ரூ.99-விலையில் ஆப்பிள் டிவி பிளஸ் சேவை இந்தியாவில் அறிமுகம்.!

|

ஆப்பிள் நிறுவனம், ஆப்பிள் டிவி பிளஸ் எனும் புதிய ஸ்ட்ரீமிங் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார், நெட்பிலிக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக மாதம் வெறும் ரூ.99 என்கிற சாந்தாவின் கீழ் இந்த ஆப்பிள் டிவி பிளஸ் சேவையை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இலவச ஆப்பிள் டிவி பிளஸ் சந்தா

இலவச ஆப்பிள் டிவி பிளஸ் சந்தா

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற WWDC 2019 நிகழ்ச்சியில் ஆப்பிள் தனது ஆப்பிள் டிவி பிளஸ் சேவையை அறிமுகம் செய்தது. ஆப்பிள் ஐபோன் 11, ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ, ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், புதிய ஐபாட், ஐபாட் டச், மேக் அல்லது ஆப்பிள் டிவி வாங்கும் பயனர்களுக்கு ஒரு வருட இலவச சந்தாவை வழங்கப்போவதாக அறிவித்தது.

மலிவான விலையில் ஆப்பிள் டிவி பிளஸ் சேவை

மலிவான விலையில் ஆப்பிள் டிவி பிளஸ் சேவை

அதனை தொடர்ந்து தற்பொழுது ஆப்பிள் நிறுவனம் தனது வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான ஆப்பிள் டிவி பிளஸ் சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக மற்ற வீடியோ ஸ்ட்ரீமிங் சந்தாவை விட மிகவும் மலிவான விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

சரியான நேரம் பார்த்து வாய்ஸ் கால்களுக்கு 6பைசாக்களை திரும்பி வழங்கும் பிஎஸ்என்எல்.! ஜியோ ஓரம்போ..!சரியான நேரம் பார்த்து வாய்ஸ் கால்களுக்கு 6பைசாக்களை திரும்பி வழங்கும் பிஎஸ்என்எல்.! ஜியோ ஓரம்போ..!

வெறும் ரூ.99 விலையில் ஆப்பிள் டிவி பிளஸ்

வெறும் ரூ.99 விலையில் ஆப்பிள் டிவி பிளஸ்

அமெரிக்காவில் இந்த புதிய ஆப்பிள் டிவி பிளஸ் சேவை 4.99 டாலர்கள் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி இந்த சேவைக்கான கட்டணம் ரூ.350 ஆகும். ஆனால் இந்தியாவில் இந்த சேவையை வெறும் ரூ.99 என்ற மாதாந்திர சந்தா திட்டத்தில் அறிமுகம் செய்துள்ளது.

அசத்தலான உணவு சமைக்கும் யூடியூப்பின் பிரபலமான தாத்தா காலமானார்.!அசத்தலான உணவு சமைக்கும் யூடியூப்பின் பிரபலமான தாத்தா காலமானார்.!

சாம்சங் ஸ்மார்ட் டிவியிலும் ஆப்பிள் டிவி பிளஸ் பார்க்கலாம்

சாம்சங் ஸ்மார்ட் டிவியிலும் ஆப்பிள் டிவி பிளஸ் பார்க்கலாம்

ஆப்பிள் இன் iOS 12.3 மற்றும் ஆப்பிள் டிவி வெர்ஷன் iOS 12.3 தளங்களில் தற்பொழுது ஆப்பிள் டிவி பிளஸ் கிடைக்கிறது. அதேபோல் சில சாம்சங் ஸ்மார்ட் டிவி மற்றும் அமேசான் ஃபயர் டிவி சாதனங்களில் ஆப்பிள் டிவி பிளஸ் சேவை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple Launches Apple TV+ At Just Rs.99 Per Month In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X