ஆப்பிளும் நஷ்டக்கணக்கும்!

Posted By: Staff

ஆப்பிளும் நஷ்டக்கணக்கும்!


கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஆப்பிள் நிறுவனத்திற்கு சுமார் ஆயிரத்தி எழுநூறு கோடிகள் இழப்பு என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிளின் சமீபத்திய பங்குச்சந்தை நிலவரங்களும் அதிர்ச்சியளிக்கும் வகையிலேயே உள்ளது.

அதாவது விலையிலும் சரிவு ஏற்ப்பட்டுள்ளது. 702 அமெரிக்க டாலர்களாக இருந்த ஒரு பங்கின் விலை இப்பொழுது 518 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுகின்றன.

 

ஆப்பிளின் பங்குகள் விலைகுறையக் காரணம்:

 

விற்பனை வரியேற்றம்: அமெரிக்காவில் வரும் 2013 முதல் விற்பனை வரியானது உயர்த்தப்படவுள்ளது. இதனால் ஏற்க்கனவே ஆப்பிள் பங்குகள் வைத்திருப்பவர்களும் இப்பொழுதே பங்குகளை விற்கிறார்கள்.

 

போட்டி: ஐபோனுக்கு போட்டியாக பல நிறுவனங்களும் ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கின்றன. ஆனால் இவற்றின் விலை ஐபோனை விடக்குறைவே.

 

புதியதே இல்லை: ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை தற்சமயம் எந்த புதிய சாதனங்களும் வெளிவிடப்படவில்லை. ஒரே ஒரு நம்பிக்கை ஆப்பிள் டிவி மட்டுமே. அதன் வெளியீடும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிளும் நஷ்டக்கணக்கும்!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot