வைஃபை மூலம் வயர்லெஸ் சார்ஜிங்: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய முயற்சி

By Siva
|

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்து அவ்வப்போது செய்திகளாகவும், வதந்திகளாகவும் இண்டர்நெட்டில் உலாவி வரும் நிலையில் தற்போது லேட்டஸ்ட் ஆக வெளிவந்துள்ள செய்தி ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு ஐபோனில் வயர்லெஸ் சார்ஜர் இருக்கும் என்பது தான்.

வைஃபை மூலம் வயர்லெஸ் சார்ஜிங்: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய முயற்சி

வைஃபை டெக்னாலஜி மூலம் ரூட்டர் உதவியுடன் வயர்லெஸ் சார்ஜ் செய்வது குறித்து கற்பனை செய்து பாருங்கள். கற்பனைக்கே ஆச்சரியமாக இருக்கும் இந்த டெக்னாலஜியை நேரில் அனுபவித்தால் எப்படி இருக்கும்? இந்த வகையில் ஐபோனுக்கு சார்ஜ் செய்வது புதியது மட்டுமின்றி சார்ஜ் இல்லையே என்றும் எங்கே சார்ஜ் ஏற்றுவது என்று இடத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லாமலும் போகும்

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜர் குறித்து காப்புரிமைக்கு அமெரிக்காவில் பதிவு செய்துள்ளது. இதனால் இருவித அலைவரிசைகளின் மூலம் வயர்லெஸ் சார்ஜை மைக்ரோ அலைவரிசைகளின் மூலம் பெற்று கொள்ளலாம்

ஆப்பிள் நிறுவனத்தின் காப்புரிமை மேலும் கூறுவதாவது, 'மின்னணு பொருட்களின் வயர்லெஸ் சுற்றுகளில் அதாவது செல்போன், கம்ப்யூட்டர் போன்ற உபகரண்ங்களில் ஆண்டெனா மற்றும் வயர்லெஸ் டிரான்ஸீவர்கள் இருக்கும். இதன் மூலம் வயர்லெஸ் தொடர்பு ஏற்படுத்தி கொள்ளலாம். ஒருசில சாதனங்களில் இதே டெக்னாலஜியில் வயர்லெஸ் சார்ஜிங்கும் செய்து கொள்ளலாம்

நாளை முதல் எப்3 : மிரட்டலான & கொஞ்சலான செல்பீக்களுக்கு கிராண்டி.!

எனவே புதியதாக வெளிவரவுள்ள ஆப்பிள் ஐபோனில் வயர்லெஸ் பவர் உள்ள டிரான்ஸ்மீட்டர் மற்றும் சார்ஜை ஏற்றுக்கொள்ளும் ஆண்டெனா ஆகியவை அடங்கி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின்படி 700 MHz முதல் 2700 MHz வரையிலான அலைவரிசையில் சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும், லோக்கல் ஏரியா 2.4 GHz, 5 GHz என்ற லிங்கில் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைத்தொடர்பு அலைகள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பல முன்னணி டெக்னாலஜி இதழ்களின் செய்திகளின்படி இந்த வயர்லெஸ் டெக்னாலஜி விரைவில் வெளிவரும் ஆப்பிள் ஐபோன் 8 மாடலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது வெளிவந்துள்ள காப்புரிமை செய்திகளின்படி பார்த்தாலும் ஆப்பிள் ஐபோன் 8 மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் முறை வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருப்போம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple's patent filing reveal some interesting features for the upcoming iPhones.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X