கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. வரும் ஜூனில் ஐபோன்-5!

By Super
|
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. வரும் ஜூனில் ஐபோன்-5!

வரும் ஜூன் மாதத்தில் ஆப்பிள் ஐபோன்-5 அறிமுகமாகிறது என்ற ஒரு குஷியான தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் நியூ ஐபேடை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம், அடுத்த ஆயுதமாக புதிய ஐபோன்-5 ஸ்மார்ட்போனை மொபைல் மார்கெட்டில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி வாடிக்கையாளர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

வருகிற ஜூன் மாதம் 11 முதல் 15-ஆம் தேதிக்குள் ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

புதிய தொழில் நுட்பத்தினை புகுத்துவதன் மூலம் பல சாதனைகளை செய்து வரும் ஆப்பிள் நிறுவனம், அடுத்து அறிமுகம் செய்யப்போகும் ஐபோன்-5 ஸ்மார்ட்போனிலும் பல உயர்ந்த தொழில் நுட்பங்களை கொடுக்கும். இதில் அகன்ற திரையாக 4.6 இஞ்ச் ரெட்டினா டிஸ்ப்ளே இருப்பதாக இதுவரை தகவல்களில் பார்த்து வந்தோம்.

ஆனால் வருகிற ஜூன் மாதத்தில் அறிமுகமாக இருக்கும் இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் இன்னும் என்னென்ன பல புதிய வசதிகள் இருக்கும் என்பது தெளிவாக வெளியாகிவிடம்.

ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனின் மூலம் சர்வதேச மொபைல் மார்கெட்டையே அதிர செய்த ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த படைப்பாக ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. இந்த செய்தி தொழில் நுட்பத்தினை விரும்பும் அனைவருக்கும் இனிமையான செய்தி தான்.

மொபைல் சந்தையை முற்றுகையிட காத்திருக்கும் இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போனை போல, இந்த ஸ்மார்ட்போனை சொந்தமாக்கி கொள்ள வாடிக்கையாளர்களும் காத்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X