Home
News

மல்டி டச் வசதியுடன் களமிறங்கும் ஐபோட் நானோ

By Karthikeyan
மல்டி டச் வசதியுடன் களமிறங்கும் ஐபோட் நானோ

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்புகளான ஐபோன்5 மற்றும் ஐபோட் டச் போன்றவை மிக விரைவில் வரவிருக்கும் நிலையில் ஆப்பிள் ஒரு புதிய ஐபோட் நானோ என்ற சாதனத்தையும் களமிறக்க இருக்கிறது. இந்த ஐபோட் நானோ 2.5 இன்ச் அளவில் மல்டி டச் வசதி கொண்ட டிஸ்ப்ளேயுடன் வருகிறது.

மேலும் இந்த ஐபோட் நானோவில் ப்ளூடூத் மற்றும் எப்எம் ரேடியோ வசதியையும் ஆப்பிள் வழங்குகிறது. அதோடு இந்த ஐபோட் நானோவை தொடுதிரை மட்டும் அல்லாமல் தொடு கீகள் மூலமும் இயக்க முடியும். மேலும் இந்த சாதனம் ஐஒஎஸ் தளத்தில் இயங்குகிறது.

இந்த ஐபோட் நானோ லைட்னிங் என்ற டோக் கனக்டரையும் தாங்கி வருகிறது. இந்த நானோ, சிவப்பு, பச்சை, பர்ப்பிள், ஸ்லேட், கருப்பு, மஞ்சள் மற்றும் ஊதா போன்ற 7 வண்ணங்களில் வருகிறது.

விலையைப் பொருத்தமட்டில் 16ஜிபி மெமரி கொண்ட ஐபோட் நானோ ரூ.12,500க்கு விற்கப்பட இருக்கிறது. வரும் அக்டோபரில் ஐபோட் நானோ களம் இறங்க இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X