செப் 09 : ஆப்பிளின் புதிய ஐபோன்கள்..!
பிரபல ஆப்பிள் நிறுவனம் வரும் செப்டம்பர் 09-ஆம் தேதி அன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து இருப்பதால், அன்றே எதிர்பார்ப்புக்கு உள்ளான ஐபோன் 6எஸ் (iPhone 6S) மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் எஸ் (iPhone 6 Plus S) வெளியீடு சார்ந்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது..!
ஆப்பிள் ஐபோன் 6எஸ் சிறப்பம்சங்கள்..?

புதிய ஐபோன்களுடன் ஆப்பிள் டிவி செட் டாப் பாக்ஸ் (Apple TV set-top box) பற்றிய தகவலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
புதிய ஸ்மார்ட்போன் முதலில் செய்ய வேண்டியவை..!

" ஹே சிரி எங்களுக்கு ஒரு குறிப்பு கொடு..!" ("Hey Siri, give us a hint") என்று ஆரம்பிக்கும் ஆப்பிளின் வண்ண மயமான அழைப்பிதழ், ஆப்பிள் பெரிய அளவிலான இறுதி ஆண்டை உருவாக்க திட்டமிடுவதை உணர்த்துகிறது என்று பத்திரிக்கையாளர்கள் கூறியுள்ளனர்..!
வாட்ஸ்ஆப் புதிய அம்சங்கள் : நீங்கள் அப்டேட் செய்தாச்சா..?

வெளியாக இருக்கும் புதிய ஐபோன்களில் லைட் டாப் (Light Tap) மற்றும் டீப் பிரஸ் (Deep Press) ஆகிய இரண்டிற்கும் வித்தியாசம் தரக்கூடிய வகையிலான ஃபோர்ஸ் டச் (Force Touch technology) அம்சம் அதிகப்படியான எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது என்பதும், ஆப்பிள் நிறுவனம் பாரம்பரியமாக செப்டம்பர் மாதத்தின் போதே தங்களது புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது..!


Click it and Unblock the Notifications