Home
News

Apple-ன் கர்ஜனை: இனி எந்த கொம்பனாலும் ஐபோன் தகவலை திருட முடியாது.. வந்தாச்சு புது அம்சம்..

ஐபோன் (iPhone) என்றாலே அதிக விலை என்ற வார்த்தை தான் எல்லோரின் மனதிலும் முதலில் தோன்றும். அடுத்தபடியாக மனதில் தோன்றும் வார்த்தை என்றால் அது "பாதுகாப்பு" (Protection) என்ற வார்த்தையாக தான் இருக்க முடியும்.

அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சாதனமாக ஐபோன்கள் திகழ்கின்றனர். இருப்பினும் சில நேரங்களில் ஆப்பிள் (Apple) நிறுவனம் உறுதியான பாதுகாப்பு அம்சங்கள் கூட சில தளர்வுகளை சந்திக்க நேரிடுகின்றன.குறிப்பாக ஒரு ஐபோன் பயனர் அவருடைய ஐபோன் சாதனத்தை தொலைத்துவிடும் பொழுது பாதுகாப்பு சிக்கலை சந்திக்க நேரிடுகிறது.

Apple-ன் கர்ஜனை: இனி எந்த கொம்பனாலும் ஐபோன் தகவலை திருட முடியாது..

ஐபோன் பயனர்களுக்கு எக்ஸ்டரா பாதுகாப்பு வருகிறது (iPhone users get extra protection):

ஒருவேளை ஐபோன் திருடப்பட்டாலோ அல்லது உங்கள ஐபோன் நீங்கள் தெரியாமல் தொலைத்துவிட்டாலோ அல்லது அது வேறு ஒரு நபரின் கைகளுக்கு சென்றுவிட்டாலோ ஐபோன் பாஸ்வோர்ட்களை திறமையான திருடர்கள் சமரசம் செய்துவிடுகிறார்கள். இது ஐபோன் பயனர்களுக்கு ஒரு பெரிய சிக்கலாக இதுவரை இருந்து வந்தது.

ஆனால், இனி இந்த கவலை இல்லை. காரணம், ஆப்பிள் நிறுவனம் இப்போது அதன் ஐபோன் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. புதிய அம்சத்தின் மூலம் இனி திருடப்படும் ஐபோன்கள் மற்றும் தொலைந்துபோகும் ஐபோன்களில் இருக்கும் தகவல்களை இனி யாராலும் அணுகமுடியாது படி இரட்டிப்பு பாதுகாப்பை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஸ்டோலன் டிவைஸ் ப்ரொடெக்ஷன் மோட் (Stolen Device Protection Mode):

இந்த அம்சத்தை நிறுவனம் ஸ்டோலன் டிவைஸ் ப்ரொடெக்ஷன் மோட் (Stolen Device Protection Mode) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இது உங்கள் ஐபோன் மற்றவர் கைகளுக்கு சென்றாலோ அல்லது தொலைந்து போன போனை மற்றவர் அணுக நினைத்தாளோ, இனி ஐபோன் சாதனம் முதலில் உங்கள் போனின் பாஸ்வோர்டை கேட்கும். பிறகு, உங்கள் முக அங்கீகாரத்தை (Face ID) கேட்கும்.

இந்த இரண்டு உள்ளீடுகளை வழங்கிய பிறகு தான் ஐபோன் ஓபன் செய்யப்படும். இதன் மூலம் இனி உங்கள் ஐபோனில் உள்ள மிகவும் சென்சிடிவ் டேட்டாக்களை மற்றும் உங்கள் போனில் உள்ள தகவல்கள் பாதுகாக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய அம்சம் iOS 17.3 அப்டேட் மூலம் கிடைக்கவிருக்கிறது. இப்போது பீட்டா வெர்ஷனில் பயன்பாட்டிற்கு கிடைக்கிறது.

Apple-ன் கர்ஜனை: இனி எந்த கொம்பனாலும் ஐபோன் தகவலை திருட முடியாது..

ஐபோனின் புதிய ஸ்டோலன் டிவைஸ் ப்ரொடெக்ஷன் மோட் எப்படி செயல்படுகிறது (How iPhone's Stolen Device Protection Mode works):

சரி, இந்த அசாம் எப்படி செயல்படும் என்று பார்க்கலாமா? ஐபோனின் உரிமையாளர் இடத்தில் சாதனம் இல்லாத போது, இந்த அம்சம் தானாக ஆக்டிவேட் செய்யப்படும். ஐபோன் பயனரின் சரியான பாஸ்வோர்ட் அல்லது பேஸ் ஐடி தகவல்கள் உள்ளிடப்படாத போது, இந்த அம்சம் தானாக இது ஒரிஜினல் பயனர் இல்லை என்று கணித்துக்கொள்கிறது. இதன் மூலம் உங்கள் ஐபோன் சாதனம் ஸ்டோலன் டிவைஸ் ப்ரொடெக்ஷன் மோட்டிற்கு சென்றுவிடுகிறது.

இதன் மூலம் உங்கள் ஐபோனில் உள்ள தகவல்கள் பதுக்கப்படுகிறது. இரண்டு அங்கீகார விஷயங்களை அணுகிய பின்னர் மட்டுமே ஐபோன் தகவல்களை உரிமையாளர் கூட அணுக முடியும். வேறேதேனும் முறையால் ஐபோனை திறக்க முயன்றாலோ அல்லது பாதுகாப்பு அம்சம் சமரசம் செய்யப்பட்டாலோ, ஐபோனில் உள்ள அணைத்து தகவல்களும் பேக்டரி ரீசெட் மூலம் அழிக்கப்படும் படி, ஆப்பிள் நிறுவன ம் இந்த அம்சத்தை உருவாகியுள்ளது.

உண்மையில், இந்த அம்சம் உங்கள் ஐபோன் இல் உள்ள தகவல்களை பாதுகாக்க சிறந்த பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. இப்போது இந்த அம்சம் பீட்டா iOS 17.3 வெர்ஷனில் பயன்படுத்த கிடைக்கிறது. இதை ட்ரை செய்து பார்க்க விரும்புபவர்கள் பீட்டா வெர்ஷன் மூலம் ட்ரை செய்து பார்க்கலாம். விரைவில் இந்த அம்சம் எல்லோருக்கும் வெளியிடப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple is developing a new Stolen Device Protection mode for extra safety to stolen or lost iPhone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X