தவறாக பொறிக்கப்பட்ட ஆப்பிள் லோகோ: அதை ரூ.2 லட்சத்துக்கு வாங்கிய நபர்- இணையத்தை கலக்கும் விவாதம்!

|

தவறான லோகோவுடன் பொருத்தப்பட்டிருந்த ஐபோன் 11 ப்ரோ சாதனம் ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் ஏற்பட்ட பிழைக்கான காரணம் குறித்தும் இது அதிகவிலைக்கு விற்கப்பட்டதற்கான காரணம் குறித்தும் பார்க்கலாம். ஆப்பிள் சாதனங்களில் லோகோ பிழையுடன் வருவது மிக மிக அரிதானது. இந்த பிழை எப்படி இருக்கு என்பதை பார்க்கலாம்.

ஐபோன் 11 ப்ரோ சாதனம்

ஐபோன் 11 ப்ரோ சாதனம்

ஐபோன் 11 ப்ரோ சாதனத்தின் பின்புற படங்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்த சாதனத்தில் ஆப்பிள் லோகோவில் உற்பத்தி பிழையை காண்பிக்கிறது. தவறாக பொறிக்கப்பட்ட ஆப்பிள் லோகோவின் புகைப்படம் கொண்ட ஐபோன் 11 ப்ரோ இணையத்தில் பல்வேறு விவாதங்களை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இந்த சாதனத்தைய ஒருவர் 2,700 டாலருக்கு வாங்கியுள்ளார்.

தவறாக பொறிக்கப்பட்ட ஆப்பிள் லோகோ

தவறாக பொறிக்கப்பட்ட ஆப்பிள் லோகோ

தவறாக பொறிக்கப்பட்ட ஆப்பிள் லோகோவின் புகைப்படம் கொண்ட ஐபோன் 11 ப்ரோ சாதனத்தை ஒருவர் இந்திய மதிப்புப்படி ரூ.2 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். மேலும் தற்போதைய ஆப்பிள் சாதனமான ஐபோன் 12 ப்ரோ மேக்ஸை விட இது அதிக விலை உயர்வாகும்.

ஐபோன் சாதனங்களுக்கு என தனி வரவேற்பு

ஐபோன் சாதனங்களுக்கு என தனி வரவேற்பு

பல்வேறு பிரத்யேக அம்சங்களோடு ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து சந்தையில் அறிமுகமானும் ஐபோன் சாதனங்களுக்கு என தனி வரவேற்பு இருக்கிறது. இதற்கு பிரதான காரணம் ஐபோன் வடிவமைப்பு, டிசைன், கேமரா, பாதுகாப்பு அம்சம், செயல்திறன் உள்ளிட்ட அனைத்திலும் முக்கிய கவனம் செலுத்துவதாகும். ஆப்பிள் நிறுவனம் தங்களது ஐபோன் சாதனங்களுக்கு உறுதியான உத்தரவாதத்தை வழங்குகிறது. இருப்பினும் ரொம்ப அரிதாக ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் பிழை ஏற்படுகிறது.

பின்புற லோகோ தவறாக அச்சிடப்பட்டது

பின்புற லோகோ தவறாக அச்சிடப்பட்டது

ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ சாதனத்தில் பின்புற லோகோ தவறாக அச்சிடப்பட்டுள்ளது. இதை ஒருவர் ரூ.2 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். இதுகுறித்து இன்டர்னல் காப்பம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஐபோனின் பின்புறத்தில் லோகோ தவறான இடத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது. மையப்பகுதிக்கு மாறாக வலதுபுறத்தில் தள்ளி சாய்வாக பொறிக்கப்பட்டிருக்கிறது.

வாங்கப்பட்ட இடம், விற்கப்பட்ட இடம் தெரியவில்லை

வாங்கப்பட்ட இடம், விற்கப்பட்ட இடம் தெரியவில்லை

ஐபோன் சாதனத்தை குறிப்பிட்ட கோணத்தில் வைத்து அதன் பின்புறத்தை பார்த்தால் இந்த குறைபாடு காணமுடியும். மேலும் ஐபோன் வாங்கப்பட்ட இடம், விற்கப்பட்ட இடம், வாங்கிய நபர் குறித்து தகவல் ஏதும் இல்லை. சாதனங்கள் தயாரிப்பு பகுதியில் ஏற்பட்ட பிழையாக இது இருக்கிறது.

இதுபோன்ற தவறு மிக அரிது

இதுபோன்ற தவறு மிக அரிது

ஆப்பிள் ஐபோன் சாதனங்களில் இதுபோன்ற தகவல் நடப்பது என்பது மிக அரிது. இந்த பிழை குறித்து பார்க்கையில் ஐபோன் சாதனத்தின் பின்புறத்தில் லோகோ வலது பக்கம் ஒதுங்கி செங்குத்தாக இருக்கிறது. ஐபோன் சாதனத்தை பொறுத்தவரையில் லோகோ பின்புற மையப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் வழக்கத்தைவிட லோகோ வலதுபுறம் ஒதுங்கி எதிரெதிர் புறம் சாய்ந்துள்ளது. ஐபோன்களில் ஏற்படும் மிக அரிதான விஷயம் இது. இது மில்லியன் ஐபோன்களில் ஒன்றிற்கு சாத்தியம் எனவும் மிக அரிதானது எனவும் கூறப்படுகிறது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஐபோன் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டது. இதற்கான காரணம் மற்றும் அதை வாங்கிய நபர் குறித்த விவரங்கள் ஏதும் இல்லை.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple Logo Faulty Printed in Iphone: Its Sold Over Rs.2 lakhs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X