Home
News

12 ஆசிய நாடுகளில் ஐடியூன்ஸ் ஸ்டோர் அறிமுகம்: ஆப்பிள்!

By Super
12 ஆசிய நாடுகளில் ஐடியூன்ஸ் ஸ்டோர் அறிமுகம்: ஆப்பிள்!

உலகின் முதன்மை தொழில் நுட்ப படைப்புகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் ஆசிய நாடுகளில் ஆன்லைன் ஐடியூன் ஸ்டோர்களை அறிமுகம் செய்துள்ளது.

எந்த ஒரு மின்னணு சாதன படைப்புகள் வந்தாலும் அதை எளிதாக ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்க முடிகிறது. அப்படி வெளியாகும் படைப்புகளில் நிறைய அப்ளிக்கேஷன் வசதிகளும் கொடுக்கப்படுகின்றன.

இந்த அப்ளிக்கேஷன்கள் வடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்பட்டு வருகிறது.அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் ஹாங்காங், சிங்கப்பூர், தய்வான் உள்ளிட்ட 12 ஆசிய நாடுகளில் தனது ஐடியூன் ஆன்லைன் ஸ்டோரினை அறிமும் செய்கிறது ஆப்பிள்.

பல ஸ்வாரசியமான அப்ளிக்கேஷன்களை ஆப்பிள் நிறுவனம் வழங்கி வருகிறது. ஐடியூன் ஆன்லைன் ஸ்டோரில் எளிதாக அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்யலாம்.

அதிலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு சிறந்த மார்கெட் விற்பனை ஆசிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் கூட ஆசிய நாடுகளில் அதிக விற்பனையை குவித்திருக்கும் ஆப்பிள் நிறுவனம், இதை தொடர்ந்த சிங்கப்பூர், தய்வான் போன்ற 12 நாடுகளில் ஐடியூன் ஆன்லைன் ஸ்டோரினை அறிமுகம் செய்துள்ளது.

ஆனால் இதற்கு முன்பு ஆஸ்ட்ரேலியா, ஜப்பான், ஆசிய பசிஃபிக் பகுதி போன்ற இடங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வந்த ஐடியூன் ஆன்லைன் ஸ்டோர், இப்போது இங்கே கூறப்பட்டிருக்கும் மற்ற 12 ஆசிய நாடுகளிலும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X