மொபைல் விலையில், பாக்கெட் சைஸில்.. புதிய iPad Mini 2024 அறிமுகம்.. 3 ஆண்டுகளுக்கு பின் Apple-ன் தரமான சம்பவம்!
ஆப்பிள் (Apple) நிறுவனம் சத்தமின்றி ஒரு பெரிய சம்பவத்தை செய்துள்ளது. எந்த ஆரவாரமும் இன்றி, ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) அம்சங்களுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபேட் மினி 2024 (iPad Mini 2024) மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஏ17 ப்ரோ (A17 Pro) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது ஆப்பிளின் இந்த புதிய ஐபேட் மாடலின் டிஸ்பிளே அளவு என்ன? இது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இந்தியாவில் இதன் விலை நிர்ணயம் என்ன? எப்போது முதல் விற்பனை? அதிமுக சலுகைகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டுள்ளதா? இதோ விவரங்கள்:
பெரிய சம்பவம் என்று கூறும் அளவிற்கு இதில் அப்படி என்ன ஸ்பெஷல்? ஆப்பிளின் இந்த புதிய ஐபேட் மினி மாடல் எவ்வளவு ஸ்பெஷல் என்பதை உங்களுக்கு டக்கென்று புரிய வைக்கும் வேண்டுமென்றால்.. கடைசியாக ஆப்பிள் நிறுவனம் ஒரு ஐபாட் மினி மாடலை அறிமுகம் செய்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த மாடல் ஐபோன் 13 சீரிஸை இயக்கும் ஏ15 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்பட்டது.

ஆனால் புதிய ஐபேட் மினி மாடல் ஆனது அதன் முன்னோடியுடன் ஒப்பிடும்போது 30 சதவிகிதம் வேகமான சிபியு மற்றும் 25 சதவிகிதம் வேகமான ஜிபியு ஆகியவற்றை வழங்குகிறது. கூடவே ரே டிரேசிங் (Ray tracing), ஹார்டுவேர்-அக்சிலரேட்டட் மெஷ் ஷேடிங் (Hardware-accelerated mesh shading) மற்றும் டைனமிக் கேச்சிங் (Dynamic Caching) போன்ற அம்சங்களையும் ஆதரிக்கிறது.
மேலும் ஆப்பிளின் கூற்றுப்படி ஐபேட் மினி மாடலில் உள்ள ஏ17 ப்ரோ சிப்செட் ஆனது முந்தைய மாடலில் உள்ளதை போலவே வேகமான நியூரல் இன்ஜினையும் கொண்டுள்ளது. மற்றொரு முக்கியமான மாற்றம் என்னவென்றால், புதிய 2024 ஐபேட் மினி மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது 12ஜிபி ஆப்ஷனுடன் வருகிறது. இது 2021 ஐபேட் மினி மாடலுடன் ஒப்பிடும்போது இரட்டிப்பான ஸ்டோரேஜ் ஆகும்.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 8.3 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்பிளேவை (8.3-inch Liquid Retina display) கொண்டுள்ளது. இருப்பினும் புதிய ஐபேட் மினியின் வடிவமைப்பு அதன் முன்னோடியை போலவே (2021 ஐபேட் மினி மாடலை போலவே) உள்ளது. இந்த இடத்தில் புதிதாக அறிமுகமான ஆப்பிளின் எல்லா ஐபாட்களுமே புதிய எம்-சீரிஸ் சிப்களை பேக் செய்கின்றன். ஆனால் 2024 ஐபாட் மினி மாடல் மட்டுமே இன்னுமும் மொபைல் சிப் மூலம் இயக்கப்படுகிறது.
ஒருவகையில் இதை நல்ல விஷயம் என்றும் கூறலாம். ஏனென்றால் மொபைல் சிப்பின் பயன்பாடு ஆனது ஐபேட் மினி மாடலின் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்காற்றுகிறது. இதன் மூலம் அப்பர் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை வாங்கும் விலைக்கு (பட்ஜெட் வாசிகளாலும்) ஆப்பிளின் 2024 ஐபேட் மினி மாடலை வாங்க முடியும் (விலை விவரங்கள் கீழே உள்ளது).
கேமராக்களை பொறுத்தவரை 2024 ஐபேட் மினி மாடல் ஆனது நல்ல அப்கிரேட்-ஐ பெற்றுள்ளது. பழைய மாடலில் "வெறுமனே" 12எம்பி ரியர் கேமரா (12MP Rear Camera) உள்ள நிலைப்பாட்டில், புதிய மாடலில் ஸ்மார்ட் எச்டிஆர் 4 ஆதரவு (Smart HDR Support) உடனான 12எம்பி ரியர் கேமரா உள்ளது.
ஆப்பிளின் கூற்றுப்படி, இந்த ஐபேட் மாடலில் உள்ள ஏஐ அம்சங்கள் ஆனது கேமர் ஆப்பில் இருந்து டாக்குமெண்ட்களை தானாக அடையாளம் காண்பது, ஷேடோக்களை அகற்ற புதிய ட்ரூ டோன் ஃபிளாஷை பயன்படுத்துவது போன்ற வேலைகளை செய்யும். சுவாரசியமாக இதன் முன்பக்க கேமராவானது சென்டர் ஸ்டேஜை ஆதரிக்கிறது, இது பயனர்கள் நகர்ந்தாலும் துல்லியமான போகஸ்-ஐ வழங்குகிறது.
2024 ஐபேட் மினி மாடலின் இந்திய விலை, விற்பனை மற்றும் சலுகைகள்: இது நீலம், ஊதா, ஸ்டார்லைட் மற்றும் ஸ்பேஸ் கிரே ஆகிய 4 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஐபேட் மினியின் வைஃபை ஒன்லி (iPad mini Wi-Fi-only) வேரியண்ட் ஆனது ரூ.49,900 முதல் வாங்க கிடைக்கிறது. அதே நேரத்தில் வைஃபை + செல்லுலார் ஆதரவுடன் வரும் 2024 ஐபேட் மினி மாடல் ரூ.64,900 க்கு வாங்க கிடைக்கிறது.
இது 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலும் வாங்க கிடைக்கு. இந்த புதிய ஐபேட் மினி தற்போது அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட 29 நாடுகளில் முன்பதிவு செய்ய கிடைக்கிறது. மேலும் இது அக்டோபர் 23 முதல் ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர்களின் வழியாக விற்பனைக்கு வரும்.
ஆக்சஸெரீஸ்களை பொறுத்தவரை, நீங்கள் ஆப்பிள் பென்சில் ப்ரோ மற்றும் ஆப்பிள் பென்சில் (யூஎஸ்பி-சி) ஆகியவற்றை முறையே ரூ.11,900 மற்றும் ரூ.7,900 க்கு வாங்கலாம். வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருக்கும் பழைய ஐபேட் மாடலை எக்ஸ்சேன்ஜ் செய்யலாம். இதன் கீழ் ஆப்பிளின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இருந்து புதிய ஐபேட் மினி மாடலுக்கான தள்ளுபடியையும் பெறலாம்.


Click it and Unblock the Notifications








