Home
News

அடுத்த ஐபோனை அறிமுகம் செய்கிறதா ஆப்பிள்?

By Super
அடுத்த ஐபோனை அறிமுகம் செய்கிறதா ஆப்பிள்?

இந்த ஆண்டு வருகிற செப்டம்பர் மாதம் ஐபோன்-5 ஸ்மார்ட்போனையும், ஐபேட் மினி டேப்லட்டை ஆகஸ்டு மாதமும் அறிமுகம் செய்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் தான் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை வெளியிட்டு, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தது சாம்சங் நிறுவனம்.

இந்த சந்தோஷத்தில் இருந்தே இன்னும் வெளிவராத வாடிக்கையாளர்களுக்கு அடுத்த கொண்டாட்ட செய்தியும் காத்திருக்கிறது என்று கூறலாம்.

ஐபன் 4-எஸ் ஸ்மார்ட்போனின் மூலம் உலக அளவுல் பெரிய சாதனையை நிகழ்த்திய ஆப்பிள் நிறுவனம், அடுத்ததாக ஐபோன்-5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய காத்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தை விட இந்த ஸ்மார்ட்போனை வாங்க வாடிக்கையாளர்கள் வெகுவாக காத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 4.6 இஞ்ச் ரெட்டினா தொழில் நுட்பம் கொண்ட திரையினை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு 4ஜி எல்டிஇ வசதியையும் இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் பெறலாம் என்றும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் 10 இஞ்ச் திரை கொண்ட ஐபேட் மினி டேப்லட்டினையும் வழங்கும் என்று தகவல்கள் காற்று வாக்கில் கசிந்துள்ளன.கடந்த ஆண்டு ஐபோன்-5 ஸ்மார்ட்போன் தான் வெளியாக இருந்தது. ஆனால் சில தாமதங்களினால், ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது.

இதனால் ஆரம்பத்தில் இருந்தே மக்களின் ஆர்வத்தினை அதிகப்படுத்தி கொண்டே போகும் ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலவரம் உண்மையாகிறதா? என்று பொருத்திருந்து பார்ப்போம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X