ரூ.6.3 கோடி மாத வாடகை.. பெங்கரூருவில் கார் பார்கிங், மெயின்டனன்ஸ், லீஸ்.. ரூ.1,010 கோடிக்கு Apple போட்ட டீல்!
ஆப்பிள் (Apple) நிறுவனமானது பெங்களூரூவில் ஒரு பில்டிங்கை மாதத்துக்கு ரூ.6.31 கோடிக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. மாத வாடகையே இவ்வளவு இருக்கிறதே அப்போது, மொத்தமாக 10 ஆண்டுகளுக்கு குத்தகை, கார் பார்க்கிங், மெயின்டனன்ஸ் செலவு என்று மொத்தமாக எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
பெங்களூரூவில் ஒரு பில்டிங்கை மாத வாடகைக்கு எடுக்கும் பணத்தை ஒரு சராசரி இந்தியனின் மாத வருமானத்துடன் கணக்கிட்டால், தலை சுற்றிவிடும் போல இருக்கிறது. ஆப்பிள் நிறுவனமானது முக்கிய பகுதியான வசந்த நகரில் (Vasanth Nagar) இருக்கும் அதனுடயை அலுவலகத்துக்கு மாதத்துக்கு ரூ.6.31 கோடிக்கு குத்தகை பணம் கொடுக்கிறது.

மொத்தமாக 10 வருடங்களுக்கான குத்தகை பணத்தை செலுத்தி இருக்கிறது. இதில் கார் பார்க்கிங், மெயின்டனன்ஸ் செலவு என்று மொத்தமாக ரூ.1,010 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. செக்யூரிட்டி டெபாசிட் மட்டும் ரூ.31.57 கோடி செலுத்தி இருக்கிறது. இவ்வளவு கோடிகளை கொட்டி குத்தகைக்கு எடுத்த அந்த பில்டிங் எப்படி?
பெங்களூருவின் முக்கிய பகுதியான வசந்த் நகரில் உள்ள சாங்கி சாலையில் எம்பசி ஜெனித் (Embassy Zenith) பில்டிங் அமைந்துள்ளது. இந்த பில்டிங்கின் 5ஆவது முதல் 13ஆவது வரையிலான தளங்களை ஆப்பிள் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து இருக்கிறது. இந்த தளங்களின் பரப்பளவு 2.7 லட்சம் சதுரடியாக இருக்கிறது
ஆகவே, மாதம் வாடகை ரூ.6.31 கோடியாக இருக்கிறது என்றால், ஒரு சதுரடிக்கு ரூ.235 வாடகை கொடுக்க இருக்கிறது. ஆண்டு வாடகை 4.5 சதவீதம் அதிகரிக்கும் என்ற கணக்கை கொண்டு மொத்தமாக ரூ.1,010 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொத்த தொகையில் கார் பார்க்கிங், மெயின்டனன்ஸ் ஆகியவை அடங்கும்.
அதேபோல டாக்குமெண்ட் உள்ளிட்ட மற்ற கட்டணங்களும் அடங்கும். இந்த ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி முதல் இந்த குத்தகை அமலுக்கு வந்துள்ளது. இந்த அலுவலகத்தில் 1,200 ஊழியர்கள் பணியற்ற முடியும். இவர்களுக்கான அனைத்து வசதிகளும் அந்த 2.7 லட்சம் சதுரடியாக பரப்பளவு பில்டிங்கில் இடம்பெற இருக்கிறது.
இதுபோல பெங்களூருவில் உள்ள பீனிக்ஸ் மால் ஆஃப் ஆசியாவில் புதிய ஆப்பிள் ஸ்டோரை திறக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, மும்பை மற்றும் டெல்லியில் நகரங்களில் ஆப்பிள் ஸ்டோர் (Apple Store) தொடங்கப்பட்டுவிட்டது. இப்போது, பெங்களூருவில் பல ஆயிரம் கோடி முதலீட்டில் ஸ்டோரை திறக்க இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனமானது, இந்தியாவில் அதனுடைய உற்பத்தியை பல மடங்கு பெருக்கி இருக்கிறது. சொல்லப்போனால், சீனாவை பின்னிக்கு தள்ளி ஐபோன் உற்பத்தியில் இந்தியா முதலிடம் பிடிக்க தொடங்க இருக்கிறது. இதனால், இந்தியாவில் ஆப்பிளின் புதிய அலுவலகங்கள் மற்றும் ஸ்டோர்களுக்கு அதிக தேவை ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே, தமிழ்நாட்டின் ஒசூரிலும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை மூலம் ஐபோன் உற்பத்தியை தொடங்கி இருக்கிறது. இப்படி உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆப்பின் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆனால், இந்தியாவில் ஐபோன்களின் விலை மற்ற நாடுகளைவிட சற்று கூடுதலாக இருக்கிறது என்று ஸ்மார்ட்போன் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
மேலும், அமெரிக்காவில் அதிக வரி விதிக்கப்படுவதால், ஆப்பிள் நிறுவனம் அதனுடைய உற்பத்தியை மற்ற நாடுகளில் தொடங்கி இருக்கிறது. இதில் சீனா முதலிடத்தில் இருந்தது. ஆனால், அங்கிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களுக்கும் அதிக வரி இருப்பதால், இந்தியா மீது ஆப்பிளின் முழு கவனம் வந்துள்ளது. இங்கிருந்தே அமெரிக்காவுக்கு ஐபோன்கள் அதிகம் செல்கின்றன.


Click it and Unblock the Notifications








