ஆரம்பமே சலுகையோடு: அமேசான் பிரைம் தினத்தில் மேக்புக் ஏர் எம் 1 விற்பனை!

|

அமேசான் பிரைம் தின விற்பனை தற்போது இந்தியாவில் நேரலையில் இருக்கிறது. அமேசான் இந்தியாவின் இந்த விற்பனை அறிவிப்பின் மூலம் ஆப்பிள் மேக்புக் ஏர் சாதனம் விற்பனைக்கு வருகிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.92,900 ஆக இருக்கும் நிலையில் தற்போது அமேசான் பிரைம் தின விற்பனையில் இதை ரூ.84,990-க்கு வாங்கலாம். இதில் ரூ.7910 என்ற விலைக்குறைப்பில் வாங்கலாம். அதோடுமட்டுமின்றி அமேசான் அதிக வங்கி சலுகைகளை வழங்குகிறது.

ஆரம்பமே சலுகையோடு: அமேசான் பிரைம் தினத்தில் மேக்புக் ஏர் எம் 1 விற்பனை

அமேசான் பிரைம் உறுப்பினர்கள் இஎம்ஐ பரிவர்த்தனைகள் மூலம் எச்டிஎஃப்சி வங்கி டெபிட் கார்ட்களை பயன்படுத்தும்போது ரூ.500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு பயன்பாட்டில் ரூ.1250வரை தள்ளுபடியை பெறலாம். இஎம்ஐ பரிவர்த்தனைகளை தேர்ந்தெடுத்து எச்டிஎஃப்சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்கலை பயன்படுத்தும் போது 10% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தள்ளுபடி விலையுடன் கூடுதலாக கிடைக்கும் கேஷ்பேக் சலுகையும் அமேசான் ஆப்பிள் மேக்புக் விற்பனையை மேலும் ஊக்குவிக்கிறது. இந்த சலுகையை பெற நீங்கள் அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டை பெறலாம். அமேசான் பே பேலன்ஸில் ரூ.400 கேஷ்பேக் பெறலாம். அதுமட்டுமின்றி அமேசான் 2020 மேக்புக் ஏர் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலை இஎம்ஐ விருப்பங்களை வழங்குகிறது.

ஆரம்பமே சலுகையோடு: அமேசான் பிரைம் தினத்தில் மேக்புக் ஏர் எம் 1 விற்பனை

அதுமட்டுமின்றி பரிவர்த்தனை சலுகையுடன் மேக்புக் ஏர் 2020 சாதனத்தை வாங்கும்போது ரூ.17,200 வரை சேமிக்க முடியும். அமேசாந் பிரைம் தின விற்பனையின் கீழ் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் ஜூலை 27 வரை மட்டுமே கிடைக்கும். 13.3 இன்ச் மேக்புக் ஏர் ரூ.84990 என தள்ளுபடி விலையுடன் வருகிறது. இந்த சாதனம் ஆப்பிளின் சொந்த எம் 1 சிப்செட் உடன் 8-கோர் ஜிபீயுடன் வருகிறது. லேப்டாப் ஸ்போர்ட் (8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு) உடன் வருகிறது. இது கோல்ட் வண்ண விருப்பத்தில் மட்டுமே கிடைக்கும்.

ஆப்பிள் மேக்புக் ஏர் 2020 மேக் ஓஎஸ் லேப்டாப் ஆகும். இது 13.60 இன்ச் டிஸ்ப்ளேவுடன் 2560 x 1600 பிக்சல்கள் தீர்மானத்தோடும் வருகிறது. இந்த சாதனம் 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட கோர் ஐ3 செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஆப்பிள் மேக்புக் ஏர் 2020 லேப்டாப் 256 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இது ஒருங்கிணைந்த கிராஃபிக்ஸ் செயலியோடு வருகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில் இதில் வைஃபை இணைப்பு, ப்ளூடூத் ஆதரவு ஆகியவை அடக்கம். அதோடு ஹெட்ஃபோன்கள் மற்றும் மைக் காம்போ ஜாக் போர்ட்களும் வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple Macbook Air M1 Sales Start at Amazon Prime day Sale at Discount Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X