Home
News

ஐபோன் 16 மட்டுமில்லை.. 10 டிவைஸ்களை அறிமுகம் செய்கிறதா Apple? என்னென்ன டிவைஸ்? இந்த வருடம் என்ன ஸ்பெஷல்?

ஆப்பிள் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அந்தவொரு அற்புதமான நிகழ்வு நாளை நடைபெறுகிறது. செப்டம்பர் 9, 2024 அன்று ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் "இட்ஸ் குளோடைம்" (Its Glowtime) நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆப்பிள் செய்து வருகிறது. இந்த நிகழ்வு, இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நேரடி நிகழ்வாக இருந்தாலும், ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வின் போது ஆப்பிள் நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை iPhone 16 தொடர் போன்களை வெளியிடவுள்ளது. புதிய iPhone சாதனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம், ஆப்பிள் ஏர்போட்ஸ் போன்ற பல சாதனங்களை வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் என்ன சாதனங்களை வெளியிடும் என்று பார்வை இதோ.

ஐபோன் 16 மட்டுமில்லை.. 10 டிவைஸ்களை அறிமுகம் செய்கிறதா Apple?

ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 series):
இந்த நிகழ்வின் ஸ்பாட்லைட் iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max என நான்கு மாதிரிகளை உள்ளடக்கிய iPhone 16 தொடரின் மீது இருக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு மாடலும் வெவ்வேறு டிஸ்பிளே அளவைக் கொண்டிருக்கும். iPhone 16 மற்றும் 16 Plus ஆகிய இரண்டும் முந்தைய மாதிரிகளைப் போலவே 60Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் OLED பேனல்களை வழங்க வாய்ப்புள்ளது.

அதேசமயம் இரண்டு ப்ரோ மாடல்களும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் விகிதத்தை ஆதரிக்கும். iPhone 16 Pro Max மிகப்பெரிய 6.9" இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். iPhone 16 தொடரின் அனைத்து மாதிரிகளும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சத்தை உள்ளடக்கும். இருப்பினும், பயனர்கள் முழு அனுபவத்திற்காக சில மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இது எதிர்கால iOS 18.1 மென்பொருள் புதுப்பிப்பால் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இது A18 சிப் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max மாதிரிகள் A18 Pro SoC உடன் வரலாம். நான்கு மாடல்களும் குறைந்தது 8GB RAM உடன் தொடங்கும் என்று கூறப்படுகிறது, அதேசமயம் இரண்டு ப்ரோ மாதிரிகளும் 256GB சேமிப்பகத்துடன் துவங்கி 2TB வரை விரிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், iPhone 16 Pro சிறிய 3,355 mAh பேட்டரி உடன் வருகிறது.

ஆப்பிள் வாட்ச் எக்ஸ் (Apple Watch X):
iPhone 16 Pro Max பெரிய 4676 mAh பேட்டரியைக் கொண்டதாக இருக்கிறது. iPhone தொடரோடு கூடுதலாக, வளைந்த டிஸ்பிளேவுடன் Apple Watch Series X அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஒரு பிளாட் டிஸ்பிளேவுடன் Apple Series X என்று பெயரிடப்பட்ட ஒரு மாடலும் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த் வாட்ச் 42mm மற்றும் 46mm அளவுகளில் பெரிய டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

ஆப்பிள் வாட்ச் எஸ்இ மற்றும் அல்ட்ரா (Apple Watch SE & Ultra):
ஆப்பிள் மூன்றாம் தலைமுறை SE ஐ குறைந்த விலையில் பிளாஸ்டிக் பாடியுடன் அறிவிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், Apple Watch Ultra மைக்ரோ LED டிஸ்பிளே மற்றும் AI அம்சங்களுடன் இணைந்து வரலாம். Apple Watch Ultra அதன் முந்தைய பதிப்பை விட அதிக விலைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர் போட்ஸ் (AirPods):
இந்த நிகழ்வின் போது, ஆப்பிள் நான்காம் தலைமுறை ஏர்போட்ஸை வெளியிடலாம், அவை இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இரண்டு வேரியண்ட்களும் இரண்டாவது மற்றும் மூன்றாம் தலைமுறை மாதிரிகளை மாற்றும். நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் பைண்ட் மை ஆதரவு போன்ற அம்சங்கள் இருக்கலாம்.

புதிய ஆப்பிள் மேக் மினி (Apple Mac Mini):
இந்த பிராண்ட் ஆப்பிள் இன்டெலிஜென்ஸை ஆதரிக்கும் புதுப்பிக்கப்பட்ட சிப் மற்றும் அதிக RAM உடன் புதிய Mac Mini சாதனத்தை வெளியிடலாம். இவை ஊகங்கள் என்பதால், செப்டம்பர் 9 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை நாம் சற்று காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Apple Launch Event 2024 List of Products That Are Expected to Be Launch With iPhone 16 on September 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X