ஐபோனுக்கு ஓனர் ஆகலாமா?- அனைத்து ஐபோன் மாடல்களுக்கும் அதிரடி தள்ளுபடி!
உலகளவில் ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. என்னதான் ஸ்மார்ட்போன் பயன்படுத்தினாலும் ஐபோன் பயன்படுத்துவது என்பது பலரின் கனவாக இருக்கிறது. ஐபோன்களின் விலை என்பது எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கிறது. இருப்பினும் அவ்வப்போது அறிவிக்கப்படும் தள்ளுபடிகளானது பலரையும் ஐபோன்களை வாங்கும் விலைக்கு கொண்டு வருகிறது. அதன்படி அறிவிக்கப்பட்ட தள்ளுபடிகளை தான் பார்க்கப் போகிறோம்.

பல்வேறு மாடல்களுக்கு தள்ளுபடி
ஆப்பிள் சாதனங்களில் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் என்பது மிகவும் விலை உயர்ந்த சாதனமாக இருக்கிறது. இப்போது க்ரோமா தளத்தில் இந்த சாதனத்துக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மட்டுமின்றி ஐபோன் 13, ஐபோன் 13 மினி போன்ற வேரியண்ட்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஐபோன் 13 சீரிஸ்கள் மட்டுமின்றி ஐபோன் 12 தொடர் மற்றும் ஐபோன் 11 தொடர் சாதனங்களும் தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

Apple iPhone 13
ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தின் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ஆனது சிவப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனமானது ரூ.79,900 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இது ரூ.71,990 என கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 13 ஆனது 10% தள்ளுபடி அதாவது ரூ.7910 என்ற விலைக் குறைப்புடன் வாங்கலாம்.

Apple iPhone 12
ஐபோன் 12 சாதனத்தின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் ரூ.65,900 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.55,990 என கிடைக்கிறது. க்ரோமா இணையதளத்தில் இந்த சாதனத்துக்கு 15% தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்த சாதனத்தை சுமார் ரூ.9,910 என விலைக் குறைப்பில் வாங்கலாம்.

Apple Iphone 11
ஆப்பிள் ஐபோன் 11 சாதனமானது 64 ஜிபி இன்டர்னெல் ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி ரேம் வசதியோடு பர்பிள் வண்ண விருப்பத்திலும் கிடைக்கிறது. இந்த சாதனம் ரூ.49,900 என விற்கப்பட்ட ஐபோன் 11 தற்போது ரூ.47,990 என கிடைக்கிறது. க்ரோமா தளத்தில் 4% தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ரூ.1910 என விலைக்குறைப்புடன் இந்த சாதனத்தை வாங்கலாம்.

Apple Iphone 13 Pro Max
ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் சாதனமானது ஆல்பைன் க்ரீன் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் ரூ.159,900 என கிடைத்த நிலையில் தற்போது இது ரூ.1,45,990 என கிடைக்கிறது. இந்த சாதனத்துக்கு 9% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஆப்பிளின் சமீபத்திய சாதனமாகும். இந்த சாதனத்தை க்ரோமா தளத்தில் ரூ.13,910 என்ற தள்ளுபடியுடன் வாங்கலாம்.

Apple Iphone 13 Mini
ஆப்பிள் ஐபோன் 13 மினி சாதனமானது ரூ.79,900 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.75,990 என கிடைக்கிறது. ஐபோன் 13 மினி ஆனது 5% தள்ளுபடி விலையில் அதாவது ரூ.3910 என்ற விலைக் குறைப்புடன் கிடைக்கிறது. ஐபோன் 13 மினி வாங்கத் திட்டமிட்டிருந்தால் க்ரோமா இணையதளத்தை உடனடியாக அணுகலாம்.

Apple Iphone SE
ஆப்பிள் ஐபோன் எஸ்இ 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் சிவப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் ரூ.48,900 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இது ரூ.46,990 என கிடைக்கிறது. இந்த சாதனத்துக்கு க்ரோமா தளத்தில் 4% தள்ளுபடிகள் அதாவது ரூ.3910 என்ற தள்ளுபடி விலையில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications