ப்ரோ 13 சாதனத்தை ஆப்பிள் இந்தியா இணையதளம் மற்றும் ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை தளங்கள் மூலமாக முன்பதிவு செய்யலாம். இந்த முன்பதிவு இன்று (ஜூன் 17) முதல் தொடங்கப்படுகிறது. சமீபத்திய மேக்புக் வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

ஆப்பிள் மேக்புக் ப்ரோ 13

ஆப்பிள் மேக்புக் ப்ரோ 13

ஆப்பிள் மேக்புக் ப்ரோ 13 சாதனத்தின் அடிப்படை வேரியண்ட் விலை ரூ.1,29,900 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இதன் 512 ஜிபி வேரியண்ட் ரூ.1,49,900 ஆக இருக்கிறது. இந்த இரண்டு வேரியண்ட்களும் ரேம் அளவை ஒரே மாதிரியாக 8ஜிபி என கொண்டிருக்கிறது.

புதிய மேக்புக் ப்ரோ 13 முன்பதிவு

புதிய மேக்புக் ப்ரோ 13 முன்பதிவு

ஆப்பிள் சாதனத்துக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக்புக் ப்ரோ 13 சாதனமானது உலகம் முழுவதும் ஜூன் 17 முதல் ஆர்டருக்கு கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் முன்பதிவு தொடங்கப்படுகிறது. ஆர்டர் ஜூன் 17 முதல் தொடங்கப்பட்டாலும் இந்த சாதனம் உலகளவில் ஜூன் 24 முதல் ஆர்டர் பட்டியலின் அடிப்படையில் கிடைக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

256 ஜிபி வேரியண்ட் மற்றும் 512 ஜிபி வேரியண்ட்

256 ஜிபி வேரியண்ட் மற்றும் 512 ஜிபி வேரியண்ட்

இந்த சாதனமானது க்ரே மற்றும் சில்வர் என்ற இரண்டு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. அதேபோல் இது சமீபத்திய எம்2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேக்புக் ப்ரோ 13 சாதனத்தின் 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,29,900 எனவும் 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,49,900 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு மாடல்களும் முன்னதாகவே குறிப்பிட்டப்படி 8 ஜிபி ரேம் வேரியண்ட்களில் கிடைக்கிறது.

மேக்புக் ப்ரோ 13 சாதனத்துக்கு கிடைக்கும் சலுகைகள்

மேக்புக் ப்ரோ 13 சாதனத்துக்கு கிடைக்கும் சலுகைகள்

மேக்புக் ப்ரோ 13 சாதனத்துக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து பார்க்கலாம். இது அந்தந்த தளங்களில் குறிப்பிட்ட கிரெடிட் கார்ட்கள் மூலம் முன்பதிவு செய்யும் போது ஆறு மாதங்கள் வரை விலையில்லா (No Cost) இஎம்ஐ கட்டண விருப்பங்கள் வழங்கப்படுகிறது. சாதனம் வாங்கும் போது "கல்வி தேவை" என்பதை குறிப்பிட்டு முறையாக ஆவணங்கள் சமர்பிக்கப்படும் பட்சத்தில் இதை ரூ.1,19,900 என வாங்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. கூடுதலாக பயனர்கள் AppleCare+ சேவையை பயன்படுத்தி சாதனத்துக்கான உத்தரவாதத்தை (Warranty) நீட்டித்துக் கொள்ளாலம். முன்பதிவு குறிப்பிடப்பட்டாலும் இந்திய சந்தையில் எம்2 சிப் கொண்ட மேக்புக் ப்ரோ 13 எப்போது முதல் கிடைக்கும் என்பதை ஆப்பிள் குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை.

WWDC 2022 நிகழ்வு

WWDC 2022 நிகழ்வு

இந்த சாதனமானது சமீபத்தில் நடைபெற்ற டெவலப்பர்கள் மாநாடு WWDC 2022 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் தான் ஆப்பிள் நிறுவன் எம்2 சிப்செட்டை அறிமுகம் செய்தது. இதன் சிபியூ மற்றும் கிராஃபிக்ஸ் முந்தை எம்1 சிப்செட்டை விட அதீத செயல்திறனை கொண்டிருக்கிறது. எம்2 சிப்செட் பொருத்தப்பட்ட இரண்டு சாதனங்களை ஆப்பிள் இந்த நிகழ்வில் அறிவித்தது. அது மேக்புக் ஏர் (2022), மேக்புக் ப்ரோ (2022) சாதனமாகும்.

சமீபத்திய எம்2 சிப்செட் வசதி

சமீபத்திய எம்2 சிப்செட் வசதி

மேக்புக் ப்ரோ சாதனம் ஆனது 13-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் சமீபத்திய எம்2 சிப்செட் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டதால், இந்த சாதனத்தின் விற்பனைக்கு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். மேக்புக் ப்ரோ (2022) சாதனம் ஆனது 13-இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே வசதியுடன் வெளிவந்தது. இந்த சாதனமானது புதிய எம்2 சிப்செட் ஆதரவு, 256ஜிபி/512ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ், மேஜிக் கீபோர்டு, 8 கோர் சிபியு, 10 கோர் சிபியு, ஃபோர்ஸ் டச் டிராப்பேட், 20 மணி நேர பேட்டரி பேக்கப் ஆதரவு போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் மத்தியில் கேள்வி

வாடிக்கையாளர்களின் மத்தியில் கேள்வி

சமீபத்திய மேம்பாடு வசதிகள் கொண்ட சாதனத்தை ஆப்பிள் அறிமுகம் செய்த அதே சமயத்தில். மேக்புக் சாதனத்தின் முந்தைய விலையை உயர்த்தி அறிவித்தது. இது பல வாடிக்கையாளர்களின் மத்தியில் கேள்வியை எழுப்பியது. ஐபோன், மேக்புக் உள்ளிட்ட எந்த ஒரு சாதனங்களின் புது மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்ட உடன் அதன் முந்தைய தலைமுறை மாடலின் விலை குறைவாகவே இருக்கும். அதன்படி மேக்புக் ஏர் 2022 எம்2 பதிப்பு வெளியான உடன் மேக்புக் ஏர் 2020 எம்1 பதிப்பு விலை மலிவாக இருக்கும் என்றே வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தனர்.

எம்1 சிப் பொருத்தப்பட்ட மேக்புக் ஏர் விலை அதிகரிப்பு

எம்1 சிப் பொருத்தப்பட்ட மேக்புக் ஏர் விலை அதிகரிப்பு

ஆனால் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றும் விதமாக எம்1 சிப் பொருத்தப்பட்ட மேக்புக் ஏர் 2020 மாடலின் விலை ரூ.92,900 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனத்தின் விலையானது ரூ.99,900 என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆப்பிள தரப்பில் இதற்கான விளக்கம் முறையாக தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த விலை ஏற்ற அறிவிப்பு, ஆப்பிள் எம்2 சிப்செட் மற்றும் அதன் புதிய மேக்புக் சாதனம் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது என அதன் வாடிக்கையாளர்கள் தரப்பில் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Apple Macbook Pro 13 order Available From June 17: Specs, Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X