ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மாடலில் உள்ள A11 பயோனிக் சிப்செட்டின் மகிமை

Written By:

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் எக்ஸ் மாடல் மிகச்சிறந்த அடுத்த தலைமுறைக்கான, அதிநவீன மாடல் என்பது அனைவராலும் ஏற்றுக்கொண்ட ஒன்று. ஒவ்வொரு நாளும் இந்த ஐபோனை பயன்படுத்தும்போது அபரீதமான ஆச்சரியத்தை தரும் வகையில் உள்ளது. குறிப்பாக பெஸல் லெஸ் OLED டிஸ்ப்ளே, புதுப்புது வகையான எமோஜிக்கள் மற்றும் AR சப்போர்ட் ஆகியவை பயனாளிகளை மகிழ்ச்சிப்படுத்துகிறது

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மாடலில் உள்ள A11 பயோனிக் சிப்செட்டின் மகிமை

இந்த புதிய ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மாடலின் முக்கிய அம்சம் இதன் சிப்செட் தான். இதில் மிக வேகமாக இயங்கும் A11 பயோனிக் சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி மற்றும் இயங்கு திறன் மிக மிக அபாரமானது. ஹார்ட்வேர்களின் தரத்தை கண்டறியும் ஜீக்பெஞ்ச் 4 என்ற டூலில் இந்த சிப்செட் குறித்து அறிந்தால் இதன் திறன் மற்ற எதற்கும் இணையாகாது என்பது புரிய வரும்

இந்த ஒரு விஷயத்தில் ஐபோன் எக்ஸ் மாடல் அதன் போட்டியாளர்களான சாம்சங் கேலக்ஸி நோட்8, சாம்சங் கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி எஸ்8பிளஸ் மற்றும் ஒன்ப்ளஸ் ஆகிய மாடகளை பின்னுக்கு தள்ளிவிடுகிறது. ஆப்பிள் ஐபோனின் புதிய பயோனிக் சிப் முன் மேற்கண்ட மாடல்கள் சிப் நிற்கவே முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட்8, சாம்சங் கேலக்ஸி எஸ்8, மாடல்களில் எக்ஸினோஸ் 8895 சிப்செட்டும், ஒன்ப்ளஸ் 5 மாடல் மற்றும் கேலக்ஸி எஸ்8 பிளஸ் மாடலில் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்டும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஜீக்பெஞ்ச் 4 என்ற டூலில் மல்டி கோர் சோதனை செய்து பார்த்ததில் ஐபோன் எக்ஸ் சிப்செட்டுக்கு 10069 புள்ளிகளும், கேலக்ஸி நோட் 8 மாடலுக்கு 6784 புள்ளிகளும் கிடைத்துள்ளது. இதே சிங்கிள் கோர் சோதனையில் ஐபோன் எக்ஸ் மாடலுக்கு 4188 புள்ளிகளும், ஐபோன் 7 பிளஸ் மாடலுக்கு 3473 புள்ளிகளும், இந்த இரண்டிற்கும் குறைவாகத்தான் சாம்சங்க் மற்றும் ஒன்ப்ளஸ் மாடல்கள் புள்ளிகளையும் பெற்றுள்ளன.

இந்த புள்ளிகள் கணக்கின்படி பார்த்தால் ஐபோன் எக்ஸ் மாடலுக்கு பக்கத்தில் கூட மற்ற மாடல்கள் நிற்க முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த போன் ஒரு தனித்தன்மை போன் என்பது உறுதியாகின்றது.

ஐபோன்களை ஒரு வழி செய்ய வருகிறது சியோமி மி 7 (லீக்ஸ் அம்சங்கள்).!

ஐபோன் எக்ஸ் மாடலின் A11 சிப்செட் மிகவும் சக்தி வாய்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டது மட்டுமின்றி இந்த போனின் மற்ற திறன்களும் பயனாளிகள் அதிசயிக்கும் வகையில் தான் உள்ளது. குறிப்பாக இதற்கு முன் எந்த ஐபோனிலும் இல்லாத வகையில் பேட்டரி சார்ஜ் நிற்கும் தன்மை இந்த மாடலுக்குத்தான் உள்ளது.

நீண்ட நேரம் பேட்டரி சார்ஜ் நிற்கும் தன்மையுடையது என்று இந்த மாடல் சோதனைகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் பயோனிக் சிபியூ நான்கு கோர்களில் அமைக்கப்பட்டுள்ளதால் ஐபோன் 7 மாடலை விட 25% அதிக வேகத்துடன் செயல்படும் தன்மை கொண்டது. மேலும் இதற்கு முந்தைய A10 சிப்செட்டை விட 70% வேகத்துடன் இயங்குகிறது.

அதேபோல் இந்த போனின் கிராபிக்ஸ் இயங்குதிறனும் முந்தைய மாடலான ஐபோன் 7 மாடலை விட 30% அதிவேகத்துடன் இயங்கும். இதனால் போனில் உள்ள கேம்கள் மற்றும் செயலிகள் வேகம் அதிகரித்து காணப்படும். இன்னொரு சந்தோஷமான விஷயம் என்னவெனில் இந்த இரண்டாம் தலைமுறை போனைபோலவே ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடலிலும் இதே தன்மை உள்ளது என்பதுதான்English summary
Apple iPhone X comes with the new and really fast A11 Bionic chipset which promises to deliver more power and performance.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot