iPad இருக்கா.. இனி ரிப்பேர் ஈஸி.. தேடி வரும் பார்ட்ஸ்.. டூல் கிட்கள்.. மேனுவல்.. எந்தெந்த மாடல்கள்?
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபாட்களை (iPad) வைத்திருக்கும் யூசர்களுக்கு ஆப்பிள் செல்ப் சர்வீஸ் ரிப்பேர் (Apple Self Service Repair) ப்ரோக்ராம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ப்ரோக்ராம் மூலம் ரிப்பேர் மேனுவல், ஆப்பிள் பார்ட்ஸ், ஆப்பிள் டயக்னாஸ்டிக்ஸ், டூல் கிட்ஸ்கள் போன்றவற்றை ஐபாட் யூசர்கள் அணுக முடியும். ஆனால், குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டுமே இந்த ஆப்பிள் செல்ப் சர்வீஸ் ரிப்பேர் ப்ரோக்ராம் கிடைக்கிறது. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஆப்பிள் மற்றும் சாம்சங் யூசர்களுக்கு மட்டும் செல்ப் சர்வீஸ் ரிப்பேர் ப்ரோக்ராம் கிடைக்கிறது. இதில் ஆப்பிள் முழுவீச்சில் அதை செய்துவருகிறது. ஐபோன்கள் (iPhone), மேக்புக் (MacBook) மற்றும் மேக்புக் ஸ்டூடியோ (Mac Studio) ஆகியவற்றில் மொத்தமாக 65 ப்ராடெக்ட்களுக்கு இந்த சர்வீஸ் கொடுக்கப்படுகிறது. அதாவது, டிஸ்பிளே, பேட்டரி, கேமரா, சார்ஜிங் போர்ட் போன்ற பார்ட்கள் பழுதாகும்போது அதை யூசர்களே எளிதாக மாற்றுகொள்ள இது வழிவகுக்கிறது.

எப்படி ரிப்பேர் செய்வது, எதை வைத்து ரிப்பேர் செய்வது போன்ற அனைத்துக்கும் டயக்னாஸ்டிக்ஸ் டிரபிள்ஷூட்டிங் செஷன்கள் (Apple Diagnostics Troubleshooting Sessions) இருக்கும். அதேபோல ரிப்பேர் மேனுவல் (Repair Manuals), ஆப்பிள் பார்ட்கள் (Apple Parts) மற்றும் ஆப்பிள் டூல் கிட்களை (Apple Toolkits) யூசர்கள் பெற்று கொள்ளலாம். இந்த ப்ரோக்ராம் இப்போது ஐபாட் யூசர்களுக்கும் அறிமுகமாகி இருக்கிறது.
எந்தெந்த ஐபாட் மாடல்களுக்கு கிடைக்கும்? ஆப்பிள் செல்ப் சர்வீஸ் ரிப்பேர் சேவையானது, அனைத்து மாடல்களுக்கும் கிடைக்காது. எம் 2 அல்லது அதற்கு மேலான சிப் கொண்ட ஐபாட் ஏர் (iPad Air) மாடல்கள், எம்4 சிப் கொண்ட ஐபாட் ப்ரோ (iPad Pro) மாடல், ஏ17 ப்ரோ சிப் கொண்ட (iPad Mini) மாடல் மற்றும் ஏ16 சிப் கொண்ட ஐபாட் (iPad) மாடல் ஆகியவைக்கு மட்டுமே கிடைக்க இருக்கிறது.
இதன் மூலம் டிஸ்பிளேக்கள், பேட்டரிகள், கேமராக்கள் மற்றும் சார்ஜிங் போர்ட்களை ஐபாட் யூசர்கள் ரிப்பேர் செய்து கொள்ளலாம். இதற்கான பார்ட்கள் மட்டுமே ரிப்பேர் ஸ்டோர்களில் இருந்து கிடைக்கும். ஐபோன்கள், ஐபாட்கள், மேக்புக் போன்ற ஆப்பிள் ப்ராடெக்ட்களுக்கு அதிகப்படியான பிரைவசி பீச்சர்கள் கொடுக்கப்படுகிறது. இதனாலேயே இந்த செல்ப் சர்வீஸ் ரிப்பேர் ப்ரோக்ராமும் கிடைக்கிறது.

ஏனென்றால், அதில் இருக்கும் டேட்டாக்களை யாரும் அணுக முடியாதபடி இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த செல்ப் சர்வீஸ் ரிப்பேர் ப்ரோக்ராம் கிடைப்பதாக தெரிகிறது. இதை ஆப்பிள் பிரியர்களும் விரும்புவதால், பல்வேறு நாடுகளில் தொடங்கப்பட்டுவருகிறது. 33 நாடுகளில் ஏற்கனவே இந்த செல்ப் சர்வீஸ் ரிப்பேர் ப்ரோக்ராம் சேவை கிடைக்கிறது.
இப்போது, 34ஆவது நாடாக கனடா சேர்ந்துள்ளது. இந்தியாவிலும் ஏற்கனவே கிடைத்துவந்த சேவைகளுடன் இதுவும் இணைய இருக்கிறது. ஏனென்றால், ஆப்பிள் ஸ்டோர்கள் தொடங்கி ஆப்பிள் உற்பத்தி ஆலைகள் வரையில் இந்தியாவில் மட்டுமே அதிகளவில் உருவாகி வருகின்றன. இதனால், இந்த செல்ப் சர்வீஸ் ரிப்பேர் ப்ரோக்ராம் சேவையும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
முன்னதாக, ஆப்பிள் நிறுவனமானது இந்தியாவில் இருக்கும் அதன் உற்பத்தி ஆலைகளில் இருந்து 11.4 மில்லியன் ஐபோன்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. இது கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரையில் மட்டுமே ஏற்றுமதி செய்ய யூனிட்களாகும். இது முந்தைய காலாண்டைவிட கிட்டத்தட்ட 76 சதவீதம் அதிகமாகும். இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Image Source: Apple


Click it and Unblock the Notifications








