Home
News

ஜூன் 1 வரை.. இரண்டு Apple MacBook மாடல்கள் மீது பலே டிஸ்கவுண்ட்.. விட்றா Vijay Sales க்கு வண்டிய!

பிரபல ரீடெயில் விற்பனையாளர் ஆன விஜய் சேல்ஸ் (Vijay Sale), ஆப்பிளின் மேக்புக் ஏர் மாடல்களின் மீது அற்புதமான தள்ளுபடிகளை வழங்கும் பிரத்யேக சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் ஆன்லைனிலும் விஜய் சேல்ஸின் ரீடெயில் நிலையங்களின் வலையமைப்பிலும் அணுக கிடைக்கின்றன.

மே 25, 2025 முதல் ஜூன் 1, 2025 வரை அல்லது ஸ்டாக் இருக்கும் வரை தொடரும் இந்த சலுகையின் கீழ், ஆப்பிள் எம்4 மற்றும் எம்2 சிப்கள் பொருத்தப்பட்ட மேக்புக் ஏர் லேப்டாப்களில் (Apple MacBook Air M4 and M2 models) குறிப்பிடத்தக்க தள்ளுபடி கிடைக்கும். எம்4 சிப் மூலம் இயக்கப்படும் மேக்புக் ஏர் ஆனது ரூ.79,900 முதல் வாங்க கிடைக்கும், அதே நேரத்தில் எம்2 மாடல் ரூ.67,990 முதல் வாங்க கிடைக்கும்.

ஜூன் 1 வரை.. இரண்டு Apple MacBook மாடல்கள் மீது பலே டிஸ்கவுண்ட்!

இந்த விலைகளில் ஐசிஐசிஐ, ஆக்சிஸ் அல்லது கோடக் மஹிந்திரா பேங்க் கார்டுகளுடன் வாங்கும் போது கிடைக்கும் ரூ.10,000 வரையிலான உடனடி தள்ளுபடியை உள்ளடக்கிய விலையாகும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த சலுகை ஜூன் 1, 2025 வரை அல்லது ஸ்டாக் இருக்கும் வரை நீடிக்கும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் இந்த பிரீமியம் மேக்புக் மாடல்களை வாங்க இதுவே சரியான நேரமாகும்.

நினைவூட்டும் வண்ணம் ஆப்பிள் நிறுவனம் எம்4 சிப் உடனான புதிய மேக்புக் ஏர் மாடல்களை அறிமுகம் செய்ததும் பழைய மேக்புக் ஏர் எம்2 மற்றும் மேக்புக் ஏர் எம்3 மாடல்களை நிறுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது நிறுத்தப்பட்ட மாடல்கள் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்காது என்று அர்த்தம்.

Take a Poll

ஆப்பிள் புதிய மேக்புக் ஏர் 2025 மாடல்களின் விரிவான அம்சங்கள்: மேக்புக் ஏர் 2025 மாடல் ஆனது 13-இன்ச் (2,560×1,664 பிக்சல்ஸ்) மற்றும் 15-இன்ச் (2,880×1,864 பிக்சல்ஸ்) சூப்பர் ரெடினா டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேக்கள் 224பிபி பிக்சல் டென்சிட்டி மற்றும் 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை கொண்டது. இந்த ஆப்பிள் லேப்டாப்கள் 6கே ரெசல்யூஷனில் 2 எக்ஸ்டர்னல் டிஸ்பிளேக்களை ஆதரிக்கும் (லேப்டாப் திறந்திருக்கும் போது) என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 ஆனது எம்4 சிப் உடன் வருகிறது. இதில் நான்கு பெர்பார்மென்ஸ் கோர்கள் மற்றும் நான்கு எஃபீஷியன்சி கோர்கள் கொண்ட 10-கோர் சிபியு உள்ளது. இந்த லேப்டாப்பில் 16-கோர் நியூரல் எஞ்சின், 8-கோர் ஜிபியு மற்றும் ஹார்டுவேர் ஆக்சிலரேட்டட் ரே டிரேசிங்கிற்கான ஆதரவும் உள்ளது.

மேக்புக் ஏர் 2025 மாடலை 24ஜிபி வரை ரேம் மற்றும் 2டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் உடன் கட்டமைக்க முடியும. மேலும் இது ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் த்ரீ-மைக் செரீஸ் உடன் கூடிய குவாட் ஸ்பீக்கர் செட்டப்பையும் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பில் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது Wi-Fi 6E மற்றும் ப்ளூடூத் 5.3 ஆகியவைகளை கொண்டுள்ளது.

மேலும் இது இரண்டு தண்டர்போல்ட் 4/ யூஎஸ்பி 4 போர்ட்கள், ஒரு மேக்சேப் 3 சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆப்பிளின் இந்த புதிய மேக்புக் ஏர் 2025 மாடல் ஆனது டச் ஐடி பட்டனையும் கொண்டுள்ளது, இது லேப்டாப்பை அன்லாக் செய்ய பயன்படுகிறது. இது ஃபோர்ஸ் க்ளிக்குகள் மற்றும் மல்டி-டச் சைகைகளுக்கான ஆதரவுடன் ஃபோர்ஸ் டச் டிராக்பேடையும் கொண்டுள்ளது. சென்டர் ஸ்டேஜ் மற்றும் டெஸ்க் வியூவுக்கான ஆதரவுடன் 1080p ஃபேஸ்டைம் கேமராவும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை 13-இன்ச் மேக்புக் ஏர் 2025 மாடல் ஆனது 53.8Wh லித்தியம்-பாலிமர் பேட்டரியை 70W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் கொண்டுள்ளது. ஆனால் இது 30W யூஎஸ்பி டைப்-சி பவர் அடாப்டருடன் அனுப்பப்படுகிறது. மறுகையில் உள்ள 15-இன்ச் மாடல் சற்று பெரிய 66.5Wh பேட்டரியை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி இது 15 மணிநேர இண்டர்நெட் ப்ரவுஸிங் மற்றும் ஆப்பிள் டிவி ஆப் மூலம் 18 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple MacBook Air M4 and M2 Models will Be Available In Discounted Price in Vijay Sales until June 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X